உலகில் இருக்கும் பாம்பு இணங்களிலேயே மிகவும் பழமையானதாவும் தொன்மையானதாவும் கருதப்படுகிறது, ராஜநாகம். ஆசிய கண்டத்திலேயே மிகவும் விஷம் வாய்ந்த பாம்பு இதுதான் என கூறப்படுகிறது. இதைப்பார்த்தாலே பலரும் நடுங்குவர். ஆனால் சிலரோ ரீல்ஸ் மோகத்திற்காக உயிருக்கு அஞ்சாமல் பாம்புகளை சீண்டி வருகின்றனர். அப்படி ஒரு இளைஞர் செய்த செயல்தான் தற்போது வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜநாகம்:


ஊர்வன விலங்குகள் மத்தியில் மிகவும் கொடிய விஷத்தன்மையுடையது பாம்பு. இதன் மீது பலர் பயமும் மறியாதையும் வைத்துள்ளனர். ஆசியாவை பொறுத்தவரை நாக வகைகளுக்கே தலைமையாக விளங்குவது ராஜ நாகம்தான். இவற்றிற்கு கோபம் வந்தால் மட்டுமே ஒருவர் மீது தாக்குதல் நடத்தும். ஒரு இளைஞர், தனது ரீல்ஸ் ஆசைக்காக ஒரு ராஜ நாகத்தை சீண்டி வீடியோவை வெளியிட்டுள்ளார். இது பலரது கண்டனங்களுக்கு இடையே வைரலாகி வருகிறது. 


மேலும் படிக்க | எருமைகள் மீது நாயின் சூப்பர் சவாரி.. சொக்கிப்போன நெட்டிசன்ஸ்: வேற லெவல் வைரல் விடியோ


வைரல் வீடியோ:


பிரபலமான சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பல வீடியோக்கள் வைரலாவதுண்டு. அதில், @d_shrestha10 எனும் பிரபலமான ஒருவரின் பதிவில் உள்ள ரீல்ஸ் வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. 



இந்த வீடியோவில் இருக்கும் நபர் பெரிய அடி ராஜ நாகத்தின் அருகில் செல்வது போலவும் வெறும் கையால் அந்த நாகத்தை பிடிப்பது போலவும் காண்பிக்கப்பட்டுள்ளது. முதலில் அவரின் பிடியில் இருந்து அந்த நாகம் தப்பிக்க முயற்சிக்கிறது. அவர், பயமே இல்லாமல் அந்த நாகத்தை மீண்டும் மீண்டும் சீண்டுகிறார். இறுதியில் கோபம் கொள்ளும் அந்த நாகம் படம் எடுத்து அவர் மீது தாக்குதல் நடத்துகிறது. அந்த நாகத்தின் தாக்குதலில் இருந்து இளைஞர் லாவகமாக தப்பிக்கிறார். இப்படியே சில விநாடிகள் நடக்கிறது. நாகம் எத்தனை முறை இவரை தாக்க முயற்சித்தாலும் இவர் மீண்டும் மீண்டும் அதிலிருந்து தப்பிக்கிறார். இப்படியே அந்த வீடியோவும் முடிகிறது. 


ஆபத்தை உணராமல்..


ராஜ நாககங்கள் ஒரு போடு போட்டாலே போதும், கடிப்பட்ட ஆள் அந்த ஸ்பாட்டிலேயே அவுட் ஆகி விடுவார் என கூறுவார்கள். இவற்றின் பற்கள்  அந்த அளவிற்கு வலிமை உடையதாக இருக்குமாம். ஆனால், ‘சிவனே’என்று சென்று கொண்டிருந்த அந்த பாம்பை, மீண்டும் மீண்டும் சீண்டி வீடியோ எடுத்த அந்த இளைஞர், அதன் பிடியில் இருந்து தப்பி விட்டார். அவர், நாகம் அவ்வாறு தன் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்பதற்காகவே இந்த செயலில் ஈடுபட்டிருந்தது போல தெரிவதாக வீடியோவை பார்த்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர் ஆபத்துகளை உணராமல் இவ்வாறு செய்தது பலருக்கு தவறான எடுத்துக்காட்டாக இருப்பதாகவும் சிலர் கருத்துகளை தெரிவித்தனர். 


கொதித்தெழுந்த நெட்டிசன்கள்:


அந்த இளைஞரின் வீடியோ சுமார் 1.5 ஆயிரம் லைக்ஸ்கள் மற்றும் பல ஆயிறம் வியூஸ்களுடன் இணையத்தில் வட்டமடித்து வருகிறது. இதனால் தனக்கு புகழ் கிடைக்கும் என்று நினைத்த அந்த இளைஞருக்கு மாறாக செம பூசை கிடைத்துள்ளது. இளைஞரின் இந்த பொறுப்பற்ற செயலுக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 
சிலர், ‘அந்த நாகத்தினால் யாருக்கும் ஆபத்து இல்லை..இது போன்ற மனிதர்களால்தான் எல்லோருக்கும் ஆபத்து..” என்று கூறி வருகின்றனர். 


மேலும் படிக்க | ரன்னிங்கில் இறங்கி மாஸ் காட்டும் நாய்: மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ