மகரத்தில் சுக்கிரன்: இந்த ராசிகள் மீது லட்சுமி கடாக்ஷம், சுக்கிர தசை ஆரம்பம்

Venus Transit: ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் மாற்றங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. 

Venus Transit: கிரகங்களின் ராசி மாற்றங்கள் கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. அறிவாற்றல், பேச்சாற்றல், அழகு, குடும்ப வாழ்க்கை, வெற்றி ஆகியவற்றின் காரணி கிரகமாக இருக்கும் சுக்கிரன் 12 ஆம் தேதி மகர ராசியில் பெயர்ச்சி ஆனார். மார்ச் 6 ஆம் தேதி வரை அவர் மகர ராசியில் இருப்பார். சுக்கிரனின் ராசி மாற்றத்தால் அனைத்து 12 ராசிகளிலும் (Zodiac Signs) நடக்கப்போகும் மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /13

சுக்கிரனின் ராசி மாற்றத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை துணையுடன் புரிதலும் அன்பு அதிகரிக்கும். நீங்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்கள் கடின உழைப்புக்கான பலன் இப்போது பரிபூரணமாக கிடைக்கும்.

2 /13

வணிகத்தில் இருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு இப்போது லாபம் அதிகரிக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. உடல் நலன் நன்றாக இருக்கும். நீண்ட நாட்களாக வாட்டி வதைத்து வந்த நோய்கள் தீரும்.

3 /13

சுக்கிரனின் ராசி மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நன்மைகளை கொண்டு வரும். உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். முதலீடு செய்ய இது நல்ல நேரமாக இருக்கும். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்கும்.

4 /13

கடக ராசியில் இருக்கும் இளைஞர்கள் இப்போது வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பார்கள். வேலை தேடிக் கொண்டிருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு இப்போது நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் முழுமையான ஆதரவு கிடைக்கும்

5 /13

சிம்ம ராசிக்காரர்களுக்கு சில வேலைகள் தடைபடலாம். முக்கியமான பணிகளை செய்யும்போது இறுக்கம் அதிகமாக இருக்கலாம். குடும்பத்தில் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். பொறுமையை கடைப்பிடித்தால் இவை அனைத்தும் சரியாகும்

6 /13

கன்னி ராசிகாரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகமாகும். இந்த காலத்தில் பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

7 /13

துலா ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகள் வரும். சிறு பயணங்களை மேற்கொள்வீர்கள். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.

8 /13

முக்கியமான பணிகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். முதியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்கவும். இவை சண்டைகளாக உருவெடுக்க கூடும்.

9 /13

நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பணிகள் இப்போது நிறைவடையும். வாழ்க்கையில் புதிய வகை மகிழ்ச்சி இருக்கும். அனைத்து விஷயங்களையும் குடும்ப உறுப்பினர்களிடம் கலந்தாலோசித்த பிறகு முடிவெடுப்பது நல்லது.

10 /13

வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் அருளால் அதிகப்படியான லாபம் கிடைக்கும். அதிக உழைப்பு இல்லாமலேயே உங்கள் காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

11 /13

உங்கள் குடும்பத்தில் நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு நல்ல செய்தி இப்போது கிடைக்கும். உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். வெளி உணவுகளை உட்கொள்ளாமல் இருந்தால் உடல் நலன் பாதிப்படையாமல் தவிர்க்கலாம்.

12 /13

புதிய பணிகளை இந்த காலத்தின் தொடங்குவீர்கள். அவை வெற்றிகரமாக நிறைவடையும். வியாபாரத்தில் இருக்கும்  மீன ராசிக்காரர்களுக்கும் அதிக லாபம் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். 

13 /13

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை