மார்ச் மாதம் இந்த ராசிகளுக்கு பண நஷ்டம், மன கஷ்டம்: சூதானமா இருங்க

Monthly Horoscope, March 2023: ஜோதிடத்தின் பார்வையில் மார்ச் மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். கிரக மாற்றங்களால் மார்ச் மாதம் அதிக தாக்கங்களை எதிர்கொள்ளவிருக்கும் ராசிகள் பற்றி இங்கே காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 28, 2023, 11:03 AM IST
  • மார்ச் மாதம் மேஷ ராசியில் ராகுவின் பார்வை இருக்கும்.
  • இந்த மாதம் பரபரப்பாக இருக்கும்.
  • நீங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடலாம்.
மார்ச் மாதம் இந்த ராசிகளுக்கு பண நஷ்டம், மன கஷ்டம்: சூதானமா இருங்க title=

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு கிரகம் தனது ராசியை மாற்றும் போது, ​​அது 12 ராசிகளையும் பாதிக்கிறது. ஜோதிடத்தின் பார்வையில் மார்ச் மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். ஏனெனில் சுக்கிரன், சனி, சூரியன், புதன் போன்ற பெரிய கிரகங்களில், மார்ச் மாதத்தில் ராசி, நட்சத்திரம் இயக்கம் போன்றவற்றில் மாற்றம் இருக்கும். நாடு, உலகம் மட்டுமின்றி, இதன் தாக்கம் மக்களிடமும் காணப்படும்.  இந்த கிரகங்களின் ராசி மாற்றத்தால் சில ராசிகளுக்கு நன்மையும், சில ராசிகளுக்கு பாதிப்புகளும் ஏற்படும். கிரகங்களில் ஏற்படவுள்ள மாற்றங்களின் அடிப்படையில், மார்ச் மாதம் யாருக்கு எப்படி இருக்கும் என்று இந்த பதிவில் காணலாம். 

சனி உதயம் 2023

மார்ச் மாத தொடக்கத்திலேயே சனிபகவான் கும்ப ராசியில் உதயமாவார். மார்ச் 6, 2023 அன்று காலை 11.36 மணிக்கு கும்ப ராசியில் சனியின் உதயம் நடக்கும். சூரியன், புதன் ஆகிய கிரகங்களும் கும்ப ராசியில் இருக்கும். சில ராசிக்காரர்களுக்கு சனியின் உதயத்தால் பலன் கிடைக்கும். இதில் ரிஷபம், சிம்மம், துலாம் மற்றும் கும்பம் ஆகிய ராசிகள் அடங்கும்.

சூரிய பெயர்ச்சி

மாரச் மாதத்தின் நடுவில் சூரியபகவான் ராசி மாறுவார். மார்ச் 15ம் தேதி காலை 6:13 மணிக்கு அவர் மீன ராசியில் பிரவேசிக்கிறார்.

சுக்கிரன் பெயர்ச்சி

ஆடம்பரம் மற்றும் செல்வத்தின் காரணியான சுக்கிரன், மார்ச் 12, 2023 அன்று மீனத்தை விட்டு மேஷ ராசியில் நுழைகிறார். அவர் காலை 8:13க்கு மேஷ ராசிக்கு வருவார்.

மேலும் படிக்க | புத ஆதித்ய யோகத்தினால் பண மழையில் நனையும் அதிர்ஷ்ட ராசிகள் ‘இவை’ தான்!

கிரக மாற்றங்களால் மார்ச் மாதம் அதிக தாக்கங்களை எதிர்கொள்ளவிருக்கும் ராசிகள் பற்றி இங்கே காணலாம்: 

மேஷம்

மார்ச் மாதம் மேஷ ராசியில் ராகுவின் பார்வை இருக்கும். இந்த மாதம் பரபரப்பாக இருக்கும். நீங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடலாம். திருமண வாழ்க்கையிலும் பிரச்சனைகள் வரலாம். கடினமாக உழைத்தாலும் பணப் பலன் குறைவாக இருக்கும். வியாபாரிகளுக்கும் பிரச்சனைகள் வரலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் சூரியனின் கண்காணிப்பில் இருப்பார்கள். மன உளைச்சல்களைச் சந்திக்க நேரிடலாம். பொருளாதார லாபம் குறைவாக இருக்கும். திருமண வாழ்வில் பிரச்சனைகள் வரலாம். ஆரோக்கியமும் சரியாக இருக்காது.

கன்னி

கிரகங்களின் சஞ்சாரம் மாறுவதால் கன்னி ராசிக்காரர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படும். அவர்கள் நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். செலவுகள் அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கு அதிகப்படியான உழைப்பு இருக்கும். சக ஊழியர்களுடனான உறவுகள் மோசமடையலாம். உடல்நலம் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்திலும் மாற்றங்களைக் காணலாம். குடும்பத்தினருடனான உறவுகள் மோசமடையலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தினசரி ராசிப்பலன் - எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News