எருமைகள் மீது நாயின் சூப்பர் சவாரி.. சொக்கிப்போன நெட்டிசன்ஸ்: வேற லெவல் வைரல் விடியோ

Funny Dog Ride Video: ஆச்சரியமூட்டும் வீடியோ ஒன்று தற்போது பகிரப்பட்டுள்ளது. இதை பார்த்தால் நம் கண்களையே நம்மால் நம்ப முடியவில்லை.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 29, 2023, 09:47 AM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் @PChaudhry_ என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து 9 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களையும் 8,000 க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது.
  • இந்த கிளிப் இன்ஸ்டாகிராம் போன்ற பிற சமூக ஊடக தளங்களிலும் பகிரப்பட்டுள்ளது.
எருமைகள் மீது நாயின் சூப்பர் சவாரி.. சொக்கிப்போன நெட்டிசன்ஸ்: வேற லெவல் வைரல் விடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

சமூக ஊடகங்களில் விலங்குகள் பற்றிய வீடியோக்களை மக்கள் விரும்பி பார்க்கிறார்கள். குறிப்பாக இவற்றில் நாய், பூனை, பாம்பு, குரங்கு, புலி, சிங்கம் போன்ற மிருகங்களுக்கு இணையத்தில் அதிக மவுசு உள்ளது. இவற்றின் சேட்டைகளும் சில்மிஷங்களும் இணையவாசிகளை அதிகம் கவர்கின்றன. குறிப்பாக, இவை செய்யும் சில வினோத செயல்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. 

அப்படி ஆச்சரியமூட்டும் வீடியோ ஒன்று தற்போது பகிரப்பட்டுள்ளது. இதை பார்த்தால் நம் கண்களையே நம்மால் நம்ப முடியவில்லை. இதில் நாம் காணும் காட்சி மிக வித்தியாசமாகவும் வேடிக்கையாகவும் உள்ளது. 

வீடியோவில் காணப்படும் விசித்திரம்

ஒரு நாய் மற்றும் இரு எருமைகளின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. வீடியோவில் தெரு நாய் ஒன்று அழகாக இரண்டு எருமைகளின் மீது நின்று அட்டகாசமாக சவாரி செய்வதை காண முடிகின்றது. அந்த நாய் படங்களில் வரும் மாஸ் ஹீரோக்களை போல போஸ் கொடுக்கிறது. ஒரு காலை ஒரு எருமை மீதும் மற்றொரு காலை மற்றொரு எருமை மீதும் வைத்து அந்த நாய் மிக அழகாக சமநிலை தவறாமல் பொறுமையாக பதட்டப்படாமல் சவாரி செய்கிறது. இது காண்பதற்கு மிக ஆச்சரியமாக உள்ளது.

ஈடு கொடுக்கும் எருமைகள்

நாய் அற்புதமாக சவாரி செய்கிறது என்றால் எருமைகள் அதற்கு மிக அழகாக ஒத்துழைக்கின்றன. இரண்டு எருமைகளும் சீரான வேகத்தோடு நடந்து சென்று நாயின் சவாரிக்கு உறுதுணையாக அமைகின்றன. நாயை பத்திரமாக அழைத்துச்செல்வது மட்டுமே தங்கள் நோக்கம் என்பது போல அவை நடக்கின்றன. 

மேலும் படிக்க | ’ஏலே ஒலிம்பிக் வச்சா நீ தாம்ல பர்ஸ்டு பிரைஸூ’ மானின் அட்டகாசமான லாங் ஜம்ப் வீடியோ வைரல்

இணையத்தில் அடிக்கடி ஏராளமான வீடியோக்கள் வெளிவருகின்றன. இவற்றில் மனிதர்கள் நாய்களுடன் விளையாடுவது அல்லது விலங்குகளுக்கு உணவளிப்பது என்பது போன்ற பல வீடியோக்களை நாம் பார்த்துள்ளோம். ஆனால், அவற்றுக்கு மத்தியில், இந்த குறிப்பிட்ட வீடியோ மிக வித்தியாசமாக உள்ளது. ஒரு நாயின் மகிழ்ச்சியான, பெருமையான தருணத்தின் சாட்சியாகவும், விலங்குகளுக்கு இடையில் இருக்கும் இணக்கத்தின் சாட்சியாகவும் இந்த வீடியோ உள்ளது. வழக்கமாக விலங்குகளுக்கு இடையில் காணப்படும் வன்முறையோ, சண்டையே, எதையும் இதில் காண முடியவில்லை. மாறாக, இந்த விலங்குகளுக்கு இடையில் நல்ல புரிதலே காணப்படுகின்றது. 

அந்த அற்புதமான வீடியோவை இங்கே காணலாம்: 

வீடியோ இணையத்தில் வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் @PChaudhry_ என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து 9 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களையும் 8,000 க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த கிளிப் இன்ஸ்டாகிராம் போன்ற பிற சமூக ஊடக தளங்களிலும் பகிரப்பட்டுள்ளது. அங்கு அது 16 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களைப் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | பரவச உலகில் இருந்தவரின் பேன்டில் புகுவதற்குபோன நாகப்பாம்பு: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News