புதுடெல்லி: ஜோதிட சாஸ்திரப்படி நவகிரகங்களில் ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன்,வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிரகங்கள் இருந்தால் அதை கால சர்ப்ப யோகம் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இதை கால சர்ப்ப தோஷம் என்று அழைப்பார்கள்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் தோஷம் என்பதை விட யோகம் என்று சொல்வதே பொருத்தமானது. காரணம், கால சர்ப்ப யோகமுள்ள ஜாதக அமைப்பில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையின் முற்பகுதியில் சிரமங்கள் ஏற்பட்டாலும் பிற்பகுதி வாழ்க்கை சிறப்பான யோக காலமாக அமையும் என்பதால் தான் கால சர்ப்ப யோகம் என்று அழைக்கவேண்டும் என்று பல ஜோதிடர்கள் வலியுறுத்துகின்றனர். 


கிரகங்கள் அமையும் தன்மை பொருத்து கால சர்ப யோகத்தை பல வகைகளாக பிரிக்கலாம். கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் ராகு கேது நிற்கும் நட்சத்திரத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்வது நன்மையைத் தரும்.


அதேபோல, ஸ்வாதி, சதயம், திருவாதிரை நட்சத்திரம் வரும் நாட்களில் உள்ள பிரதோஷ காலத்தில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்தால் ராகு கேதுவின் தீமைகள் நீங்கி எதிர்மறையான பலன்களின் வீரியம் குறைந்திடும்.


மேலும் படிக்க | செவ்வாய் தோஷம் இருக்கிறதா: கல்யாணக் காரகர் எந்த பாவகத்தில் இருக்கக்கூடாது


 


கால சர்ப்ப யோகம் மாறுபடுவதற்கு காரணம் என்ன
லக்னம் முதல் 12 ஆம் இடம் வரை ராகுவும் கேதுவும் சஞ்சரிக்கும் இடத்தைப் பொறுத்து கால சர்ப்ப யோகம் ஆளுக்கு ஆள் மாறுபடும். லக்னத்தில் ராகு இருக்கும் நிலையில், கேது ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கும் நிலையில், பிற ஏழு கிரகங்களும் இடையில் அமர்ந்திருக்கும். 


இதுபோன்ற ஜாதக அமைப்பு இருப்பவர்களுக்கு இளமை காலம் கடினமானதாக இருக்கும். சிலருக்கு திருமணத்தடை இருக்கும். திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை இவர்களுக்கு நிம்மதியானதாக மாறிவிடும்.


திருமணத்தில் பாதிப்பு
ஏழாம் வீட்டில், ராகு லக்னத்தில் கேது இருந்தால் அது கால மிருத்யு சர்ப்ப தோஷம். இவர்களுக்கு 27வயதுக்கு பிறகு தான் திருமணம் செய்ய வேண்டும். இதே போல அமைப்புள்ள ஆணையோ பெண்ணையோதான் திருமணம் செய்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் திருமணத்தில் சிக்கல்கள் ஏற்படலாம். 


மேலும் படிக்க | சனி பகவானின் அருளைப் பெற்றுத் தரும் 14 பழக்கங்கள்


பயணம் செய்யும் யோகம்
பதினோராம் இடத்தில் ராகு மற்றும் ஐந்தாம் இடத்தில் கேது இருந்தால் அதன் பெயர் விஷ்தார கால சர்ப்ப தோஷம். அடிக்கடி பயணம் மேற்கொள்ளும் வேலையில் இருப்பவர்களுக்கு கால சர்ப்ப யோகம் இருக்கும். 


ராகு மூன்றாம் வீட்டிலும் கேது ஒன்பதாம் வீட்டிலும் இருப்பதை வாசுகி கால சர்ப்பதோஷம் என்கிறோம். வேலை  மற்றும் தொழிலில் இவர்களுக்கு எப்போதும்  ஏதாவது பிரச்சனை வந்து கொண்டேயிருக்கும். இதனால் இவர்கள் எந்த வேலையிலும் முன்வந்து துணிந்து இறங்க மாட்டார்கள்.


ஒன்பதாம் வீட்டில் ராகுவும் மூன்றாம் வீட்டில் கேதுவும் இருந்தால் சங்ககுட கால சர்ப்பதோஷம் ஏற்படும். இவர்களுக்கு சீரான வாழ்க்கை அமையாது. தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ளும் போராட்டமான வாழ்க்கை சங்ககுட கால சர்ப்ப தோஷத்தினருக்கு உண்டு.  


நான்காம் வீட்டில் ராகுவும் பத்தாம் வீட்டில் கேது இருந்தால் சங்கல்ப கால சர்ப்ப தோஷம் ஏற்படும். மன அழுத்தத்தினால் இவர்களுக்கு நிம்மதி இருக்காது. 


மேலும் படிக்க | இறப்பை கணிக்கும் ஜாதகத்தின் எட்டாம் பாவகமும் கேதுவின் தாக்கமும்


10ஆம் வீட்டில் ராகு மற்றும் நான்காம் வீட்டில் கேது இருந்தால் அதன் பெயர் கடக கால சர்ப்ப தோஷம் ஏற்படும். தொழில் ஸ்தானத்தில் ராகு இருந்தால் வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகள் ஏற்படும்.  


புத்திர தோஷம்
ஜாகத்தில் ஐந்தாம் வீட்டில் ராகு மற்றும் பதினோராம் வீட்டில் கேது இருப்பவர்களுக்கு பத்ம கால சர்ப்ப தோஷம் இருக்கும். இதை யோகமாக சொல்லமுடியாது. ஏனென்றால் இந்த நிலை புத்திர தோஷத்தை கொடுக்கக்கூடியது. 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சனியின் வீட்டிற்கு விருந்தினராக செல்லும் செவ்வாய் பகவான்! துக்கப்படப் போகும் 7 ராசிகள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR