Belly Fat Burn: செலவே இல்லாம ஜிம்முக்கு போகாமா ஒல்லியாக ஈஸி டெக்னிக்

Belly Fat Burn Tips: ஜிம்மிற்குச் செல்லாமல் வயிற்று கொழுப்பைக் குறைக்க விரும்புகிறீர்களா? இந்த 4 விஷயங்களை தினமும் காலையில் செய்யத் தொடங்குங்கள்! நீங்களே பிறருக்கும் உடல் இளைக்க ஆலோசனை சொல்லலாம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 3, 2023, 09:39 AM IST
  • ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த எலுமிச்சை
  • எடை இழப்புக்கான உணவுகள் இவை
  • வயிற்றில் படியும் கொழுப்பைக் குறைக்கும் வெந்நீர் டெக்னிக்
Belly Fat Burn: செலவே இல்லாம ஜிம்முக்கு போகாமா ஒல்லியாக ஈஸி டெக்னிக்  title=

Loose Weight: ஜிம்மிற்குச் செல்லாமல் வயிற்று கொழுப்பைக் குறைக்க விரும்புகிறீர்களா? இந்த 4 விஷயங்களை தினமும் காலையில் செய்யத் தொடங்குங்கள்; எல்லோரும் உங்கள் உடல்நலத்தின் ரகசியத்தை கேட்பார்கள்.இந்த உதவிக்குறிப்புகளை முயற்சிப்பதன் மூலம், சில வாரங்களில் உங்கள் உடல், கவர்ச்சியாகிவிடும். அதிகரித்த உடல் பருமனைக் குறைப்பது என்பது பலருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாகவே உள்ளது.

எடை அதிகரித்தவுடன், அதைக் குறைப்பது மிகவும் கடினம் என்று கூறப்படுகிறது. உடலின் அதிகரித்த கொழுப்பைக் குறைக்க பல மணி நேரம் ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க பயிற்சிகளை செய்தாலும் உடல் எடை குறைவதே இல்லை.  இந்த சிம்பிள் வழிகளை முயற்சித்தால் கண்டிப்பாக உடல் எடையை குறைக்கலாம்.

எடை இழப்பு உதவிக்குறிப்புகள்

உடல் குறைப்புக்கு வெந்நீர்

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, காலையில் எழுந்தவுடன் வெந்நீர் குடிப்பது நல்லது. அதுவும் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால், உடலில் சேர்ந்துள்ள நச்சுத்தன்மைகள் குறையும். அதிலுல்ம் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து பருவதன் மூலம் உடல் எடையும் குறையும் ஆரோக்கியமும் மேம்படும்.

மேலும் படிக்க | இதய நோயின் தீவிர அறிகுறிகள் - அலட்சியமாக இருக்காதீர்கள்

காலை சூரிய ஒளி 

காலை சூரிய ஒளி உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி சக்தியை அதிகரிக்கிறது. மேலும், வயிற்றில் படியும் கொழுப்பும் படிப்படியாகக் குறையத் தொடங்குகிறது. சூரிய ஒளியில் இருந்து உடலுக்குத் தேவையான வைட்டமின்-டி கிடைக்கிறது, இது உடலின் எலும்புகளையும் பலப்படுத்துகிறது. 

ஊட்டச்சத்து மிகுந்த காலை உணவு

உடல் மெலிய விரும்புபவர்கள், காலை உணவில் சில பொருட்களை உட்கொள்ள வேண்டும். பழங்கள், பால், பழச்சாறு, முட்டை போன்றவை இதில் அடங்கும். இந்த பொருட்களின் நுகர்வு, ஃபைபர், புரதம், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்களை உடலுக்கு வழங்குகிறது. இதன் காரணமாக உடல் பொருத்தமாக இருக்கும்.

மேலும் படிக்க | மடமடனு எடை ஏறுதா? இந்த சூப்பர் ட்ரிங்கை குடிங்க... சட்டுனு குறையும்!!

தினமும் 2 லிட்டர் நீர் பருகவும்

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீரை பருகினால், ஆரோக்கியம் நிச்சயம். உடலின் நச்சுகளை வெளியேற்றுவதில் நீரின் பங்கு முக்கியமானது. நச்சுக்களுடன் சேர்த்து, தேவையற்ற கொழுப்புகளும் வெளியேறிவிடும். இதன் காரணமாக உடல் பருமன் ஏறாமல் தடுக்கப்படும்.  

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புகை பிடிக்கும் பழக்கம் இருக்கா? இதை படித்தால் இன்றே விட்டுவிடுவீர்கள்!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News