வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்புகளின் பல வீடியோக்கள் தினம் தினம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. நாம் எதிர்பாராத பல இடங்களில் பாம்புகள் ஒளிந்துகொண்டிருப்பதை கண்டு நாம் ஆச்சரியப்பட்ட நிகழ்வுகளும் உண்டு. ஸ்கூட்டி, காலணிகள், ஏன் கழிப்பறைகளில் கூட பாம்புகள் ஒளிந்துகொண்டு பாடாய்படுத்துவதுண்டு. 


ஆனால், தற்போது பகிரப்பட்டுள்ள வீடியொ நம்மை நடுங்க வைக்கும் வகையில் உள்ளது. ஒரு வீட்டின் படுக்கையறையில் பாம்பு ஒளிந்து இருப்பது தெரிய வருகிறது. பாம்பை பார்த்ததும் குடும்பத்தினர் பீதியின் உச்சத்திற்கே சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க | ‘அட... இதக்கூடவா சாப்பிடுவ?’: பொல்லாத பாம்பை காப்பாற்றிய நபர், வைரல் வீடியோ 


மெத்தையில் மறைந்திருக்கும் பாம்பு


பாம்பை பார்த்தாலே அனைவரும் அந்த இடத்திலிருந்து ஓட்டம் எடுக்கவே எண்ணுவார்கள். இந்த  வீடியோவில் காணப்படும் பாம்பும் அனைவரையும் அச்சப்படுத்தும் வண்ணம் மிக பெரியதாக உள்ளது. அறையின் உள்ளே சுவருடன் ஒட்டிய நிலையில் ஒரு கட்டில் இருப்பதையும் அதற்கு சற்று மேலே ஒரு ஜன்னல் இருப்பதையும் வீடியோவில் காண முடிகின்றது. ஜன்னல் வழியாக பாம்பு வீட்டிற்குள் நுழைந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. குடும்ப உறுப்பினர்கள் மெத்தையைத் தூக்கி, அதில் பாம்பு சுருண்டு அமர்ந்திருப்பதை வீடியோவில் காட்டுகிறார்கள். 


பெட்ரூமில் பதுங்கிய பாம்பின் வீடியோவை இங்கே காணலாம்:



இந்த காட்சியை பார்த்து சமூக வலைதளவாசிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு ரியாக்ஷன்களை அளித்து வருகிறார்கள். இந்த வீடியோ __mallugram என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | Thirsty Snake: தண்ணி போடும் பாம்பு! தீராத தாகத்தை தணிக்கும் பாம்பு வீடியோ வைரல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ