கும்பத்தில் புதாதித்ய ராஜ்யோகம் 2023: பிப்ரவரி மாத கிரகப் பெயர்ச்சியில் அடுத்து வருவது புதன் பெயர்ச்சி என்பதால், பலரின் மனதிலும், செயல்பாடுகளிலும் தாக்கம் ஏற்படும்.இந்த மாதம் (பிப்ரவரி 2023) 27ம் தேதியன்று புதன், கும்ப ராசியில் நுழைவதால் புத்தாதித்ய யோகம் உண்டாகிறது. இது 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தரும். புதனுடன் சூரியனும் இணைவதால் ஏற்படும் புதாதித்ய யோகம், சில ராசியினருக்கு பம்பர் ஜாக்பாட் அளிக்கும். அதுமட்டுமா? வேலையில் முன்னேற்றம், சென்ற இடமெல்லாம் சிறப்பு என வாழ்க்கையில் மகிழ்ச்சியை மட்டுமே அனுபவிக்கும் சுபமான காலமாக அமையும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதாதித்ய ராஜயோகம் 


ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படும் புதாதித்ய ராஜயோகம் எப்போது ஏற்படும் தெரியுமா? சூரியனும் புதனும் ஒரே ராசியில் இணையும் போது புதாதித்ய ராஜயோகம் உருவாகும். பிப்ரவரி 27, 2023 அன்று, புதன் பெயர்ச்சியாகி கும்ப ராசிக்குள் நுழைந்து சூரியனுடன் இணையும்போது ஏற்படும் கூட்டணி ஏற்படுத்தும் ராஜயோகத்தின் பலன்கள் மார்ச் 15, 2023 வரை இருக்கும்.


அதன் பிறகு சூரியன் மீன ராசிக்கு பெயர்ச்சியாவார். அப்போது இந்த ராஜயோகம் முடிவுக்கு வந்துவிடும். புதனின் ராசி மாற்றத்தால் கும்பத்தில் உருவாகும் புத்தாதித்ய யோகம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் 3 ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். புத்தாதித்ய ராஜயோகத்தினால் சுப பலன்களை அனுபவிக்கவிருக்கும் ராசிக்காரர்கள் இவர்கள்... 


மேலும் படிக்க | மஹாசிவராத்திரி: மன விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற ராசிக்கு ஏற்ற ‘அபிஷேகங்கள்’! 


புதன் பெயர்ச்சியின் சுப பலன் பெறும் ராசிக்காரர்கள்


சிம்மம்: சிம்ம ராசியின் அதிபதி சூரியன். புதன் சூரியனுடன் சென்று சேருவதால், சிம்ம ராசிக்காரர்களுக்கு புத்தாதித்ய ராஜயோகம் பல நன்மைகளைத் தரும். இவர்களின் துணை நல்லவராக இருப்பார். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். பெரிய ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த முடியும். நல்ல செய்தி கிடைக்கும். உறவை உறுதிப்படுத்த முடியும்.


ரிஷபம்: புதன் சஞ்சாரத்தால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம், ரிஷப ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலையில் சேரலாம். பெரிய நிறுவனத்திலிருந்து ஒரு பெரிய சம்பள பேக்கேஜ் ஆஃபர் வரும். வேலையில் இடமாற்றம் செய்ய நினைத்தவர்களின் விருப்பம் நிறைவேறும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். அரசியலில் ஈடுபடுபவர்கள் பலன் அடைவார்கள்.


மகரம்: புதன் ராசி மாற்றத்தால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம் மகர ராசிக்காரர்களுக்கு பணப் பலன்களைத் தரும். இதுவரை வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த கடனை பைசல் செய்யும் நேரம் இது.


பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வருமானம் கூடும். வெளிநாட்டில் இருந்து லாபம் உண்டாகும். வெளியூர்களுடன் தொடர்புடைய வேலை செய்பவர்கள் (பொருட்களை அனுப்புவது, வாகனங்களை இயக்குபவர்கள்) சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். மகர ராசிக்காரர்களுக்கு வாழ்வில் ஒரு புதிய துணையின் வரவு ஏற்படும் வாய்ப்பு உண்டு. காதல் அல்லது திருமணத்திற்கான வரன் வந்து அமையும்.  


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கிரக சேர்க்கையால் உருவான 3 ராஜயோகங்கள்: இந்த ராசிகள் நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ