குருப் பெயர்ச்சி 2023: ஜோதிடத்தின் படி, மேஷ ராசியில் வியாழன் சஞ்சரிப்பது சில ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். 12 ஆண்டுகளுக்குப் பிறகு, இவர்களின் வாழ்க்கையில் அனைத்து வளங்களையும் கொண்டு வந்து சேர்க்கும்  'கஜலக்ஷ்மி ராஜயோகம்' உருவாகும். செல்வத்தில் திளைக்கப்போகும் ‘அந்த’ மூன்று ராசிகளில் உங்களுடையதும் உண்டா? 'செவ்வாய்' ராசியில் 'கஜலக்ஷ்மி ராஜயோகம்' உருவாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிடத்தின் படி, ஒரு கிரகம் தனது ராசியை மாற்றும் போதெல்லாம், அதன் விளைவு அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் மங்களகரமானதாகவோ அல்லது கெட்டதாகவோ ஏதேனும் ஒரு விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும், ஏப்ரல் தொடக்கத்தில், வியாழன் கிரகம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷ ராசியில் நுழைகிறது.


மேஷத்தில் செல்லும் வியாழன் கிரகத்தினால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகும். இந்த சமயத்தில் பல ராசிக்காரர்களின் வாழ்வில் திடீர் பண ஆதாயம் மற்றும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உருவாகி வருகிறது. இந்த அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | மகா சிவராத்திரி ராசிபலன்... மேஷம் முதல் மீனம் வரை! 


மீனம்


ஜோதிட சாஸ்திரப்படி மேஷ ராசியில் கஜலக்ஷ்மி ராஜயோகம் உருவாகுவது மீன ராசிக்காரர்களுக்கு பலன் தரும். இந்த காலகட்டத்தில் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியாழன் கிரகம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறது. இதனால், திடீர் லாபம் ஏற்படும்.


அதே நேரத்தில், தடைபட்ட வேலைகள் வேகம் பெறும். பணியிடத்தில் முதலாளி மற்றும் சக ஊழியர்களின் முழு ஆதரவு இருக்கும். மதிப்பு, பதவி, கௌரவம் அதிகரிக்கும். இந்த நேரம் வியாபாரிகளுக்கும் சாதகமாக இருக்கும். நிலுவையில் இருக்கும்பணம் திரும்பக் கிடைக்கும். ஆனால் சனியின் ஏழரை சப்னியின் பாதிப்பு இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.


மகரம்


ஜோதிட சாஸ்திரத்தின்படி, வியாழன் சஞ்சாரம் மகர ராசிக்காரர்களுக்கும் சாதகமாக இருக்கும். வியாழன் இந்த ராசியிலிருந்து நான்காவது வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இது, மகர ராசிக்காரர்களுக்கு சுகத்தைக் கொடுக்கும் காலமாக இருக்கும்.


சொத்து அல்லது வாகனம் போன்றவற்றை வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த நேரம் சாதகமானது. அதே சமயம் மூதாதையர் சொத்துக்களும் கிடைக்கும். வணிக ஹோட்டல்கள், சுற்றுலாக்கள், பயணங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் ஈடுபடுபவர்களுக்கு இந்த நேரம் சிறந்தது.


மேலும் படிக்க | Rahu Bad Effects: சூரியனையே விழுங்கும் ராகுவால் ஏற்படும் துன்பங்கள்! பரிகாரங்கள் பலன் தரும்


மிதுனம்


குருப் பெயர்ச்சி, மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். மிதுன ராசிக்காரர்களின் வருமான வீட்டை வியாழன் பார்க்கப் போகிறார் என்பதால், ஊடகங்கள் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்.


இந்த காலகட்டத்தில் வருமானம் அதிகரிக்கும். பணத்தை முதலீடு செய்ய நினைத்தால், இந்த நேரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பெரிய ஒப்பந்தம் கிடைக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | மஹாசிவராத்திரி: மன விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற ராசிக்கு ஏற்ற ‘அபிஷேகங்கள்’! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ