புதன் வக்ர பெயர்ச்சி: புதன் விருச்சிக ராசியில் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். ஜோதிட சாஸ்திரத்தில், புதன் ஒரு சுப கிரகமாக கருதப்படுகிறார். ஒரு நபரின் ஜாதகத்தில் புதன் சுப ஸ்தானத்தில் இருந்தால், அந்த நபரின் வருமானம் அதிகரித்து பண வரவு அதிகரிக்கும். வாழ்க்கையில் அந்த நபர் அனைத்து இன்பங்களையும் பெறுவார். அதே நேரம் ஒருவரது ஜாதகத்தில் புதன் கிரகம் அசுப ஸ்தானத்தில் இருந்தால், அந்த நபர் தேவை இல்லாத பிரச்சனைகளில் சிக்கிக்கொள்வார். புதனின் வக்ர பெயர்ச்சியினால் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கை வைத்த காரியம் அனைத்திலும் வெற்றியைப் பெறக்கூடிய 3 ராசிகள் உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதனின் வக்ர பெயர்ச்சி சில ராசிகளுக்கு பல வித நற்பலன்களை அள்ளித்தரும்


கடக ராசி


புதனின் வக்ர பெயர்ச்சி கடக ராசிகளுக்கு சாதகமாக இருக்கும். புதன் கிரகம் கடக ராசியிலிருந்து ஐந்தாம் வீட்டில் வக்ர நிலையில் இருப்பதால், இந்த நேரத்தில் உங்கள் குழந்தை தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறலாம். அதே சமயம் குழந்தையின் முன்னேற்றத்தைக் கண்டு மனம் மகிழ்ச்சியடையும். அதே சமயம் புதனின் அருளால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் நீங்கள் எடுக்கும் முயற்சிகளும் முழுமையாக வெற்றி பெறும். காதல் உறவில் இருப்பவர்கள் தங்கள் காதல் உறவில் வெற்றி பெறலாம். காதல் விவகாரம் திருமணமாக மாறலாம். இந்த காலகட்டத்தில் மரியாதை கூடும், மேலும் உயர் பதவியையும் அடையலாம். மேலும், இந்த காலகட்டத்தில் நீங்கள் எதிர்பாராத பணத்தை அவ்வப்போது பெறலாம். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.


மீனம் ராசி


மீன ராசிக்காரர்களுக்கு புதன் வக்ர பெயர்ச்சி பலன் தரும். புதன் கிரகம் மீன ராசியின் ஒன்பதாம் வீட்டில் வக்ர நிலையில் சஞ்சரிக்கப் போவதால். எனவே, 2024 ஆம் ஆண்டின் தொடக்க முதல் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருக்கலாம். மேலும், இந்த நேரத்தில் நீங்கள் நாடு மற்றும் வெளிநாட்டிற்குள் சுற்றுலா செல்லலாம். பயணங்கள் உங்களுக்கு சாதகமாக அமையலாம். இந்தக் காலகட்டத்தில் மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம். பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் உள்ளன. நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக பணம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன, இது உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். மேலும், இந்த நேரத்தில் நீங்கள் எந்த சுப மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கலாம்.


மேலும் படிக்க | அபூர்வ யோகம் ஆரம்பம்: இந்த ராசிகளுக்கு தீபாவளி முதல் வாழ்க்கை தித்திக்கும், 2024 அட்டகாசமாய் இருக்கும்


சிம்மம் ராசி


கிரகங்களின் அதிபதியான புதனின் வக்ர பெயர்ச்சி சிம்ம ராசிகளுக்கு சாதகமாக இருக்கலாம். ஏனெனில் ஒருபுறம், புதன் உங்கள் ராசிக்கு அதிபதியான சூரியனுடன் நட்பு உணர்வுடன் இருக்கிறார். மேலும், புதன் கிரகம் உங்கள் ராசியிலிருந்து நான்காவது வீட்டில் வக்ர நிலையில் நகரப் போகிறார். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் வாகனம் மற்றும் சொத்து இன்பம் பெறலாம். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயமும் பெறுவீர்கள். உங்கள் விருப்பங்கள் பல நிறைவேறும் வாய்ப்புகள் உள்ளன, மேலும் புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும், புதனின் பார்வை உங்கள் ராசியின் கர்ம வீட்டில் விழுகிறது. எனவே, இந்த நேரத்தில் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.


பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்,  உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | தீபாவளிக்கு பிறகு வரும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம், லாபமோ லாபம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ