Viral Video: உணவாக வந்த எலியை உறவாக்கிய பாம்பு: பாராட்டி மகிழும் ரசிகர்கள்

பாம்பையும் எலியையும் காண்பதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? இதில் நடக்கும் ஒரு விஷயம் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 11, 2021, 04:43 PM IST
Viral Video: உணவாக வந்த எலியை உறவாக்கிய பாம்பு: பாராட்டி மகிழும் ரசிகர்கள்  title=

Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். சமீப காலங்களில் பல வித விலங்குகளின் வீடியோக்கள் (Animal Video) இணையத்தை கலக்கி வருகின்றன. 

அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது வைரல் (Viral Video) ஆகி வருகின்றது. இந்த வீடியோவில் ஒரு பாம்பையும் எலியையும் நாம் காண முடிகின்றது. பாம்பையும் எலியையும் காண்பதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? இதில் நடக்கும் ஒரு விஷயம் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றது. அதோடு நமக்கு இதைக் கண்டவுடன் ஆச்சரியமும் ஏற்படுகின்றது.

சில நொடிகளே கொண்ட இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு வெள்ளை வண்ண எலி, பயங்கரமான ஒரு பாம்பின் (Snake) முன், அதன் உணவாக வீசப்படுகின்றது. ஆனால், இதன் பின்னர் இந்த வீடியோவில் நடப்பதைப் பார்த்து நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

ALSO READ:Viral Video: டேய் ஓடாத, நில்லு.. வடிவேலு ஸ்டைலில் மாஸ் காட்டும் கோழி, ஓட்டம்பிடித்த சிறுவன் 

தன் முன்னால், தனக்கு உணவாக வந்த எலியை உண்ணாமல், பாம்பு அதனுடன் விளையாட ஆரம்பிக்கிறது.

சுண்டெலியும் பாம்பின் தலையில் அமர்ந்து விளையாடத் தொடங்கியதைக் காண முடிகின்றது. எலி சில சமயம் பாம்பின் வாலைப் பிடிப்பதையும், சில சமயம் கழுத்தில் தொங்குவதையும் காண வேடிகையாக உள்ளது. இதை பார்ப்பவர்கள் அனைவருக்கும் பலத்த சிரிப்புதான் வருகிறது.

அந்த கியூட்டான வீடியோவை இங்கே காணலாம்:

வைரலாகும் இந்த வீடியோ சமூக ஊடக தளமான Instagram இல் royal_pythons என்ற பயனரால் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதை லைக் செய்துள்ளனர்.

ALSO READ:Viral Video: 'அடிப்படையில் நிர்வாணமாக' இருந்த பெண் அணிந்திருந்த உடை இது! வைரலாகும் வீடியோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News