ராகுவின் வக்ர பெயர்ச்சியினால் ‘இந்த’ ராசிகளின் தலைவிதி மாறும்!

நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு-கேது கிரகங்களின் நிலை மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ராகு மற்றும் கேது கிரகங்கள் எப்பொழுதும் வக்ர நிலையில் பெயர்ச்சி ஆகின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 25, 2022, 07:35 AM IST
  • வருமானம் அதிகரிப்பதால் எந்தப் பிரச்சினையும் இருக்காது.
  • வியாபாரத்தில் சாதகமான காலம் அமையும்.
  • உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறலாம்.
ராகுவின் வக்ர பெயர்ச்சியினால் ‘இந்த’ ராசிகளின் தலைவிதி மாறும்! title=

ராகு பெயர்ச்சி 2023: ஜோதிடத்தில், நிழல் கிரகங்கள்  என்று அழைக்கப்படும் ராகு-கேது கிரகங்களின் நிலை மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ராகு மற்றும் கேது கிரகங்கள் எப்பொழுதும் வக்ர நிலையில் பெயர்ச்சி ஆகின்றன. இவை ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ராசி மாறுகின்றன. 2023 ஆம் ஆண்டு, அக்டோபர் 30 ஆம் தேதி ராகு தனது ராசியை மாற்றி மீன ராசியில் நுழைகிறார். இந்நிலையில் 2023ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து ராகு முதல் 10 மாதங்கள் மேஷ ராசியில் இருப்பார். இத்தகைய சூழ்நிலையில், 4 ராசிக்காரர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அக்டோபர் 2023 வரையிலான நேரம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.

2023ம் ஆண்டு சில ராசிக்காரர்களிடம் ராகு கருணையை அள்ளி வழங்குவார்

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு ராகு பண பலன்களை அதிகம் தருவார். பெரிய செலவுகளைச் சந்திக்க நேரிடும் என்றாலும், வருமானம் அதிகரிப்பதால் எந்தப் பிரச்சினையும் இருக்காது. வியாபாரத்தில் சாதகமான காலம் அமையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறலாம். வேலை தொடர்பான பயண திட்டத்தில் பங்கேற்கலாம். லாபகரமான பயணமாக முடியும்.

கடகம்: எதிர்பாராத விதமாக திடீரென பணம் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். புதிய வருமான வழிகள் கிடைக்கும், பணத் தட்டுப்பாடு இருக்காது. நண்பர்கள், உறவினர்களின் உதவியால் காரியம் முடிவடையும். முன்னேற்றம் அடைய வாய்ப்புகள் உண்டு.

மேலும் படிக்க | புத்தாண்டின் லக்கி ராசிகள் இவை: பணியிடத்தில் ஏற்றம், வியாபாரத்தில் லாபம், வாழ்வில் மகிழ்ச்சி!! 

விருச்சிகம்: மேஷ ராசியில் ராகுவின் வக்ர பெயர்ச்சி உங்கள் செல்வாக்கை அதிகரிக்கும். உங்கள் எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். தன்னம்பிக்கையின் அடிப்படையில் அனைத்து வேலைகளும் நடக்கும். பண வரவும் சாதகமாக இருக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். தொழிலில் பெரிய வாய்ப்புகள் அமையும். வாழ்க்கையில் மறக்க முடியாத பயணம் செல்லலாம்.

கும்பம்: கும்ப ராசிக்கு ராகு மிகவும் சுப பலன்களைத் தருவார். வியாபாரத்தில் ஏற்றம் உண்டாகும். ரிஸ்க் எடுத்தாலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயன் பெறலாம். வெளிநாடு செல்லும் கனவு நிறைவேறும். வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | கும்ப ராசியில் நுழையும் சனியினால் ‘3’ ராசிகளுக்கு பண நெருக்கடி ஏற்படும்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News