தீபாவளிக்கு பிறகு வரும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம், லாபமோ லாபம்

Mars Transit: முக்கியமான கிரகங்களில் ஒன்றான செவ்வாய் கிரகத்தின் ராசி மாற்றம் இந்த மாதம் 16 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனால் ராசிகளில் பல வித மாற்றங்கள் ஏற்படும். 

செவ்வாய் கிரகம் அனைத்து கிரகங்களின் சேனாதிபதியாக பார்க்கப்படுகின்றது. நிலம், சக்தி, ஆற்றல், துணிச்சல் ஆகிய பண்புகளின் காரணி கிரகமாக செவ்வாய் உள்ளார். செவ்வாய் மகரத்தில் உச்சத்திலும் கடகத்தில் நீச்சமாகவும் உள்ளார். தீபாவளிக்கு பின்னர் செவ்வாயில் நடக்கும் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானது. தீபாவளிக்கு முன்னர் சனி, சுக்கிரன், ராகு, கேது ஆகிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றியுள்ளன. இந்த கிரக மாற்றங்களால் தீபாவளி முதல் சில ராசிகளுக்கு அமோகமான பலன்கள் கிடைக்கும். அனைத்து ராசிகளுக்கும் செவ்வாய் பெயர்ச்சி மற்றும் தீபாவளி பண்டிகைக்கான ரசிபலனை இங்கே காணலாம். 

1 /13

மேஷம்: மனதில் கலக்கம் ஏற்படலாம். துணிச்சலுடன் செயல்படுவது அவசியம். நண்பர்கள் உதவியால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியிடத்திலும் முன்னேற்றம் ஏற்படும்.

2 /13

ரிஷபம்: தன்னடக்கத்துடன் இருங்கள். தேவையற்ற கோபத்தைத் தவிர்க்கவும். உரையாடலில் பொறுமையாக இருங்கள். சமய பணிகளில் ஆர்வம் கூடும். ஆன்மீக தலங்களுக்கு செல்லும் ஆர்வம் உண்டாகும்.

3 /13

மிதுனம்: முழு நம்பிக்கை இருக்கும். ஆனால் மனம் கலங்கும் வகையில் சில பிரச்சனைகள் வரக்கூடும். பணியிடத்தில் மாற்றம் ஏற்படலாம்.

4 /13

கடகம்: மனம் மகிழ்ச்சியாக இருக்கும். முழு நம்பிக்கையும் இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும், ஆனால் சில சிரமங்களும் ஏற்படலாம். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

5 /13

சிம்மம்: மனம் கலங்காமல் தெளிவாக இருக்கும். நம்பிக்கை குறைவு ஏற்படும். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். வாழும் வாழ்க்கை ஒழுங்கற்றதாக இருக்கும். இதை மாற்றிக்கொள்ள வேணடியது மிக அவசியம். மன அமைதிக்கு முயற்சி செய்யுங்கள்.

6 /13

கன்னி: வாழ்வில் அலைச்சல் இருக்கும். நம்பிக்கை குறைவு ஏற்படும். பொறுமையாய் இருப்பது அவசியம். அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்கவும். வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

7 /13

துலாம்: மனதில் இப்போது ஏற்ற தாழ்வுகள் இருக்கும். கலை அல்லது இசையில் ஆர்வம் கூடும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தொழில் விஷயமாக பயணங்களை மேற்கொள்வீர்கள். 

8 /13

விருச்சிகம்: பேச்சில் இனிமை இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தந்தையின் ஆதரவு கிடைக்கும். வாழும் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மரியாதை கூடும்.

9 /13

தனுசு: தன்னம்பிக்கை குறையும். தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.

10 /13

மகரம்: நம்பிக்கை நிறைந்திருக்கும். அறிவார்ந்த பணி மூலம் மரியாதை பெறலாம். நண்பரின் உதவியால் தொழிலில் மாற்றம் ஏற்படலாம். லாபம் அதிகரிக்கும்.

11 /13

கும்பம்: மனம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் நம்பிக்கையின்மை இருக்கும். வியாபாரத்தில் உயர்வு இருக்கும். லாப வாய்ப்புகள் அமையும். தந்தையிடமிருந்தும் பணம் பெறலாம்.

12 /13

மீனம்: மனம் மகிழ்ச்சியாக இருக்கும். அதிக சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். பொறுமையைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யுங்கள். அறிவார்ந்த பணி மூலம் மரியாதை பெறலாம்.

13 /13

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.