மிதுன ராசியில் சுக்கிரன் பரிவர்த்தனையாவதால், ராசிமண்டலத்தில் இருக்கும் அனைத்து ராசிகளில் ஒருசில மாற்றங்கள் ஏற்படும். ஏனெனில், ஒவ்வொரு ராசியிலும் அனைத்து கிரகங்களின் சஞ்சாரங்களும் நல்லதும் கெட்டதுமாக மாறிமாறி பலன் கொடுக்கும். சுக்கிரன் அழகுக்கும் பிரபலத்திற்கும் காரகர். அவர், நேர்மறை மற்றும் எதிர்மறையான பலன்களுடன் பன்னிரண்டு ராசிகளிலும் தனது பெயர்ச்சியினால் தாக்கத்தை ஏற்படுத்துவார். இன்னும் சில நாட்களில் பரிவர்த்தனையாகும் சுக்கிர பகவான் யாருக்கெல்லாம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார் என தெரிந்துக் கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிடத்தில் சுக்கிரனின் முக்கியத்துவம்  
வாழ்க்கையில் திருப்தி, ஆரோக்கியம் மனவலிமை என முக்கியமான விஷயங்களை வழங்கும் சுக்கிரன், தனித்து தரும் பலன்களுக்கும், அவர் பிற கிரகங்களுடன் இணைந்து இருக்கும்போது தரும் பலன்களுக்கும் மாற்றம் உள்ளது. சுப கிரகங்களுடன் இணைந்தால், சுப பலன்களையும், அசுப கிரகங்களுடன் இணைந்தால் மோசமான பலனையும் சுக்கிரன் கொடுப்பார்.


வலுவடைந்த சுக்கிரன்


சுக்கிரன் வலுவாக இருக்கும் ஜாதகம் உடையவர்கள், கவர்ச்சியானவர்களாகவும் பிறரை ஈர்ப்பவர்களாகவும் இருப்பார்கள். வாழ்க்கையில் சகல செல்வங்களையும் பெற்று வாழும் அதிர்ஷ்டத்தையும் சுக்கிரன் தான் தருவார். அதே சுக்கிரன், ஒருவரை நீச்சப்படுத்தவும் தயங்க மாட்டார். சுக்கிரன் பலவீனமாக இருப்பவர்களுக்கு, அவமரியாதை, பணச்சிக்கல், உறவுகளில் கசப்பு என வாழ்க்கையை கசக்க செய்துவிடுவார் சுக்கிர பகவான்.  


ஜூன் 12ம் தேதி மாலை 6:37 மணிக்கு மிதுன ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சியாகிறார். ஜூலை 7 வரை மிதுன ராசியில் இருக்கும் சுக்கிரன் சிலருக்கு நல்ல பலனைக் கொடுப்பார். அந்த ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, புகழ்... இந்த ராசிகளுக்கு சனி அருளால் சகலமும் கிடைக்கும்


ரிஷபம் (Taurus)


சுக்கிரன் பெயர்ச்சியாவதால் ரிஷப ராசியினருக்கு லாபம் கிடைக்கும். சுக்கிரன் பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறுபவர்களில் முதலிடத்தை பிடிக்கும் ரிஷப ராசியினரின் வாழ்க்கையில், செல்வம் பன்மடங்கு அதிகரிக்கும். எதிர்பாராத புதிய வருமானங்கள் வந்து சேரும்.  


சிம்மம் (Leo)


சுக்கிரன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு சுபபலன்களைத் தரும். சிம்ம ராசியினருக்கு தொழில் முன்னேற்றமும், சமூகத்தில் அந்தஸ்துக்கும் சுக்கிரன் வழி செய்வார். பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு என வாழ்க்கையில் அந்தஸ்து உயரும். நிம்மதியான வாழ்க்கை வாய்க்கும்


மேலும் படிக்க | கிருத்திகையில் குரு பெயர்ச்சி... ஜாக்பாட் பலன்களை பெறும் ‘4’ ராசிகள் இவை தான்..!!


துலாம் (Libra)


சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக, துலாம் ராசிக்காரர்களுக்கு அருமையான வாழ்க்கை அமையும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும் என்றால், குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இரட்டிப்பாகும்.. சுக்கிரனின் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களின் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.


மீனம் (Pisces)


மீன ராசிக்காரர்களின் வாழ்வில் சுக்கிரன் பெயர்ச்சி மகிழ்ச்சியை கொண்டு வந்து சேர்க்கும். உறவுகளில் நெருக்கம், வாழ்க்கையில் வெற்றி பெறுலாம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். நிதி ஆதாயம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், புதிய உறுப்பினர் வரவும் மனதில் அமைதியை ஏற்படுத்தும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | அங்காரக தோஷத்தை விலக்கிக் கொண்ட செவ்வாய்! ’3’ ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்கு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ