சிவகார்த்திகேயனின் டாக்டர்; முக்கிய தகவலை வெளியிட்ட படக்குழு
டாக்டர் படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். நெல்சன் இயக்கி உள்ள இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடித்துள்ள இந்த படத்தில் அவருடன் இணைந்து யோகிபாபு, வினய் என பலர் நடித்துள்ளனர். மேலும் டாக்டர் (Doctor) திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ALSO READ | டாக்டர் ரிலீஸ் குறித்து வெளியான புதிய தகவல்; படக்குழு முக்கிய முடிவு
இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படம் வரும் மார்ச் 26ஆம் தேதி ரிலீசாகும் என படக்குழு அறிவித்தது. ஆனால் தேர்தல், கொரோனா இரண்டாவது அலை போன்ற காரணங்கள் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு டாக்டர் திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர்.
இந்நிலையில் பல வந்ததிகளை கடந்த தற்போது டாக்டர் திரைப்படம் வருகிற அக்டோபர் 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து பதிவிட்டுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், அக்டோபர் 9 முதல் தியேட்டரில் என்ற டாக்டர் போஸ்டருடன் தியேட்டரில் சந்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, சிவாங்கி, பால சரவணன், ராமதாஸ், காளி வெங்கட், மிர்ச்சி விஜய் என பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ் அப்டேட், தயாரிப்பாளர் அறிக்கை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR