பாம்பின் மரமேறும் சாகச வீடியோ: இப்படித்தான் மரம் ஏறனும்
ஆபத்தான விலங்குகள் மற்றும் பறவைகளின் செய்திகளும் வீடியோக்களும் பிரபலமாகின்றன. அதிலும் பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்றால் சாதாரண மனிதர்கள் எம்மாத்திரம்?
ஆபத்தான விலங்குகள் மற்றும் பறவைகளின் செய்திகளும் வீடியோக்களும் பிரபலமாகின்றன. அதிலும் பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்றால் சாதாரண மனிதர்கள் எம்மாத்திரம்?
பாம்புகள் எப்போதுமே அச்சத்தையும் ஆச்சரியத்தையும் தருபவை. அண்மைக் காலத்தில், சமூக வலைதளங்களில் பாம்புகளின் வீடியோ வைரலாவதற்கும் இதுவே காரணம்.
பாம்பு பால் குடித்து அமைதியாக சென்றாலும் சரி, அது தீவிரமாக சண்டை போட்டாலும் சரி, நடித்தாலும் சரி, பறந்தாலும் சரி, வித்தியாசமான பாம்பு வீடியோக்கள் வைரலாகின்றன.
இந்த வீடியோவும் அப்படித்தான் இணையதளங்களில் அதிகம் வைரலாகிறது. மலைப்பாம்பு ஒன்று மரத்தில் ஏறுவது பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது.
மேலும் படிக்க | ஆட்டுக்கும் மயிலுக்கும் ‘சில்லுனு ஒரு சண்டை’, சிரிக்கும் நெட்டிசன்கள்: வைரல் வீடியோ
மலைப்பாம்பு அங்கும் இங்குமாக நகர்ந்து ஊர்ந்து செல்வது அது வழுக்கிக் கொண்டு மேலே செல்வதுபோல இருக்கிறது. நீண்டு உயர்ந்த மரத்தில் மாபு ஏறும் விதம் பார்க்கப் பார்க்க பரவசம் தருகிறது. இந்த வீடியோவும் நெட்டிசன்களால் பெரிதும் விரும்பப்பட்டு சில மணி நேரத்தில் அதிக லைக்குகளை குவித்துள்ளது.
காணொளியின் தொடக்கத்தில் மலைப்பாம்பு காட்டில் அங்கும் இங்குமாக ஊர்ந்து சென்றுக் கொண்டிருந்தது. திடீரென கண்ணில் பட்ட ஒரு மரத்தில் ஏறத் தொடங்கிவிட்டது.
பாம்பு மரம் ஏறுவது வித்தையாக மட்டுமல்ல வித்தியாசமாகவும் இருக்கிறது. முதலில் உடலின் ஒரு பகுதியை மட்டுமே மேலே ஏற்றிய பிறகு அந்த பகுதியை அப்படியே வைத்துக் கொண்டு, அடுத்த பகுதியை மேலே ஏற்றி அதை சுருட்டி வைத்துக் கொள்கிறது.
வழுவழுவென்று இருக்கும் பாம்பு, எப்படி மரத்தை பிடிமானமாக பிடித்துக் கொள்கிறது என்ற ஆச்சரியமான கேள்விக்கு இந்த செயல் பதிலளிப்பதாக இருக்கிறது.
பிடிமானத்திற்கு உடலின் பாதியை சுருட்டி கெட்டியாக சுற்றிக் கொண்டு, அதன்பிறகு மீண்டும் உடலின் முன்பகுதியை மேலே ஏற்றுகிறது.
மேலும் படிக்க | மலைப்பாம்பா இருந்தா மலைச்சு போயிடுவேனா: கடித்துக் குதறும் முதலை
சரசரவென ஏறும் இது சாரைப்பாம்பா இல்லை என்ன வகைப் பாம்பு என்பது தெரியவில்லை. ஆனால் பாம்புக்கு படமெடுக்க மட்டுமல்ல, மலையேறவும் நன்றாகவேத் தெரியும் என்பதையும் உணர்த்தும் வீடியோ இது.
சரி இந்தப் பாம்பு மரத்தின் மீது ஏறி என்ன செய்யும்? பாம்பின் வீடு மரத்தின் மேலேயா இருக்கிறது? இல்லையே! வாழ்க்கையையே பொழுதுபோக்காக வைத்திருக்கும் விலங்குகளின் வாழ்க்கை சுவராசியமானது.
மனிதர்களைப்போல இலக்கு வைத்து, போட்டிப்போட்டு முன்னேறி முதலிடம் பிடிப்பதே வாழ்வதே வாழ்க்கை என்று நினைக்கும் நம்மைப் போல இல்லை இந்த காட்டில் வாழும் ஜீவராசிகள்.
காட்டில் தங்கள் விருப்பம்போல் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. இது கட்டுப்பாடுகளும் எல்லைகளும் வகுத்திருக்கும் ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு அதிசயமாக இருக்கிறது.
மேலும் படிக்க | போரை நிறுத்துங்கள் மழலையின் கெஞ்சல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe