குரு-ராகு சேர்க்கை, இந்த 3 ராசிக்காரர்கள் சூதானமாக இருக்கவும்

வருகிற ஏப்ரல் 22 ஆம் தேதி, குரு மேஷ ராசியில் இடப் பெயர்ச்சியடைவார். அதேபோல் இந்த ராசியில் ஏற்கனவே ராகு அமர்ந்திருக்கிறார். இந்த வழியில் குரு மற்றும் ராகு சேர்க்கை அரங்கேறும். இப்படி 6 மாதங்கள் குருவும் ராகுவும் ஒரே ராசியில் இருப்பார்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 7, 2023, 05:25 PM IST
  • குரு ராகு கூட்டணி.
  • குரு சண்டாள யோகம்.
  • பலன்கள், பரிகாரங்கள் என்ன?
குரு-ராகு சேர்க்கை, இந்த 3 ராசிக்காரர்கள் சூதானமாக இருக்கவும் title=

வேத ஜோதிடத்தில், கிரகங்களின் இயக்கம், ராசி மாற்றங்கள் மற்றும் இணைப்புகள் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை. கிரகங்களின் ராசியில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், அது அனைத்து ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல் ராசி சேர்க்கை சிலருக்கு சுப மற்றும் அசுப பலன்கள் தரும். சுப மற்றும் அசுப யோகம் கிரகங்களின் சேர்க்கையால் உருவாகிறது. இதேபோன்ற அசுப யோகம் விரைவில் உருவாக உள்ளது. இந்த அசுப யோகத்திற்கு குரு சண்டாள யோகம் என்பார்கள்.

குரு சண்டாள யோகம் எப்போது உருவாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
வேத ஜோதிடத்தின்படி, குருவும் ராகுவும் இணைந்து ஒரே இராசியில் இருந்தாலோ, ராகுவை குரு பார்த்தாலோ குரு சண்டாள யோகம் ஏற்படுகிறது. அந்தவகையில் தற்போது குரு மீன ராசியில் பெயர்ச்சியாகியுள்ளார். வருகிற ஏப்ரல் 22 ஆம் தேதி, குரு மேஷ ராசியில் இடப் பெயர்ச்சியடைவார். அதேபோல் இந்த ராசியில் ஏற்கனவே ராகு அமர்ந்திருக்கிறார். இந்த வழியில் குரு மற்றும் ராகு சேர்க்கை அரங்கேறும். இப்படி 6 மாதங்கள் குருவும் ராகுவும் ஒரே ராசியில் இருப்பார்கள். அதன்படி யாருடைய ஜாதகத்தில் குரு-சண்டாள யோகம் அமையப் போகிறதோ, அவர்கள் மிகவும் கடினமாக நேரத்தை பயணிக்கக் கூடும்.

மேலும் படிக்க | சூரியன்-சனி சேர்க்கை: அடுத்த 30 நாட்களுக்கு இந்த ராசிகள் ராஜவாழ்க்கை வாழ்வார்கள்

இந்த 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

மேஷ ராசி: ஏப்ரல் 22க்குப் பிறகு உங்கள் சொந்த ராசியின் லக்ன வீட்டில் குரு-சண்டாள யோகம் உருவாகும். இத்தகைய சூழ்நிலையில், ஏப்ரல் 22 முதல் அக்டோபர் 30 வரை, மேஷ ராசிக்காரர்களின் சிரமங்கள் கணிசமாக அதிகரிக்கும். இந்த நேரத்தில் பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சட்ட விவாதத்தில் சிக்கிக் கொள்ளலாம்.

மிதுன ராசி: மிதுன ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 22-ம் தேதிக்குப் பிறகு குரு-சண்டாள அசுப யோகம் உண்டாகும். இதனால் தொழில், வியாபாரம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நஷ்டம் வரலாம். அதிர்ஷ்டம் இல்லாததால் பண இழப்பும், வேலையில் தோல்வியும் ஏற்படும்.

தனுசு ராசி: தனுசு ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். ஏனெனில் குரு-சண்டாள அசுப யோகம் உங்களை விபத்திற்கு ஆளாக்கக்கூடும். வியாபாரத்தில் நஷ்டம் வரலாம். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கலாம். உத்தியோகத்தில் உத்தியோகஸ்தர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம், இது உங்கள் தொழிலுக்கு சாதகமாக இருக்காது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நல்ல காலம் பொறந்தாச்சு! 5 ராசிக்காரர்களில் வாழ்வு அமோகம்! பணமழையில் நனையலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News