தைரியம், துணிச்சலையும் கொடுக்கும் செவ்வாய் கிரகம் திருமணம் நடப்பதற்கும் காரணமாவார். இன்று அதாவது ஆகஸ்ட் 26-ம் தேதி, ஜென்மாஷ்டமி நாளில் செவ்வாய் தனது ராசியை மாற்றியதால், 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். பொதுவாக, ஒவ்வொரு கிரகத்திற்கும் பெயர்ச்சியாகும் காலகட்டங்கள் மாறுபடும். செவ்வாய் கிரகமானது 45 நாட்கள் வரை ஒரு ராசியில் இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜென்மாஷ்டமி நாளான இன்று 2024 ஆகஸ்ட் 26 சந்திரனுக்கு உரிய  திங்கட்கிழமையில், செவ்வாய்ப் பெயர்ச்சியும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ரிஷபத்தில் இருக்கும் செவ்வாய், மிதுன ராசியில் நுழைகிறார். செவ்வாய் மிதுனத்தில் 45 நாட்கள் தங்கி 5 ராசிக்காரர்களுக்கு தொழிலில் பெரும் வெற்றியைத் தருவார்.


இதனால் யாருக்கெல்லாம் நன்மை, மகிழ்ச்சி, சந்தோஷம் என்று தெரிந்துக் கொள்ளுங்கள்...


மேலும் படிக்க | புதன் உதயத்தினால் ஓஹோ என்று வாழப்போகும் ராசிகள்! கிருஷ்ணரின் அருள்பெறும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள்!


மேஷம்: மேஷ ராசிக்கு அதிபதி செவ்வாய் என்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு செவ்வாய் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். மேஷ ராசியினரின் தைரியமும் ஆற்றலும் அதிகரிக்கும் என்றாலும், ஈகோ அதிகமாகும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அதை ஆதிக்கம் செலுத்த விடாமல் இருந்தால் நேரம் நல்ல நேரமாக இருக்கும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளுடன் இருந்த உறவு மேம்படும்.


ரிஷபம்: செவ்வாயின் ராசி மாற்றம், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பொருளாதாரம் தொடர்பான கவலைகள் குறைந்து, நிம்மதி அதிகரிக்கும். தைரியமும் உற்சாகமும் நிறைந்த காலமாக செவ்வாயின் மிதுன சஞ்சாரம் இருக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்தினால் வாழ்க்கை வளமாகும்.


கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் சஞ்சாரம் நன்றாக இருக்கும். உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துக் கொள்ள வைப்பார் செவ்வாய் பகவான். அதோடு, ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் முன்னேற்றம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து காணப்படுகிறது.


மேலும் படிக்க | கன்னிக்கு சுக்கிரன் போனால், பார்லர் செலவு அதிகரிக்கும்? உங்க ஆளு ராசி என்ன? கன்னி இல்லையே??


சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் ராசி மாற்றம் பல்வேறு நன்மைகளைத் தரும். தடைபட்டு நின்று போயிருந்த வேலைகள் கூட நல்லவிதமாக முடியும். கருத்து வேறுபாடுகளை நீங்களே முயற்சி எடுத்து தீர்த்து வைப்பீர்கள்உறவுகளால் நன்மைகள் உண்டாகும்.


கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் சஞ்சாரம் படைப்பாற்றலை அதிகரிக்கும். கலை, கல்வியில் ஈடுபாடு உண்டாகும். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். தடைபட்ட வேலைகள் முடிவடையும். நீதிமன்றத்தில் வழக்குகளில் சிக்கியிருந்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | கிருஷ்ணாஷ்டமி முதல் 7 நாட்களுக்கு உங்கள் விதி எப்படி இருக்கும்? 2024 ஆகஸ்ட் இறுதி வார ராசிபலன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ