சனி பகவானின் உதயம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் அவ்வப்போது தங்கள் ராசியை மாற்றுகின்றன. இவற்றின் இயக்கங்களும் நிலைகளும் அவ்வப்போது மாறுகின்றன. சில காலம் அஸ்தமன நிலையில் இருக்கும் கிரகங்கள் பின்னர் உதயமாகின்றன. கிரகங்களின் இந்த மாற்றம் அனைவரது வாழ்க்கையையும் பாதிக்கிறது. பொதுவாக கிரகங்கள் அஸ்தமனமாகும் போது அசுப பலன்களும் உதயமாகும்போது சுப பலன்களும் கிடைக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிக முக்கிய கிரகமான சனி பகவான் தற்போது கும்ப ராசியில் உள்ளார். அவர் தற்போது அஸ்தமன நிலையில் உள்ளார். சனி மார்ச் 5, 2023 அன்று உதயமாக உள்ளார். மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் சனி உதயத்தால் தன ராஜயோகம் உருவாக உள்ளது. இந்த ராஜயோகத்தால் அனைத்து ராசிக்காரர்களுக்கும் நன்மை கிடைக்கும் என்றாலும், சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் கைகூடும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


சனி உதயம் 2023


சனி பகவான் ஜனவரி 31 அன்று அஸ்தமனமானார். இப்போது மார்ச் 5 அன்று அவர் உதயமாகவுள்ளார். மார்ச் 5 அன்று சனி கும்ப ராசியில் உதயமாவார். சனியின் இந்த மாற்றம் ராஜ யோகத்தை உருவாக்கும், இந்த ராஜயோகம், கும்பம், சிம்மம் மற்றும் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்வில் நன்மைகளைத் தரும். இந்த ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் உதயத்தால் வேலை மற்றும் வணிகத்தில் அதிக முன்னேற்றம் கிடைக்கும்.


கும்பம் 


மார்ச் 5 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சனி உதயம் கும்ப ராசியில் நிகழும். ஆகையால், இந்த ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் புனிதமானதாக இருக்கும். உங்கள் ஜாதகத்தில் சனி பகவானின் கோச்சாரத்தால் ஷஷ ராஜயோகம் உருவாகும். சனி தேவின் எழுச்சியின் செல்வாக்கு காரணமாக, கும்ப ராசிக்காரர்கள் வணிகத்தில் அதிகப்படியான லாபம் அடைவார்கள். சனியின் இந்த மாற்றத்தின் காரணமாக, எண்ணெய், பெட்ரோலியம், இரும்பு மற்றும் தாதுக்கள் ஆகியவற்றின் வணிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு நேரம் நன்றாக இருக்கும். 


மேலும் படிக்க | மாசி மாத பெளர்ணமியன்று புதாதித்ய ராஜயோகத்தால் ஹோலி யோகம் பெறும் 2 ராசிக்காரர்கள்


சிம்ம ராசி 


சனி பகவானின் உதயத்தால் சிம்ம ராசியில் தன ராஜ யோகம் உருவாகவுள்ளது. இதனால் சொத்து, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். மேலும் மூதாதையர் சொத்துக்களிலிருந்தும் பயனடையலாம்.


ரிஷப ராசி


ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி பகவான் உதயமாகிறார். இந்த ஸ்தானம் வீடு வேலை மற்றும் தொழில் ரீதியான ஸ்தானமாக கருதப்படுகிறது. ஆகையால், தொழில் ஸ்தானத்தில் சனி பகவான் உதயமாவதால், ரிஷப ராசிக்காரர்கள் தொழில் ஸ்தானத்தில் பயனடைவார்கள். வேலை செய்யும் நபர்கள் புதிய வேலை வாய்ப்புகளைப் பெறலாம், மேலும் வணிகர்களும் பயனடைவார்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | மார்ச் மாதம் இந்த ராசிகளுக்கு பண நஷ்டம், மன கஷ்டம்: சூதானமா இருங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ