Mars Transit 2023: ஜோதிட சாஸ்திரத்தின்படி, அனைத்து கிரகங்களும் அவ்வப்போது தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. கிரகங்களின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இந்த மாற்றங்கள் சிலருக்கு சுப பலன்களையும் சிலருக்கு அசுப பலன்களையும் அளிக்கும். இந்த மாதம், தைரியம், துணிச்சல், நிலம், திருமணம் ஆகியவற்றின் காரணியான செவ்வாய் தனது ராசியை மாற்றப்போகிறார்.  மார்ச் 13ம் தேதி செவ்வாய் ராசி மாறுகிறார் அதன் சிறப்பு பலன் மே 10ம் தேதி வரை காணப்படும். இந்த பெயர்ச்சியினால்  மீன ராசிக்காரர்கள் மிகவும் பலனடைவார்கள். அவர்கள் மார்ச் 15 முதல் ஏப்ரல் 15 வரை தங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும். நிலம், கட்டிடங்கள், வீடுகள், அரசுப் பணிகள் அனைத்தும் இந்தக் காலத்தில் நினைத்தது அனைத்தும் நிறைவேறும். அதிர்ஷ்டத்துடன், நிதி நிலைமை வலுவாக இருக்கும், குடும்ப உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். நீங்கள் ஏதேனும் ஆன்மீக நிகழ்ச்சிகள் அல்லது வழிபாடுகளை திட்டமிட்டிருந்தால், இந்த நேரத்தில் நீங்கள் அதைச் செய்யலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெயர்ச்சி காலத்தில், மீன  ராசிகள் வெற்றிகளை குவிப்பார்கள். அலுவக பணி, போலீஸ், ராணுவத் துறை, நிர்வாகம் தொடர்பான தேர்வுகள் அல்லது படிப்புகளை மேற்கொள்ள நினைப்பவர்களுக்கு இந்த நேரம் பொருத்தமானதாக இருக்கும். மக்கள் தொடர்பு மற்றும் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு நேரம் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். மிதுன ராசியில் செவ்வாய் நுழைவதால் கன்னி ராசிக்காரர்களுக்கு என்ன, எப்படி சாதகமான பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.


உத்தியோகபூர்வ வேலைகளை உங்கள் பணியிடத்தில் சுறுசுறுப்புடன் செய்தால் கை மேல் பலன் கிடைக்கும். அலுவலகம் வந்து செல்வதைத் தவிர மற்ற விதிமுறைகளை கடைபிடித்து நிர்வாகத்தை சிறப்பாக வைத்திருக்க வேண்டும். போலீஸ் மற்றும் ராணுவத் துறையில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பங்குனி மாதத்திற்குப் பிறகு ஏப்ரல், மே 10 வரை மேலதிகாரியின் சகவாசத்தில் இருப்பது நன்மை தரும். வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அனுபவம் வாய்ந்த நபரின் தொழிலில் சேருவது நன்மை பயக்கும்.


புதிய வாகனம், வீடு வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். எனினும், திருமண வாழ்க்கையில் சற்று கவனம் தேவை. மூன்றாம் நபரால் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. முக்கிய முடிவுகள் எடுப்பதில் குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். மூதாதையர் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். இது சரியான திசையில் பயன்படுத்தப்பட வேண்டும். குடும்பத்தில் உள்ள அனைவருடனும் இணக்கமாக இருங்கள். ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அதை உங்கள் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ஆணவத்தால் தாயுடன் தகராறு ஏற்படலாம்., கவனமாக இருக்கவும்.


மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, சகல செல்வங்களையும் கொடுக்கும் கோபூஜை!


உணவு விஷயத்தில் கவனமாக இருங்கள். அதிகப்படியான மிளகாய் மசாலா மற்றும் எண்ணெய் உணவுகள் உங்களுக்கு அமிலத்தன்மை பிரச்சனையை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் உங்கள் உடல் எடை அதிகரிக்கலாம், எனவே கவனமாக இருக்க வேண்டும், அதே போல் கொலஸ்ட்ராலையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். தேவையற்ற கவலை உங்கள் இதயத்தில் அழுத்தத்தை அதிகரிக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)


மேலும் படிக்க | சகல சங்கடங்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! கடைபிடிக்கும் முறை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ