குரு அஸ்தமனம், ராசிகளில் அதன் தாக்கம்: மார்ச் 28ஆம் தேதி, அதாவது இன்று குரு பகவான் தனது சொந்த ராசியான மீனத்தில் அஸ்தமிக்கப் போகிறார். அஸ்தமன நிலையில், குரு, ஏப்ரல் 22ஆம் தேதி மேஷ ராசியில் பிரவேசித்து ஏப்ரல் 27ஆம் தேதி உதயமாவார். ஜோதிடத்தில், தேவ குரு வியாழன் கல்வி, திருமணம், குழந்தைகள், செல்வம் மற்றும் அதிர்ஷ்டத்தின் காரணியாக கருதப்படுகிறார். குரு, சூரியனுக்கு 11 டிகிரி அல்லது அதற்கு மேல் அருகில் வரும்போது தானாகவே அஸ்தமனமாகிறார்.
பொதுவாக அஸ்தமன நிலையில், கிரகங்கள் தங்கள் சக்தியை இழக்கத் தொடங்குகின்றன. ஜோதிட சாஸ்திரத்தின் படி, தேவ குரு வியாழனின் அஸ்தமனமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். குருவின் அஸ்தமனம் அத்தனை சுபமாக கருதப்படவில்லை. குருவின் அஸ்தமனத்தால் பல ராசிக்காரர்களின் வாழ்வில் 1 மாதம் சில பாதகமான பலன்கள் இருக்கப் போகிறது. அந்த ராசிகள் எவை, அவற்றின் மீது ஏற்படப்போகும் தாக்கம் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.
இந்த 6 ராசிக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள்
மேஷம்:
குரு அஸ்தமனத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்காது. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவைப் பெற முடியாது. கடின உழைப்புக்கு ஏற்ப பலன் கிடைக்காது. மனம் திசைதிருப்பப்படலாம். ஆன்மிக நடவடிக்கைகளில் மனம் குறைவாக ஈடுபடும். இந்த காலத்தில், புனித யாத்திரைகள், தொலைதூர பயணங்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்:
ரிஷப ராசியில் குரு 8 மற்றும் 11 ஆம் வீட்டிற்கு அதிபதியாகி 11 ஆம் வீட்டிலேயே அஸ்தமிக்கப் போகிறார். இதன் காரணமாக, ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல மற்றும் கெட்ட பலன்கள் இரண்டும் கிடைக்கும். உங்கள் உடல்நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். அதே நேரத்தில், நிதி சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் செலவைக் கொஞ்சம் குறைக்க வேண்டும். இந்த நேரத்தில் உங்கள் நண்பர்கள் மற்றும் சகோதரர்களின் உதவியைப் பெற முடியாது.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு வியாழனின் அஸ்தமனத்தால் மனைவி மற்றும் தாயாரின் உடல்நிலையில் பிரச்சனைகள் வரலாம். வீட்டில் கருத்து வேறுபாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகும். திருமணமானவர்களின் வாழ்க்கை கடினமாக இருக்கும். வீட்டிலும் வெளியிலும் அனைத்து விதவிதமான விவாதத்தையும் தவிர்க்கவும். செலவுகள் கூடும். மற்றவர்கள் முன் உங்கள் கருத்துகளை தெளிவாகவும் வெளிப்படையாகவும் எடுத்துச்சொல்வது நல்லது.
மிதுனம்:
மிதுன ராசியில் குரு ஏழாவது மற்றும் பத்தாம் வீட்டிற்கு அதிபதியாகி பத்தாம் வீட்டிலேயே அஸ்தமிக்கப் போகிறார். 10ம் வீட்டில் வியாழன் அஸ்தமிப்பதால், மிதுன ராசிக்காரர்கள் முன்னேற்றத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடும். உங்கள் பணியிடத்தில் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், இந்த நேரத்தில் உங்கள் எதிரிகள் உங்களை சிக்கல்களில் மாட்டிவிட எண்ணக்கூடும். இது தவிர, குருவின் அஸ்தமனத்தால், உங்கள் திருமண வாழ்க்கையிலும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மகரம்:
குரு அஸ்தமனத்தால், மகர ராசிக்காரர்களுக்கு வாழ்க்கைத்துணையால் பிரச்னைகள் வரலாம். இளைய சகோதரர்களுடனான உறவும் மோசமடையலாம். பொருளாதார விவகாரங்களில் விவாதம் வேண்டாம். இந்த நேரத்தில் நீங்கள் தன்னம்பிக்கையின்மையை உணர்வீர்கள். இதனுடன், நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். நீதிமன்ற வழக்குகளில் இருந்து முன்னெச்சரிகையாக உங்களை காப்பாற்றிக்கொள்வது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள் குரு அஸ்தமனத்தால் பிள்ளைகளின் தரப்பிலிருந்து பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குழந்தைகளின் நடத்தையில் திடீர் மாற்றம் ஏற்படலாம் அல்லது அவர்களின் உடல்நிலை மோசமடையலாம். குடும்பத்தில் உங்கள் பேச்சு சற்று கடுமையாக இருக்கும். இதன் காரணமாக, குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் உறவு கெட்டுப்போகலாம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தோல்வியைச் சந்திக்க நேரிடும். எனினும், அதிக கவனம் எடுத்து படித்தால், குருவின் அருளால் வெற்றி கைகூடலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சுக்கிரனின் அருளால் ராஜபோக வாழ்க்கையை அனுபவிக்க போகும் ‘சில’ ராசிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ