சர்வார்த்த சித்தி யோகம்... சிலருக்கு பண வரவு... சிலருக்கு பண விரயம்!

பிப்ரவரி 15ஆம் தேதி வியாழக்கிழமை அன்று சர்வாத்த சித்தி யோகம் கூறுகிறது. இது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் நிறைவேறும். நிதி ரீதியாக வருமானம் அதிகரிக்கும். பிப்ரவரி 15ஆம் தேதி யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் கைக்கூடி வரும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 14, 2024, 09:55 PM IST
சர்வார்த்த சித்தி யோகம்... சிலருக்கு பண வரவு... சிலருக்கு பண விரயம்! title=

பிப்ரவரி 15ஆம் தேதி வியாழக்கிழமை அன்று சர்வாத்த சித்தி யோகம் கூறுகிறது. இது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் நிறைவேறும். நிதி ரீதியாக வருமானம் அதிகரிக்கும். பிப்ரவரி 15ஆம் தேதி யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் கைக்கூடி வரும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

மேஷ ராசிகளுக்கு, அதிர்ஷ்டத்திற்கு குறைவே இருக்காது. உங்கள் முன்னேற்றத்தை பார்த்து சக ஊழியர்கள் பொறாமை கொள்ளும் அளவு உங்கள் வளர்ச்சி இருக்கும். மனைவியின் உடல்நிலை காரணமாக, அலைச்சல் ஏற்படலாம். ஆனாலும் பெரிய அளவில் பாதிப்பு ஒன்றும் இருக்காது. சமூகத்தில் உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கும்.

ரிஷப ராசி

ரிஷப ராசிகளுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி நிம்மதியை கொடுக்கும் நாளாக இருக்கும். விருந்தினர் வருகை மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். எதிர்பாராத பண வரவு மன மகிழ்ச்சியை கொடுக்கும். செல்வம் பெருகும். சுப காரியங்களில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

மிதுன ராசி

பிப்ரவரி 15ஆம் தேதி மகிழ்ச்சி அள்ளிக் கொடுக்கும் நாளாக இருக்கும். எதிர்பாராத வகையில் விலை உயர்ந்த பொருள் உங்களுக்கு பரிசாக கிடைக்கலாம். உங்கள் மன உறுதி அதிகரிக்கும். சாதனை செய்யும் ஆர்வம் ஏற்படும்.

கடக ராசி

கடக ராசியினருக்கு திடீர் பணவரவு சந்தோஷத்தை கொடுக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். ஆன்மீக உணர்வு அதிகரிக்கும். மேற்கொள்வதற்கான சாத்தியம் உண்டு.

சிம்ம ராசி

சிம்ம ராசியினருக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். நிலுவையில் இருக்கும் அனைத்து வேலைகளும் முடிவடையும். எனினும் உடல்நிலை சிறிது பாதிக்கும் வாய்ப்பு உண்டு எனவே கவனமாக இருக்கவும்.

கன்னி ராசி

கன்னி ராசியினருக்கு ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். எனினும் பாதகமான சூழ்நிலைகள் ஏதும் ஏற்பட்டால் கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து, மகிழ்ச்சி பிறக்கும்.

மேலும் படிக்க | shukra gochar 2024: மார்ச் மாதம் சுக்கிரன் உச்சம்.. இந்த 5 ராசிகளுக்கு ராஜ கோடீஸ்வர வாழ்க்கை

துலாம் ராசி

துலாம் ராசியினருக்கு சாதனை படைக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரம் உருவாகும். வாழ்க்கைத் துணையிடமிருந்து ஆதரவும் அன்பும் கிடைக்கும். பயணங்கள் சாதகமாக அமையும்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசியினருக்கு நிதி ரீதியாக ஆதாயம் தரும் நாளாக இருக்கும். எனினும் பேச்சில் கட்டுப்பாடு தேவை. இல்லையென்றால் பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும். கவனமாக இருங்கள்.

தனுசு ராசி

தனுசு ராசியினருக்கு வெற்றிகளை கொடுக்கும் நாளாக இருக்கும். ஆடம்பர விஷயங்களுக்காக பணத்தை செலவிடுவீர்கள். எனினும் செலவை கட்டுப்படுத்துவது நல்லது. உங்களுக்கு எதிரான சதிகள் முறியடிக்கப்படும்.

மகர ராசி மகர ராசியினருக்கு பொருளாதார நிலை மேம்படும் வாய்ப்பு உண்டு. எனினும் செலவுகள் அதிகரிக்கலாம். குடும்பத்தில் பொதுவாக மகிழ்ச்சி நிலவும்.

கும்ப ராசி

கும்ப ராசியினருக்கு செலவுகள் அதிகரிப்பதால் சிறிது பண நெருக்கடி ஏற்படலாம். மனைவியின் உடல் நிலையில் சிறிது பாதிப்பு ஏற்படலாம். எனவே கவனமாக இருக்கவும்.

மீன ராசி

மீன ராசியினருக்கு முயற்சிகள் அவிழ்த்து வெற்றி அடையும் ஒரு நாளாக இருக்கும். வேலையில் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மனதும் நிம்மதியாக இருக்கும்..

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | Sun Transit: கும்பத்தில் சூரியன்: இந்த ராசிகள் மீது பண மழை... செல்வச்செழிப்பில் திளைப்பார்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News