ஏப்ரல் மாதத்தில் கிரகங்களின் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: கிரக மாற்றங்களைப் பொறுத்தவரை ஏப்ரல் மாதம் மிகவும் சிறப்பான மாதமாக இருக்கும். வருடத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றும் தேவகுரு வியாழன் தனது சொந்த ராசியான மீனத்தை விட்டு 2023 ஏப்ரலில் மேஷ ராசிக்குள் நுழைகிறார். அங்கு ராகுவுடன் சூரியனும் இருப்பார். ஏப்ரல் 22ஆம் தேதி குரு பெயர்ச்சிக்குப் பிறகு மேஷ ராசியில் குருவும் ராகுவும் இருப்பதால் குரு சண்டாள யோகம் உண்டாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதவிர சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்களும் இந்த ராசியில் பெயர்ச்சியாகும். ஏப்ரல் மாதத்தில் சூரியன் தன் ராசியை மாற்றுவார். இந்த வகையில், ஏப்ரல் மாதத்தில் நடக்கவுள்ள கிரக பெயர்ச்சிகளால் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் பெரிய தாக்கம் ஏற்படும். எனினும், ஏப்ரல் மாதத்தில் 5 ராசிக்காரர்கள் மிகவும் சாதகமான பலன்களை பெறுவார்கள். 
 
ஏப்ரல் 2023 மாதத்தின் அதிர்ஷ்டக்கார ராசிகள்: 


ரிஷபம்:


ஏப்ரல் மாத கிரகப் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். சில நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும். பண விஷயத்தில் இந்த மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் மரியாதை அதிகரிக்கும். எனினும், யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.


மேலும் படிக்க | வாழ்க்கையை புரட்டிப் போடும் செவ்வாய் மஹாதிசை! தப்பிக்க செய்ய வேண்டியவை!


மிதுனம்: 


ஏப்ரல் மாதம் மிதுன ராசிக்காரர்களின் செல்வாக்கும், கௌரவமும் அதிகரிக்கும். தைரியமும், வீரமும் பெருகும். வியாபாரத்தில் பெரிய வெற்றியை அடைய முடியும். பண வரவு சாதகமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.


கடகம்: 


கடக ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் உகந்த மாதமாக இருக்கும். உங்களுக்கு அறிமுகமான ஒரு நபரின் உதவியால் பெரிய காரியம் ஒன்று நடந்துமுடியும். புதிய நபர்களின் தொடர்பு ஏற்பட்டு நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.


கும்பம்: 


கும்ப ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் மிகுந்த நிம்மதியைத் தரும். பழைய பிரச்சனைகள் நீங்கும். இந்த காலத்தில் செய்யப்படும் அனைத்து செயல்களிலும் வெற்றி உண்டாகும். கடினமான பணிகளும் இந்த மாதம் நல்ல விதமாக நடந்துமுடியும். பிரச்சனை வந்தாலும் எளிதில் தீரும்.


மீனம்: 


ஏப்ரல் மாத கிரகப் பெயர்ச்சி மீன ராசியினருக்கு வெற்றியைத் தரும். நீங்கள் எதிர்பார்க்காத வெற்றியைப் பெறலாம். பண பலம் உண்டாகும், பண வரவு அதிகமாக இருக்கும். மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும் சில நல்ல செய்திகள் கிடைக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் ஆமிந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இன்றைய ராசிபலன் - இந்த 3 ராசிகளுக்கு எச்சரிக்கை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ