Jupiter Nakshatra Transit in Mrigasirita Horoscope: வேத ஜோதிடத்தின்படி, நவகிரகங்களும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றிக் கொண்டே இருக்கும். இதன் பலன் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப பலன்களை தரக்கூடும். அந்த வகையில் இந்து பஞ்சாங்கத்தின் படி மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், செல்வன், கல்வி, குழந்தை பாக்கியம் மற்றும் செழிப்பு போன்றவற்றை அள்ளிக் கொடுக்கும் குரு வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி, 2024 அன்று ரோகிணி நட்சத்திரத்தில் இருந்து வெளியேறி, மிருகசீரிட நட்சத்திரத்தில் நுழைந்துப் போகிறது, இதன் பிறகு அடுத்த 3 மாதங்களுக்கு அதாவது நவம்பர் 28 ஆம் தேதி, 2024 அன்று மதியம் 01:10 மணி வரை மிருகசீரிட நட்சத்திரத்தில் தான் பயணத்தை மேற்கொள்வார். இதனால் 12 ராசிகளுக்கும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவார் குரு பாகவான். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனினும் குருவின் நட்சத்திர பெயர்ச்சி ஒரு சில ராசிகளுக்கு மிகவும் அற்புதமான பலன்களை அள்ளித் தரும். இந்த நேரத்தில், உங்களின் வேலைகள் சுறுசுறுப்பாக நிறைவு பெரும். செல்வ வளர்ச்சி இருக்கும். மகிழ்ச்சியும் அதிகரிக்கும். இந்நிலையில் குரு நட்சத்திர பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கட்டு கட்டாக பணம், அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.


மேலும் படிக்க | Venus Ketu In Virgo: கேது சுக்கிரன் இணைவால் கோடி கோடியாக பணம்.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்


ரிஷபம் (Taurus Zodiac Sign): குரு நட்சத்திர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்மை தரும் பலனைத் தரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொறுப்புகளை பெறுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்தும் கௌரவமும் தானாகவே உயரும். புதிய வழியில் இருந்து வருமானம் அதிகரிக்கும். இதன் மூலம் நிதி ஆதாயம் உண்டாகும்.


சிம்மம் (Leo Zodiac Sign): குரு நட்சத்திர பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழிலை மேலே கொண்டு செல்ல உதவும். தொழிலில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் ஒருவழியாக முடிவுக்கு வரும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படலாம். எதிர்பாராத இடத்தில் இருந்து வருமானம் வரும், இதன் மூலம் நிதி ஆதாயம் உண்டாகும்.


தனுசு (Sagittarius Zodiac Sign): குரு நட்சத்திர பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். அடுத்து வரும் மூன்று மாத காலம் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாகவும் சாதகமாகவும் இருக்கும். செல்வச் செழிப்பும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். மூதாதையர் சொத்துக்களால் பண ஆதாயம் உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.


குரு பகவானின் அருள் பெற காயத்ரீ மந்திரத்தை துதிக்கவும் "குரு ஓம் பிரஹஸ்பதீச வித்மஹே சுராசார்யாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத். ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்".


மேலும் படிக்க | Venus Transit: இன்னும் 6 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: அதிர்ஷ்டம், பொன்னான ராஜ பொற்காலம் பெறப்போக்கும் ராசிகள் இவைதான்


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ