மேஷத்தில் குரு பெயர்ச்சி: நவகிரகங்களில் முக்கியமான கிரகமாக குருவும் விளங்குகிறது. சுபக்கிரகமாக கருதப்படும் குருபகவான் தெய்வீகத்திற்கும், வேதாந்த ஞானத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறார். பொதுவாக குரு பகவான் தனது பயணத்தில் ஒரு ராசி மண்டலத்தை கடக்க சுமார் ஓராண்டு ஆகும். அதன்படி 12 ராசிகளையும் கடந்து வர 12 ஆண்டுகள் ஆகும். அதன்படி குரு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு செல்கிறார். குரு பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கபடி இந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி அன்று மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும் குரு பகவான் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பயணம் செய்யப்போகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறுபுறம் ராகு ஏற்கனவே மேஷ ராசியில் பெயர்ச்சியடைந்துள்ளார். இதன் போது குரு, ராகு சேர்க்கை ஏற்படும். இதனால் குரு சண்டாள யோகம் உருவாகும். இதனால் எந்த ராசிக்காரர்களின் வாழ்வில் எதிர்மறையான தாக்கம் இருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | இன்றைய ராசிப்பலன்: பண மழையில் நனையப்போகும் ராசிகள்!


இந்த ராசிக்காரர்கள் குரு மற்றும் ராகு சேர்க்கையால் கவனமாக இருக்க வேண்டும்


மேஷ ராசி: இந்த ராசிக்காரர்களுக்கு குரு சண்டாள யோகம் பிரச்சனைகளை உருவாக்கும். இதன் போது இந்த ராசிக்காரர்களுக்கு பண இழப்பு ஏற்படும். நம்பிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. மறுபுறம், ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் மேஷ ராசிக்காரர்களை தொந்தரவு செய்யலாம். பணியிடத்தில் எச்சரிக்கை தேவை. புதிய முதலீடுகளை செய்வதைத் தவிர்க்கவும்.


கடக ராசி: ஜோதிட சாஸ்திரத்தின்படி, குரு மேஷ ராசியில் பெயர்ச்சியாகுதும், ராகுவுடன் இணைவதும் கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை உருவாக்கப் போகிறது. இந்த காலகட்டத்தில், இந்த ராசிக்காரர்கள் எதிரிகளிடம் இருந்து கவனமாக இருக்க வேண்டும். இதன் போது பணியிடத்தில் வாக்குவாதம் ஏற்படும் சூழல் உருவாகலாம். குரு சண்டாள யோகம் உங்களுக்கு சிரமங்களை உருவாக்கும். அத்தகைய சூழ்நிலையில், பேச்சில் சற்று நிதானம் தேவை. 


மிதுன ராசி: குரு, ராகு சேர்க்கையால் குரு சண்டாள யோகம் உருவாகும். இதன் போது மிதுன ராசிக்காரர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதன் போது மிதுனம் ராசிக்காரர்கள் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். ஷேர் மார்க்கெட் மற்றும் லாட்டரியில் முதலீடு செய்வதற்கு முன் பலமுறை யோசிக்கவும். பண இழப்பு ஏற்படும். வருமான பற்றாக்குறை வரலாம். அதே நேரத்தில், மன அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | 17 ஆண்டுகள் நீடிக்கும் புதன் மகாதிசை! ராஜ போக வாழ்க்கை அமையும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ