புதன்-சுக்கிரன் இணைப்பு: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு கிரகம் மற்றொரு கிரகத்துடன் இணைவதால் ஏற்படும் பலன் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. இப்போது ஜூன் 18 ஆம் தேதி, புதன் மற்றும் சுக்கிரன் கிரகங்கள் இணைய உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூன் 18 ஆம் தேதி, சுக்கிரன் கிரகம் தன்னுடைய ராசியான ரிஷப ராசியில் பிரவேசிக்கும். அங்கு ஏற்கனவே புதன் கிரகம் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இரண்டு கிரகங்களின் சேர்க்கை உருவாகப் போவதால் மகாலட்சுமி யோகம் உருவாகும்.


ஆடம்பரம், செல்வம், செழிப்பு, காதல், ஐஸ்வர்யம் போன்றவற்றுக்கு சுக்கிரன் கிரகம் காரணியாக உள்ளது. அதே நேரத்தில், புதன் கிரகம் புத்திசாலித்தனம், தர்க்கம், உரையாடல், தகவல் தொடர்பு மற்றும் புத்திசாலித்தனத்தின் காரணியாக கருதப்படுகிறது. 


மேலும் படிக்க | ஜாகத்தில் வியாழன் கிரகம் வலுவாக இருக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் 


இந்த இரண்டு கிரகங்களும் இணைவதால், அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையையும் பாதிக்கும் மகாலட்சுமி யோகம் உருவாகி வருகிறது. எனினும் 3 ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் மிகவும் சாதகமாக அமையப் போகிறது. அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


மஹாலக்ஷ்மி யோகத்தால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜொலிக்கும்


மேஷம்:


ஜோதிட சாஸ்திரப்படி இந்த யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு இரண்டாம் இடத்தில் உருவாகி வருகிறது. ஜாதகத்தில் இரண்டாம் இடம் பணம் மற்றும் பேச்சுக்கான ஸ்தானமாக கருதப்படுகிறது. எனவே, தற்செயலான பண வரவு இருக்கக்கூடும். வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. 


இந்த காலகட்டத்தில் சிக்கிய பணத்தை மீட்டெடுக்க முடியும். இந்த நேரத்தில், நிதி நிலைமை மேம்படும். பேச்சு சம்பந்தமான வேலையில் இருப்பவர்கள் இக்காலத்தில் ஆதாயமடைவார்கள். மேஷ ராசிக்காரர்கள் இந்தக் காலத்தில் மரகத ரத்தினம் அணிந்தால் அதிகப்படியான நன்மை கிடைக்கும். 


கடகம்:


கடக ராசிக்காரர்கள் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் நன்மை அடைவார்கள். இந்த ராசிக்கு 11ம் வீட்டில் மகாலட்சுமி யோகம் அமைகிறது. இது லாபம் மற்றும் வருமானத்துக்கான இடமாக பார்க்கபப்டுகின்றது. எனவே, இந்த காலத்தில் இவர்களின் வருமானம் அதிகரிக்கலாம். 


புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். வியாபாரத்தில் லாபம் கூடும். இந்த காலகட்டத்தில் ஒரு பெரிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படலாம். மகாலட்சுமி யோகத்தின் போது அன்னை லட்சுமியின் அருள் உங்கள் மீது நிலைத்திருக்கும். 


சிம்மம்:


சிம்ம ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகி வருகிறது. இந்த இடம் வேலை மற்றும் மற்றும் பணிக்கான ஸ்தானமாக பார்க்கப்படுகின்றது. அத்தகைய சூழ்நிலையில், இந்த காலகட்டத்தில் நீங்கள் ஒரு புதிய வேலை வாய்ப்பைப் பெறலாம். 


வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. நீங்கள் ஒரு வேலையைச் செய்து கொண்டிருந்தால், இந்த காலகட்டத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்பு உள்ளது. இந்தக் காலத்தில் அன்னை லட்சுமியின் அருள் நிலைத்திருக்கும். மரகதம் அணிவது உங்களுக்கு மங்களகரமாக இருக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ரிஷப ராசிக்குள் நுழையும் சுக்ரன்; குபேரன் ஆகப் போகும் 2 ராசிக்காரர்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR