’யாரு கிட்ட மோத வர்ற’ காரை நார்நாராய் பிய்த்த முதலை வீடியோ வைரல்

முதலை ஒன்று ஆக்ரோஷமாக கார் ஒன்றை நார்நாராய் பிய்த்து எரியும் வீடியோ இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 23, 2022, 09:17 AM IST
  • முதலை வீடியோ இணையத்தில் வைரல்
  • கார் ஒன்றை நார்நாராய் கிழித்துவிட்டது
’யாரு கிட்ட மோத வர்ற’ காரை நார்நாராய் பிய்த்த முதலை வீடியோ வைரல் title=

நீரிலும் நிலத்திலும் வாழும் முதலை மிகவும் ஆக்ரோஷமான கொடிய விலங்கும் கூட. அவற்றின் தாக்குதல் நரியை விட தந்திரமாகவும், கணப்பொழுதிலும் அரங்கேறிவிடும். நீருக்குள் தன் இருப்பை காட்டிக் கொள்ளாமலேயே வேட்டையாடுவதில் கில்லாடி முதலை. நிலத்தைக் காட்டிலும், அதனுடைய பலமே நீர் தான். காட்டுக்குள் ராஜாங்கம் செய்யும் சிங்கம், புலி, சிறுத்தை கூட, முதலையின் ராஜாங்கமான தண்ணீரில் பயந்து கொண்டு செல்ல வேண்டும். எப்போது எப்படி தாக்கும் என்றே தெரியாது. 

மேலும் படிக்க | பீடியில் ராக்கெட்டுகளை ஏவும் பட்டாஸ் தாத்தா: வைரல் வீடியோ

இரைக்காக தாக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், புலி, சிறுத்தை என்ற வேறுபாடெல்லாம் அதற்கு கிடையாது. தண்ணீர் குடிக்க வரும்போது நொடியில் காத்திருந்து தாக்கி நீருக்குள் எடுத்துச் சென்றுவிடும். அப்படியான முதலையின் கோபத்தை நீங்கள் எப்போதாவது அரிதிலும் அரிதாக நிலத்தின் மீது பார்க்க முடியும். அப்படியான வீடியோ ஒன்று தான் இப்போது இணையத்தில் வைரலாகியிருக்கிறது. முதலையிடம் சேட்டைக்காக காரை கொண்டு நிறுத்தி விளையாட்டு காட்டியவர்களின் காரை நார்நாராய் நொடியில் பிய்த்து எறிந்துவிட்டது முதலை. 

இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. Nature_ls_Weird என்ற டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோ 14 நொடிகள் மட்டுமே இருக்கிறது. அந்த வீடியோவில் கோபத்துடன் இருக்கும் முதலைக்கு அருகில் கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் நெருங்குகிறது. அப்போது அந்த முதலை கோபத்தின் உச்சத்துக்கே சென்று காரின் பாகங்களை நார்நாராய் பிய்த்து எறிகிறது. இந்த வீடியோவை இதுவரை டிவிட்டர் தளத்தில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். 

மேலும் படிக்க | முதலையுடன் மைண்ட்கேம் ஆடிய கோழி: பல்பு வாங்கிய முதலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News