ரிஷப ராசியில் வக்ர செவ்வாய்: 108 நாட்கள் கஷ்டப்படப் போகும் ராசிகள் ‘3’

Mars Transit November 2022: இந்த 3 ராசிகளும் செவ்வாயின் வக்ரப் பெயர்ச்சியால் ஒரு மண்டலத்துக்கு பிரச்சனைகளை சமாளித்தால் போதும்... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 25, 2022, 06:40 AM IST
  • செவ்வாயின் வக்ரப் பெயர்ச்சியால் ஒரு மண்டலத்துக்கு பிரச்சனை
  • இன்னும் 108 நாட்கள் கஷ்டப்படப் போகும் ராசிகள்
  • ரிஷப ராசியில் வக்ர செவ்வாய்
ரிஷப ராசியில் வக்ர செவ்வாய்: 108 நாட்கள் கஷ்டப்படப் போகும் ராசிகள் ‘3’ title=

நியூடெல்லி: நவம்பர் 13ஆம் தேதி முதல் ரிஷப ராசியில் வக்ர பெயர்ச்சியாக உள்ள செவ்வாய் சஞ்சரிப்பது சில ராசிக்காரர்களுக்கு வேலை, தொழில் - வியாபாரத்தில் பெரும் பின்னடைவைத் தரும். செவ்வாயின் வக்ர பெயர்ச்சியினால் கவலையில் இருக்கும் ராசிகள் எவை என்பதை தெரிந்துக் கொள்வோம். 120 நாட்கள் தான் பிரச்சனை என்றாலும், அதில் 12 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இனி ஒரு மண்டலம் அதாவது 108 நாட்கள் தான் பிரச்சனை, அடுத்த செவ்வாய்ப் பெயர்ச்சி இவர்களுக்கு வளமான வாழ்வை வழங்கலாம், எனவே இந்தப் பெயர்ச்சியை கவனமாக கையாளுங்கள் மகர ராசிக்காரர்களே...  

மகர ராசி 
மகர ராசிக்காரர்களுக்கு செவ்வாய் நான்காம் மற்றும் பதினொன்றாம் வீட்டிற்கு அதிபதி ஆவார். செவ்வாய் மகர ராசியில் உச்சத்தில் இருந்தாலும், மகர ராசியின் அதிபதியான சனி மற்றும் செவ்வாய்க்கு இடையில் எதிரித்தன்மை இருப்பதால், கிரக அதிபதிகளின் விரோத போக்கினால், சனியின் கோபப்பார்வையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, திறமை குறைவானவர்கள் பின்னடைவை சந்தித்தால், திறமை உள்ளவர்கள் தங்களுக்கான முழு பலனையும் பெற முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். 

செவ்வாயின் இந்த சஞ்சாரத்தில், ​​பணியிடத்தில் மேலதிகாரிகளுடனான உறவு சமூகமாக இல்லாமல் போகலாம். இந்த காலகட்டத்தில் வேலையை மாற்ற வேண்டாம், மேலும் நண்பர்கள் மற்றும் பெரியவர்களிடம் இருந்து உங்களுக்கு ஒத்துழைப்பு கிடைப்பதற்கான வாய்ப்பும் குறைவு.

தொழில்முறை விஷயங்களைக் கையாளும் போது, பேசும் முறையையும் உங்கள் கருத்தை முன்வைப்பதில் நிதானத்தையும் கடைபிடிக்க வேண்டியிருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவதும், பொறுமையைக் கடைப்பிடிப்பதும் நிம்மதியைத் தரும்.   திருமணமான தம்பதிகளுக்கு இடையில் சில விஷயங்களில் மோதல் போக்கு நிலவும். காதல் வாழ்க்கையை கவனமாகக் கையாள்வது நல்லது. அனைத்து தரப்பினருடனும் எச்சரிக்கையாக பேசுவது நல்லது.

மேலும் படிக்க | புத்தாண்டின் லக்கி ராசிகள் இவை: பணியிடத்தில் ஏற்றம், வியாபாரத்தில் லாபம், வாழ்வில் மகிழ்ச்சி!!

கும்ப ராசி 
கும்ப ராசிக்காரர்களுக்கு மூன்றாம் மற்றும் பத்தாம் வீடுகளுக்கு அதிபதி செவ்வாய். செவ்வாய் கிரகத்தின் எதிரியான சனியால் ஆளப்படுகிறது. கும்பத்தில் செவ்வாய் உள்ளவர்கள் வாழ்க்கையின் அறிவுசார் பக்கத்தில் அதிக கவனம் செலுத்துவார்கள். அவர்களின் அமைப்பு வலுவானது, மேலும் அவர்கள் தங்கள் அணுகுமுறையில் கணக்கீடு மற்றும் தர்க்கரீதியானவர்களாக வலுவாக இருக்கிறார்கள். 

ஆனால், இந்த காலகட்டம் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தராது. உங்கள் நெருங்கியவர்களுடனான உங்கள் உறவிலும் உங்கள் நட்பு வட்டத்திலும் உங்கள் தர்க்கரீதியிலான பேச்சு  பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம். 
உங்கள் இலக்குகளை அடைவதற்கான உங்கள் கடின உழைப்பில்  தடைகள் ஏற்படலாம். இந்தக் காலக்கட்டத்தில் எந்த ஒரு புதிய திட்டத்தையும் தொடங்க முயற்சிக்காதீர்கள். எதிரிகளால் பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வருமான ஆதாரம் கிடைக்கும் ஆனால் தடைகளுக்கு பிறகே அது கிடைக்கும். திருமணமான தம்பதிகள் அதிகார மனப்பான்மை காரணமாக சில தவறான புரிதலை உருவாக்கலாம். பெருங்குடல் வலி, பித்தம் அல்லது அமிலத்தன்மை பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், உங்கள் உடல்நல விஷயங்களில் சரியான கவனம் செலுத்தவும். மருத்துவ செலவுகள் ஏற்படலாம்

மேலும் படிக்க | சுக்கிரன் மாற்றத்தால் உருவாகும் அஷ்டலக்ஷ்மி ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு சுக்கிரதசை 

மீன ராசி

மீன ராசிக்கு, செவ்வாய் இரண்டாவது மற்றும் ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதி. இது செவ்வாய் கிரகத்துடன் நட்புடன் இருக்கும் குரு பகவானால் ஆளப்படுகிறது. ஆன்மீக நாட்டத்தை கொடுக்கும் குரு பகவான், ஒழுக்கம் மற்றும் நன்னடத்தையை விரும்பி, பக்தி மார்க்கத்தை கொடுப்பார். இந்த காலகட்டத்தில், பணியிடத்தில் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும்,

மேலும் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் இரண்டாவது கருத்தையும் பரிசீலிக்க வேண்டும். நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளை எதிர்த்துப் போராட வேண்டிய காலகட்டம் இது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | கும்ப ராசியில் நுழையும் சனியினால் ‘3’ ராசிகளுக்கு பண நெருக்கடி ஏற்படும்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News