Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. 


சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் (Snake Video) இணையத்தை கலக்கி வருகின்றன. 


அந்த வகையில், ஒரு மலைப்பாம்பு மற்றும் ஒரு சிறுவனின் வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றது. இந்த வீடியோவில் ஒரு சிறுவன் ஒரு மலைப்பாம்பை பிடித்து அதை மாலையாக அணிந்து கொள்கிறார். அவன் அதை பிடித்த இடம்தான் இன்னும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. ஆம்!! அந்த சிறுவன் அந்த மலைப்பாம்பை நீர் நிறைந்த ஒரு ஏரியிலிருந்து பிடிக்கிறான்.


வீடியோவின் (Video) துவக்கத்தில், ஒரு மலைப்பாம்பு ஏரி ஒன்றுக்குள் செல்வதைக் காண்கிறோம். பின்னர், ஒரு சிறுவனும் அந்த ஏரிக்குள் குதித்து, அந்த மலைப்பாம்பை பிடிக்கிறான். பின்னர் அதை ஒரு லாவகமாக தன் பிடிக்குள் கொண்டு வந்து ஒரு மாலிஅயைப் போல் அணிந்துகொள்கிறான்.


ALSO READ: Viral Video: உணவாக வந்த எலியை உறவாக்கிய பாம்பு: பாராட்டி மகிழும் ரசிகர்கள் 


இந்த வீடியோவைப் பார்க்கும் பலருக்கு, பாம்பு அந்த சிறுவனை ஒன்றும் செய்து விடக் கூடாதே என்ற பதட்டம் ஏற்படுகிறது. ஆனால், அந்த சிறுவனிடம் எந்த பதட்டத்தையும் காண முடியவில்லை. பாம்பும் அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடுவதைப் போலவே தோன்றுகிறது. 


சில நொடிகளே கொண்ட இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால், இந்த வீடியோவில் நடப்பதைப் பார்த்து நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.


அந்த வைரல் வீடியோவை இங்கே காணலாம்:



வைரலாகும் இந்த வீடியோ (Viral Video) சமூக ஊடக தளமான Instagram இல் royal_pythons என்ற பக்கத்தால் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகின்ற்னர். 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதை லைக் செய்துள்ளனர். 


ALSO READ: Viral video of Python: தென்னை மரத்தில் மிக லாவகமாக ஏறும் மலைப்பாம்பு..!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR