யாராவது பொய்யாக அழுகிறார்கள் என்றால் அவர்களை “முதலை கண்ணீர் வடிக்காதே..” என கூறி கேட்டிருப்போம். காரணம், முதலைகள் பிற விலங்குகள் போல அல்ல.. இவற்றிற்கு பிறரை புரிந்துணரும் திறனோ, “பாவம் போனால் போகட்டும்” என்று விட்டுவிடும் குணமோ இல்லை. ஒரு இரையின் மீது கண் வைத்துவிட்டால், பசிக்கிறதோ இல்லையோ, அதை சாப்பிடாமல் தூங்கவே தூங்காத ஜீவராசிகள் அவை. அப்படிப்பட்ட ஒரு முதலையை, முதுகில் தடவிக்கொடுத்த நபர் ஒருவருக்கு பெரிய கிஃப்ட் கிடைத்திருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைரல் வீடியோ:


தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில் இருப்பது, பெரிய முதலை எல்லாம் கிடையாது. ஒரு முதலை குட்டிதான். ஆற்றங்கரை அருகே அது சும்மா நின்றிருக்க, செல்போனுடன் அதன் அருகில் செல்லும் நபர், அதன் முதுகில் தடவி கொடுக்கிறார். யாரோ தடவிக்கொடுக்கிறாரே என உஷார் ஆன அந்த முதலை, கண் இமைப்பதற்குள் அந்த நபரின் கையை கவ்வி விடுகிறது.



காண்பவர்களை, கண நேரத்தில் பயமுறுத்தும் ஜம்ப் ஸ்கேர் வீடியோவாக இந்த க்ளிப்பிங் வைரலாகி வருகிறது. இந்த முதலை வகையின் பெயர், Gharial என கூறப்படுகிறது. இதை பதிவிட்டிருப்பவர், “தயவு செய்து இவைகளை தடவிக்கொடுக்க வேண்டாம்” என்று கூறி இருக்கின்றார். 


மேலும் படிக்க | பாம்பு கடித்ததால் விஷமாக மாறியதா தக்காளி? வைரலாகும் வீடியோ - உண்மை என்ன?


இந்த வகை முதலைகள் குறித்து கவனிக்க வேண்டியவை:


  • இவைகளின் பற்கள் ஒன்றுடன் ஒன்று பிண்ணி பிணைந்தது போல இருக்குமாம். அப்போதுதான் இவைகளால் தனது இரையை லாவகமாக பிடிக்க முடியுமாம். 

  • இவை, 20 அடி வரை இருக்குமாம். ஆனால் இந்த இனத்தின் பெண் இனம், ஆண் இனத்தை விட சிறியதாக இருக்குமாம். 

  • இவை தூய நீரில் மட்டுமே இருக்குமாம். மேலும், ஓடும் நீரில் வாழ்வதால் இவை சீக்கிரமாக வளர்ந்து விடுமம், 

  • இவை அதிகமாக சாப்பிடும் உணவு, மீன்கள்.

  • ஒரு இனப்பெருக்க காலத்தில், இவைகளால் 20 முதல் 50 முட்டை வரை போட முடியுமாம்.


மேலும் படிக்க | பளார்!! ஒரே அடி... பூனைக்கு பயந்து ஓடிய பாம்பு: பட்டையை கிளப்பும் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ