அங்காரக தோஷத்தை விலக்கிக் கொண்ட செவ்வாய்! ’3’ ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்கு!

Angaraga Dosham And Mars Transit: அங்காரக தோஷத்தை அடித்து தூள் கிளப்ப வந்த ராசிப் பெயர்ச்சி... ஜூன் முதல் ராகுவின் தோஷத்தில் இருந்து விடுபட்ட ராசிகள்....  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 5, 2024, 03:28 PM IST
  • ஜூன் முதல் ராகுவின் தோஷத்தில் இருந்து விடுபட்ட ராசிகள்
  • ராகு செவ்வாய் இணைவின் பிரிவின் எதிரொலி
  • அங்காரக தோஷத்தை விலக்கிக் கொண்ட செவ்வாய்
அங்காரக தோஷத்தை விலக்கிக் கொண்ட செவ்வாய்! ’3’ ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்கு! title=

அங்காரக தோஷம் என்பது ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் ராகுவின் இணைப்பால் உருவாகும் ஒரு ஜோதிட நிலை ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் ராகுவும் செவ்வாயும் ஒரே வீட்டில் இருந்தால், அந்த இடம் காரணமாகவோ அல்லது அம்சம் காரணமாகவோ, அது அங்காரக யோகமாகவோ அல்லது தோஷமாகவோ உருவாகிறது. ஜாதகத்தில் ஒரே வீட்டில் ராகுவும் செவ்வாயும் இருந்தாலோ அல்லது ராகுவும் செவ்வாயும் ஒருவரது நேர் பார்வையில் மற்றொவர் இருந்தாலோ, அப்போது அங்காரக யோகம் அல்லது தோஷம் உருவாகும் என்பது ஜோதிடம் சொல்லும் ஒரு நிலை ஆகும்.

கிரகப் பெயர்ச்சி

கிரகங்கள் அனைத்தும் அவ்வப்போது தங்களது ராசியை மாற்றிக் கொள்ளும். அண்மையில் ஜூன் 1ம் தேதி செவ்வாய் கிரகம் மேஷ ராசிக்கு பெயர்ச்சியானது. அதற்கு முன்னதாக, செவ்வாயும் ராகுவும் ஒன்றாய் மீன ராசியில் இருந்த நிலையில் அங்காரக தோஷம் உருவாகியிருந்தது. தற்போதைய செவ்வாய்ப் பெயர்ச்சியால் ராகு இருக்கும் இடத்தில் இருந்து செவ்வாய் நகர்ந்துவிட்டார். அதனால், அங்காரக் யோகம் அல்லது தோஷம் நீங்கியது. 

அங்காரக தோஷம் 

அங்காரக தோஷம் பல ராசிக்காரர்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தது. தற்போது செவ்வாய்ப் பெயர்ச்சியால் அது முடிவுக்கு வந்த நிலையில், சில ராசிக்காரர்கள் ஆசுவாசப்படுவார்கள். அவர்களின் நல்ல நாட்கள் தொடங்கிவிட்டன. சில ராசிக்காரர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். நிதி ஆதாயம் உண்டாகும். அதிர்ஷ்டமான அந்த ராசிகளின் பொன்னான நாட்கள் ஆரம்பமாகிவிட்டன. 

மேலும் படிக்க | 18 ஆண்டுகளுக்குப் பிறகு சனி நட்சத்திரத்தில் நுழையும் ராகு..! 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

ராகுவும் செவ்வாயும்

ராகுவிடம் இருந்து செவ்வாய் விலகியதால் ஏற்படும் நல்ல பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிகளைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம்.

மேஷம்: மேஷ ராசிக்கு செவ்வாய் மாறியிருப்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். சமூகத்தில் மரியாதையும் அந்தஸ்தும் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணங்கள் நிறைவேறும். புதிய வேலை வாய்ப்புகளும் இருக்கலாம், வாழ்க்கையில் முக்கியமான எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நேரம் இது.  

ரிஷபம்: அங்காரக தோஷம் முடிந்து போனதால், வாழ்க்கையில் நிம்மதி ஏற்படும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த வேலைகள் இப்போது நடந்தேறும். வாரக்கடன்கள் வந்து சேரும் நேரம் இது. முயற்சிகள் மற்றும் வேலையில் பெரிய அளவில் வெற்றி அடையலாம். நல்ல செய்திகள் வந்து சேரும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வருமானம் அதிகரிப்பதால், தேவைகள் பூர்த்தியாகும். விட சிறப்பாக இருக்கும். வியாபாரிகளும் லாபம் அடைவார்கள். பணத்தை சேமிப்பீர்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கமாகும். வாழ்க்கைத்துணையுடனான இணக்கம் மேம்படும்.  

மீனம்: மீனத்தில் செவ்வாயும் ராகுவும் இணைந்திருந்ததால் ஏற்பட்ட அங்காரக தோஷம் உங்களுக்கு பல இன்னல்களை கொடுத்த நிலையில், இப்போது எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வந்து அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும். பதற்றமாக இருந்த மனதில் நிம்மதி பிறக்கும். உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான காரியங்கள் துரிதமாக நடந்தேறும். இழுபறியாக இருந்துவந்த வேலை முடிவடையும். பயணங்கல் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தேவர்களுக்கே குருவாக இருந்தாலும் 4 ராசிக்காரர்களுக்கு தொல்லை கொடுக்கும் குரு உதயம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News