Budhan Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என எழைக்கப்படுகின்றன. கிரக பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் ஏற்படுகின்றது. இபற்றால் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் ஜூன் 14ஆம் தேதி, அதாவது இன்னும் 2 நாட்களில் கிரகங்களின் இளவரசராக கருதப்படும் புதன் மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். புதன், புத்திசாலித்தனம், அறிவாற்றல், பேச்சாற்றல், மென்மை, செழிப்பு ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ளார்.  மிதுன ராசியின் அதிபதி புதன் கிரகம். அத்தகைய சூழ்நிலையில், புதன் தனது சொந்த ராசியான மிதுன ராசியில் பெயர்ச்சி ஆவது பத்ர ராஜயோகத்தை உருவாக்கும். ஜோதிடத்தில், பத்ர மகாபுருஷ ராஜயோகம் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த ராஜயோகத்தின் உருவாக்கம் 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். இவர்களுக்கு தொழில், வியாபாரத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்படும். ஜூன் 14, 2024 முதல் புதன் பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 


 


ஜூன் 14 முதல் இவர்கள் வாழ்வில் கொண்டாட்டம்


ரிஷபம் (Taurus): 


புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ர ராஜயோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கும். ஏனெனில் புதன் இவர்களுக்கு அறிவாற்றல் மற்றும் பேச்சாற்றலுக்கான பலன்களை தரப்போகிறார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு அவ்வப்போது கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சிக்கிய பணம் மீண்டும் கிடைக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கும். சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் வணிகம் நன்றாக விரிவடையும். இதன் காரணமாக லாபம் அதிகரிக்கும். 


மேலும் படிக்க | குரு நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும்.. குரு அருளால் குபேர யோகம்


கன்னி (Virgo): 


புதன் பெயர்ச்சி கன்னி ராசியினருக்கு மிகவும் நன்மை பயக்கும். கர்மவினையின் அடிப்படையில் பல நன்மைகளைப் பெறுவீர்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் பெறலாம். வியாபாரம் விரிவடையும். செல்வத்துடன் மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பதவி உயர்வு இருக்கலாம். புதன் அருளால் பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் உயரும் வாய்ப்புகள் உள்ளன. உங்கள் தந்தையுடனான உறவு வலுவடையும். வீட்டில் சுபிட்சம் இருக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.


துலாம் (Libra): 


புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ர ராஜயோகம் துலாம் ராசிக்காரர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அனைத்து வேலைகளும் எளிதாக முடிவடையும். தடைபட்ட பணிகள் இப்போது வெற்றிகரமாக நடந்துமுடியும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கணிசமான நிதி ஆதாயம் ஏற்படும். சமூகத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. நீண்ட நாள் கனவும் நனவாகலாம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு சனி அருளால் பொற்காலம் ஆரம்பம்... முழு ராசிபலன் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ