குரு பெயர்ச்சி 2023: இந்த ராசிகள் மீது அதிர்ஷ்ட மழை, குரு பார்வையால் குபேர யோகம்!!

Guru Peyarchi in 2023: குருவின் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பண பலன்களையும் தொழிலில் முன்னேற்றத்தையும் தரப்போகிறது என்பதை இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 8, 2023, 11:53 AM IST
  • இந்த காலத்தில் குருவின் அருளால் மீன ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு இருக்கும்.
  • உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும்.
  • மேலும், நீண்ட நாட்களாக ஒரு இடத்தில் சிக்கியிருந்த பணத்தைப் பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் தற்போது கிடைக்கும்.
குரு பெயர்ச்சி 2023: இந்த ராசிகள் மீது அதிர்ஷ்ட மழை, குரு பார்வையால் குபேர யோகம்!!

குரு பெயர்ச்சி 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் மக்கள் மீது அவற்றின் தாக்கதை ஏற்படுத்துகின்றன. குரு பகவான் ஏப்ரல் 22ஆம் தேதி மீன ராசியில் இருந்து விலகி செவ்வாயின் ராசியான மேஷ ராசிக்குள் நுழைகிறார். பொதுவாக அனைத்து கிரகங்களின் ராசி மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தும். வியாழன் கிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகின்றது. ஆகையால் குரு பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.

குருவின் மாற்றத்தின் தாக்கம் காரணமாக சில ராசிகளில் சுப பலன்களும் சில ராசிகளில் அசுப பலன்களும் காணப்படும். குரு பகவான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷ ராசியில் நுழையப் போகிறார். ஆகையால், இந்த மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. குருவின் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பண பலன்களையும் தொழிலில் முன்னேற்றத்தையும் தரப்போகிறது என்பதை இந்த பதிவில் காணலாம். 

மேஷம்

ஜோதிட சாஸ்திரப்படி, வியாழன் மேஷ ராசியில் நுழையும் போது, ​​இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் சுப பலன்கள் ஏற்படும். இந்தப் பெயர்ச்சி இந்த ராசியின் லக்ன வீட்டில் நடக்கப் போகிறது. இந்த நேரத்தில், உங்கள் பணியிடத்தில் உங்கள் சக்தி அதிகரிக்கும். அதே சமயம் வாழ்க்கைத்துணையுடனான உறவில் பலம் ஏற்படும். இந்த காலகட்டத்தில் அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

குரு பெயர்ச்சியின் காரணமாக, திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படலாம். தொழிலதிபர்களும் இந்த நேரம் லாபம் அடைவார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு இந்த நேரம் சாதகமானது.

மேலும் படிக்க | மாசி மாத ராசிபலன்கள்! மேஷத்திற்கு மகுடம் சூட்டும் கும்ப ராசியில் சூரிய சஞ்சாரம்!

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அதிகப்படியான பலன் தரும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். கடக ராசிக்காரர்களின் பெயர்ச்சி ஜாதகத்தில் இந்த சஞ்சாரம் நடக்கப் போகிறது. இது வேலை மற்றும் பணியிடத்தின் ஸ்தானமாக கருதப்படுகிறது. ஆகையால் கடக ராசிக்காரர்களுக்கு குருவின் அருளால் பொருளாதார நன்மைகள் கிடைக்கும். தொழில் தொடங்கும் நபர்களுக்கு இந்த நேரம் மங்களகரமானதாகவும் பலனளிக்கக்கூடியதாகவும் இருக்கும். 

இந்த காலத்தில் நல்ல வேலை வாய்ப்புகளைப் பெறலாம். அதே சமயம் தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இக்காலகட்டத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

மீனம்

குரு பகவான் மீன ராசியிலிருந்துதான் மேஷ ராசியில் நுழைகிறார். அத்தகைய சூழ்நிலையில், இந்த நேரம் மீனத்திற்கும் நன்மை பயக்கும். இந்த ராசிக்காரர்களின் பெயர்ச்சி ஜாதகத்தின் இரண்டாம் வீட்டில் இந்தப் பெயர்ச்சி நடக்கப் போகிறது. இந்த இடம் செல்வம் மற்றும் பேச்சுத்திறனின் ஸ்தானமாக கருதப்படுகிறது. 

இந்த காலத்தில் குருவின் அருளால் மீன ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு இருக்கும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். மேலும், நீண்ட நாட்களாக ஒரு இடத்தில் சிக்கியிருந்த பணத்தைப் பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் தற்போது கிடைக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்! இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக செயல்பட வேண்டும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

More Stories

Trending News