வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சிலர் செய்யும் படு வினோதமான வீடியோக்களை நாம் அவ்வப்போது இணையத்தில் காண்கிறோம். தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீபாவளி உற்சாகத்தில், நாடே மூழ்கியிருக்கும் நேரத்தில், முதியவர் ஒருவர் ராக்கெட் பட்டாசுகளை வினோத விதத்தில் கொளுத்தும் வீடியோ சமூக ஊடக தளங்களில் கலக்கி வருகிறது. சமூக ஊடக உலகில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை தீபாவளிக்கு முன்னதாக இந்திய வன சேவை (IFS) அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்தார். நந்தாவின் வீடியோ பதிவு, "நாசாவின் நிறுவனர் நிச்சயமாக இந்தியாவைச் சேர்ந்தவர்" என்ற தலைப்புடன் பகிரப்பட்டது. 


இந்த வீடியோவை பார்த்தால் நம் கண்களையே நம்மால் நம்ப முடியாது. ஒரு நபர், தனது வாயில் சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு, அந்த சிகரெட்டைப் பயன்படுத்தி பல ராக்கெட்டுகளை சில நொடிகளில் ஏவி விடுவதைக் காண முடிகின்றது. 


மேலும் படிக்க | பல் தேய்க்கும்போது இந்த பந்தா தேவையா? பாம்புடன் சிறுமி அடிக்கும் லூட்டி, வைரல் வீடியோ


ஒரு நபர் ஒரு சாலையின் நடுவில் நிறுகொண்டு 20 வினாடிகளில் 11 ராக்கெட்டுகளை மேலே விடுவதை வீடியோவில் காண முடிகின்றது. இந்த செயல் மிகவும் ஆபத்தானது என்றாலும், தீக்காயம் ஏற்படக்கூடும் என்ற அச்சம் துளியும் இல்லாமல், அந்த நபர் அட்டகாசமாக ராக்கெட்டுகளை சிகரெட் கொண்டு பற்ற வைப்பது காண்பதற்கு வியப்பை அளிக்கின்றது. 


சிகரெட்டில் ஸ்டைல் காட்டும் முதியவரின் வீடியோவை இங்கே காணலாம்: 



இந்த வீடியோ சுமார் 984K வியூஸ்களைப் பெற்றுள்ளது. அசாதாரண விதத்தில் ராக்கெட் பட்டாசுகளை ஏற்றும் முய்தியவரின் பாணி, இணையவாசிகளை வியக்க வைத்துள்ளது. இதற்கு நெட்டிசன்கள் ஏகப்பட்ட லைக்குகளை அளித்து வருகிறார்கள். மேலும், இவரது இந்த மாஸ் ஸ்டைலை பார்த்து இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகின்றனர். 


பயனர்கள் இந்த நபருக்கு தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பல பெயர்களையும் அளித்து வருகின்றனர். இவர் சிகரெட் பிடிக்கும் ஸ்டைலை பார்த்து இவரை சிலர் 'ரஜினிகாந்த்' என அழைத்தார்கள். சிலர் இவருக்கு 'ராக்கெட்மேன்' என பெயர் வைத்துள்ளார்கள். 'இவருக்கு, இஸ்ரோ-வில் வேலை கிடைக்க வேண்டும்' என்று சிலரும், 'இவரை ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலோன் மஸ்குக்கு அறிமுகம் செய்து வையுங்கள்' என சிலரும் கூறி வருகிறார்கள். 


இந்த தேதியிடப்படாத வீடியோ முதல் முறையாக வைரலாகவில்லை. அறிக்கைகளின்படி, இந்த முதியவர் அவரது ஸ்டண்ட் மூலம் சில வருடங்களுக்கு முன்பும் பிரபலமானார்.


மேலும் படிக்க | ‘ப்பா..என்னா டிராபிக்கு’: சாலையை கடக்க தவிக்கும் பாம்பு, சிரிக்கும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ