ஹன்ஸ்-மாளவ்ய ராஜயோகத்தால் இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை, மகிழ்ச்சி மழை
Hans-Malavya Rajayogam: ஹன்ஸ் ராஜ யோகம் மற்றும் மாளவ்ய ராஜ யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், சில ராசிகளில் இந்த யோகங்களால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும்.
ஹன்ஸ்-மாளவ்ய ராஜயோகம்: வேத ஜோதிடத்தின்படி, கிரகங்களின் பரிமாற்றத்தால் பல மங்களகரமான யோகங்கள் உருவாக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, கிரகங்கள் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இதனால் ராசிகளின் வாழ்வில் பல வித தாக்கங்கள் ஏற்படுகின்றன. இந்த ஆண்டும் பல பெரிய கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறவுள்ளன.
ஜோதிட சாஸ்திரப்படி, தேவகுரு வியாழன் தனது ராசியை மாற்றவுள்லார், சுக்கிரனும் மீன ராசிக்குள் பிரவேசிக்கவுள்ளார். ஜோதிடத்தில், சுக்கிரன் ஆடம்பர வாழ்க்கை, பூவுலக இன்பம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் கிரகமாக கருதப்படுகிறது. மறுபுறம், குரு பகவான்அறிவாற்றல், முன்னேற்றம் மற்றும் செல்வத்தின் காரணியாகக் கருதப்படுகிறார். 12 வருடங்களுக்குப் பிறகு மீன ராசியில் குருவும் சுக்கிரனும் இணையவுள்ளார்கள். இந்த இரண்டு கிரகங்களின் சந்திப்பால், ஹன்ஸ் ராஜ யோகம் மற்றும் மாளவ்ய ராஜ யோகம் உருவாகப் போகின்றன. இந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், சில ராசிகளில் இந்த யோகங்களால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும்.
கடக ராசி
ஜோதிட சாஸ்திரத்தின்படி, கடக ராசிக்காரர்களுக்கு ஹன்ஸ் மற்றும் மாளவ்ய ராஜயோகம் நல்ல பலன் தரும். இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். நிதி நிலையில் பலம் இருக்கும். இக்காலத்தில் தடைபட்ட வேலைகள் முடியும். இந்த சேர்க்கை உங்களை வெளிநாடு செல்ல வைக்கும். அதே நேரத்தில், வேலையில்லாதவர்களும் இந்த நேரத்தில் வேலை பெறலாம். இது தவிர மாணவர்களுக்கும் இந்த நேரம் நன்றாக இருக்கும்.
மேலும் படிக்க | 700 ஆண்டுக்கு உருவாகும் 5 ராஜயோகங்கள், இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்
தனுசு
ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த கிரகங்களின் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு சுப மற்றும் மகிழ்ச்சிகரமான பலன்களைத் தரும். அரசியலுடன் தொடர்புடையவர்கள் இந்த நேரத்தில் பெரிய பதவியைப் பெறலாம். இந்த காலகட்டத்தில் கிரகங்களின் நிலையும் குறிப்பாக நன்மை பயக்கும். நீண்ட நாட்களாக இருந்த கவலைகள் நீங்கும். வீட்டின் சூழல் இனிமையாக இருக்கும்.
மீனம்
மீனத்தில் வியாழன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை உருவாகப் போகிறது. இது இந்த ராசிக்காரர்களுக்கு குறிப்பாக நல்ல பலனைத் தரும். மீன ராசிக்காரர்களுக்கு ஹன்ஸ் மற்றும் மாளவ்ய ராஜயோகம் நல்ல அற்புதமான மகிழ்ச்சியை அளிக்கும். இந்த நேரம் உங்கள் தைரியத்தையும் பலத்தையும் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் சகோதர சகோதரிகள் மூலம் உதவிகள் வந்து சேரும். வெளியூர் தொடர்பான வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இந்த நேரம் வேலைக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ