Viral Dog Bite: சைக்கிள் ஓட்ட வீதிக்கு வந்த சிறுவனை தாக்கி கதற வைத்த தெருநாய்
Shocking Attack: நாய்கள் நன்றியுள்ளவை என்றாலும் கோபம் வந்தால் கடித்து குதறி துவம்சம் செய்யும் போது, யாரை தாக்குகிறோம் என்று பார்ப்பதில்லை
வைரல் வீடியோ: இணையத்தில் நாம் பல வித வீடியோக்களை காண்கிறோம். உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான வீடியோக்கள் தினமும் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பொதுவாக நாம் காண முடியாத பல விஷயங்களை இந்த வீடியோக்களில் நாம் காண்கிறோம். அருகில் சென்று பார்க்க முடியாத விலங்குகளின் பல அரிய தருணங்களை இவற்றில் கண்டு மகிழ்கிறோம். இணையத்தில், பாம்பு, சிங்கம், குரங்கு, யானை ஆகிய விலங்குகளுக்கு அதிக மவுசு உள்ளது. இருந்தாலும், நாம் தினமும் சந்திக்கும் நாய்களின் குறும்புகளும், தாக்குதல்களும் தவிர்க்க முடியாதவை. அப்படி ஒரு தெருநாயின் வீடியோ அனைவரையும் உச்சு கொட்ட வைக்கிறது.
விலங்குகளில் மிகவும் நன்றியுள்ளவை என்று பெயர் பெற்றவை நாய்கள். அவை பாசத்துக்கு பெயர் போனவை என்றாலும், தாக்குதலுக்கும் தயங்காதவை. கோபம் வந்தால் கடித்துக் குதறிவிடும். நாய்கள் கடிப்பதற்கு காரணம் எதுவுமே தேவையில்லை என்று தோன்றச் செய்யும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகிறது.
மேலும் படிக்க | என்னை பிளான் பண்ணி சிக்க வைச்சிட்டீங்களே! சீறும் முதலையை வேட்டையாடும் இளைஞர்
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிறது. சிறுவன் வீட்டில் இருந்து சைக்கிளில் கிளம்பும்போது, திடீரென வந்து பாய்ந்து கடித்து குதறும் வீடியோ அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்கிறது. சிறுவனுடன் அவனை விட வயதில் குறைந்த குழந்தை ஒன்றும் வெளியே வருகிறது.
நாயின் தாக்குதலைப் பார்த்த அந்தக் குழந்தை உள்ளே ஓடுவதை வீடியோவில் காண முடிகின்றது. அந்தக் குழந்தையை பின் தொடர்ந்து வெளியில் வந்த மற்றொரு சிறுவனும் உள்ளே ஓடிவிட்டான். பாவம் சைக்கிள் சவாரி செய்ய முயன்ற சிறுவனின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது.
மேலும் படிக்க | பாய்ந்து வந்து கட்டிக்கொண்ட பெண் சிங்கம்: பாசமா, பகையா? வியக்க வைக்கும் வைரல் வீடியோ
தாக்கும் நாய் சிதறியோடும் சிறுவர்கள்
தாக்கும் விலங்குகளின் அபாயத்தை காட்டும் இந்த வீடியோவில், திடீரென எதிர்பாராத நேரத்தில் பாய்ந்து அட்டாக் செய்யும் தெருநாயின் தாக்குதலில் நிலைகுலையும் சிறுவனின் அவலநிலை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. சில விநாடிகள் மட்டுமே செல்லும் இந்த வீடியோ, தெருவில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது.
தாக்குதல் நடத்தும் நாயிடம் இருந்து பல கடிகளையும் கீறல்களையும் வாங்கிய சிறுவன், எப்படியோ தப்பித்து வீட்டிற்குள் ஓடுகிறான். அதைப் பார்த்ததும் தான் ஆசுவாசம் ஏற்பாடுகிறது.
மேலும் படிக்க | பதுங்கிப் பாயும் புலி! கடைசி நிமிடத்தில் எஸ்கேப் ஆன தோகைமயில்! பெண் மயில்களின் நிலை?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ