ஏழரை நாட்டு சனி - பலனளிக்கும் பரிகாரங்கள்: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுளாக கருதப்படுகிறார். ஒவ்வொரு நபரும் செய்யும் நன்மை தீமைகளுக்கு ஏற்றவாறு அவர் பலன்களை அளிக்கிறார். சனியை போல் கொடுப்பவரும் இல்லை, கெடுப்பவரும் இல்லை. பொதுவாக சனியின் கோபப்பார்வை குறித்த அச்சம் அனைவருக்கும் இருக்கும். அவரது கோபத்தை யாரும் எதிர்கொள்ள விரும்புவதில்லை. சனியின் தாக்கத்தால் மக்கள் கடுமையான துன்பங்களுக்கு ஆளாகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏழரை நாட்டு சனி என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் குறைந்தது மூன்று முறை வரக்கூடிய ஒரு நிகழ்வாகும். முதல் முறை மங்கு சனி என்றும், இரண்டாம் முறை பொங்கு சனி என்றும், மூன்றாம் முறை மரண சனி என்றும் இது அழைக்கப்படுகிறது. சனி பகவான் ஒவ்வொரு இராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வாசம் செய்வார். நமது இராசிக்கு முந்தைய இராசியில் சனி வரும்போது, நமக்கும் ஏழரை ஆண்டு கால நிகழ்வு துவங்கும். முந்தைய இராசியில் இரண்டரை வருடம், நமது ஜென்ம இராசியில் இரண்டரை வருடம், நமது இராசிக்கு அடுத்த இராசியில் இரண்டரை வருடம் என மொத்தமாக ஏழரை ஆண்டுகாலம் அதன் தாக்கம் நமக்கு இருக்கும். இந்த ஏழரை ஆண்டு காலம் விரைய சனி (முதல் கட்டம்), ஜென்ம சனி (இரண்டாம் கட்டம்) மற்றும் பாத சனி (மூன்றாம் கட்டம்) என மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 


இந்த காலத்தில் மக்களின் வாழ்வில் பெரிய மாறுதல்கள் தோன்றும். பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். எனினும், ஏழரை ஆண்டு கால முடிவில், சனி பகவான் பல வித நன்மைகளை செய்துவிட்டுச் செல்வார். மேலும், இந்த காலகட்டத்திலேயே நாம் சில நல்ல செயல்களை செய்வதன் மூலமும், சில பரிகாரங்களை செய்வதன் மூலமும், சனியின் அருளை பெற்று, தீவினைகளை குறைக்கலாம். 


ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தை குறைக்கும் சில எளிய பரிகாரங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 


பைரவர் வழிபாடு:


ஏழரைச் சனி நடக்கும் காலங்களில் பைரவரை வழிபடுவது அபரிமிதமான நன்மைகளை அள்ளிக்கொடுக்கும். அஷ்டமியில் பைரவரை கோயிலில் சென்று தரிசிக்கலாம். தினமும் பைரவர் ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்யலாம்.


மேலும் படிக்க | ராகுவின் வக்ர பெயர்ச்சியினால் ‘இந்த’ ராசிகளின் தலைவிதி மாறும்! 


சனி பகவான் காயத்ரி / சனி சாலிசா


சனிக் கிழமைகளில் சனியின் காயத்திரி மந்திரத்தை சொல்லுவது,  சனி சாலிசா சொல்வது நல்ல பலன்களை அளிக்கும். பூஜை அறையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி தியானிப்பது நல்லது. 


அரச மர வழிபாடு: 


அரச மரத்தடியில் நீர் விட்டு, தீபம் ஏற்றி, மரத்தை சுற்றி வந்து வழிபடலாம். இதை தினமும் செய்யலாம் என்றாலும், சனிக்கிழமைகளில் செய்வது சிறப்பு நன்மைகளை அளிக்கும். 


அன்னதானம்


ஏழை எளியவர்கள், தேவையில் இருப்பவர்கள் என இப்படிப்பட்ட நலிந்தோருக்கு செய்யும் உதவிகள் மூலம் சனி பகவான் எப்போதும் மகிழ்ச்சியடைகிறார். ஆகையால், முடிந்தபோதெல்லாம் தேவையில் உள்ளவர்களுக்கு அன்னதானம் செய்வது மிகுந்த நன்மை தரும்.


ஹனுமான் சாலீசா:


ஆஞ்சநேயரின் பக்தர்களை சனி பகவான் தொல்லைப்படுத்துவதில்லை. ஆகையால் ஏழரை சனி காலத்தில் ஹனுமான் சாலிசா பாராயணம் செய்வது நன்மை பயக்கும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ரிஷப ராசியில் வக்ர செவ்வாய்: 108 நாட்கள் கஷ்டப்படப் போகும் ராசிகள் ‘3’ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR