Trigrahi Yog Formed by Mercury Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி, பிப்ரவரி மாதம் கிரக பெயர்ச்சிகளின் அடிப்படையில் சுகமானதாகும் லாபகரமானதாகவும் பார்க்கப்படுகின்றது. ஏனென்றால் இந்த மாதத்தில் பல கிரகங்களின் நட்சத்திர மற்றும் ராசி மாற்றங்கள் உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிட நாட்காட்டியின் படி கிரகங்களின் இளவரசராக கருதப்படும் புதன் தனது ராசியை மாற்றவுள்ளார். அவர் இருபதாம் தேதி கும்பத்தில் பெயர்ச்சி ஆவார். ஏற்கனவே கும்ப ராசியில் சூரியனும் சனி பகவானும் உள்ளனர். இந்த நிலையில் இருபதாம் தேதி முதல் கும்பத்தில் சூரியன் சனி மற்றும் புதனின் சேர்க்கை இருக்கும்.


இந்த மூன்று கிரகங்களும் ஒன்றாக சேர்ந்து திரிகிரகி யோகத்தை (Trigrahi Yog) உருவாக்குகின்றன. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். இவர்களது வாழ்வில் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் தென்படும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்


மேஷம் (Aries)


ஜோதிட சாஸ்திரத்தின்படி பிப்ரவரி மாதம் உருவாகும் திரிகிரகி யோகம் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் வகையில் இருக்கும். புதனின் அருளால் மேஷ ராசிக்காரர்கள் பணியிடத்தில் நல்ல பெயரை பெறுவார்கள். இவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். அனைத்து ஆசைகளும் நிறைவேறும். மிக விரைவில் முன்னேற்றத்திற்கான பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். 


மூதாதையர் சொத்தால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினரின் முழுமையான ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு இப்போது லாபகரமான காலமாக இருக்கும். அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகமாகும்.


மேலும் படிக்க | மகரத்தில் சுக்கிரன்: இந்த ராசிகள் மீது லட்சுமி கடாக்ஷம், சுக்கிர தசை ஆரம்பம்


மிதுனம் (Gemini)


மிதுன ராசிக்காரர்களுக்கு திரிகிரகி யோகம் சுப பலன்களை அள்ளித்தரும். ஜாதகத்தில் ஒன்பதாம் ஸ்தானத்தில் இந்த யோகம் உருவாகிறது. இந்த காலத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள். இதனால் உங்கள் மனம் மகிழ்ச்சியடையும்.


அலுவலகப் பணிகளில் இருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு இப்போது நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வணிகத்தில் முன்னேற்றத்திற்கான அதிக வாய்ப்புகள் கிடைக்கும். மிதுன ராசியில் உள்ள மாணவர்களுக்கு இப்போது போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். மொத்தத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த திரிகிரகி யோகம் அதிகப்படியான நற்பலன்களை கொண்டு வரும்.


கும்பம் (Aquarius)


கும்ப ராசியில் தான் சூரியன், சனி மற்றும் புதனின் சேர்க்கை ஏற்பட்டு திரிகிரகி யோகம் உருவாகிறது. இந்த சுப யோகம் கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும். இந்த காலத்தில் நீங்கள் செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியை காண்பீர்கள். உங்கள் பொருளாதார நிலை மேம்படும். பணம் ஈட்டுவதற்காக வெளிநாடு செல்ல நினைப்பவர்களுக்கு இப்போது அதற்கான நல்ல வாய்ப்பு கிடைக்கும்.


எதிர்பாராத இடங்களில் இருந்து பணவரவு இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உருவாகும். நீங்கள் சாதிக்கும் விஷயங்களால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்.. திருமணமானவர்களுக்கு குடும்ப வாழ்க்கை மிக மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகளை கிடைக்கும்


மேலும் படிக்க| அஸ்தமனமாகும் சனி... எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ‘4’ ராசிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ