மேஷத்தில் சுக்கிரன் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: அசுரர்களின் குருவான சுக்கிரனின் ராசி மாற்றத்துக்கு ஜோதிடத்தில் மிக அதிக முக்கியத்துவம் உள்ளது. ஏனெனில் ஜோதிட சாஸ்திரத்தின் படி, செல்வம், பெருமை, செல்வம் மற்றும் உலக இன்பங்களை அளிக்கும் கிரகமாவார் சுக்கிரன். பொதுவாக அனைத்து கிரகங்களின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுக்கிரனின் கிரகமும் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். சுக்கிரனில் மாற்றம் ஏற்படும்போதெல்லாம் அதன் தாக்கம் உலகம் மற்றும் மக்கள் மீது தெரியும். மார்ச் 12 ஆம் தேதி சுக்கிரன் கிரகம் மேஷ ராசியில் பெயர்ச்சியாகவுள்ளது. சுக்கிரனின் இந்த மாற்றம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். இந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 


மேஷ ராசி


மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி சாதகமாக அமையும். ஏனெனில் உங்கள் ராசியில் ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை இருக்கும். இதனுடன், சுக்கிரனே ஏழாவது வீட்டில் தனது சொந்த வீட்டைப் பார்க்கிறார். அதனால் உங்கள் திருமண வாழ்வில் அமைதி நிலவும். இத்துடன் வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பால் ஆதாயம் உண்டாகும். வாழ்க்கைத்துணையின் முன்னேற்றமும் உண்டாகும். 


மேலும் படிக்க | இன்னும் 7 நாட்களில் இந்த 3 ராசிகளுக்கு பண மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டும்


இத்துடன் கூட்டுத்தொழில் செய்துகொண்டிருப்பவர்களுக்கு தொழில் பங்குதாரரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இத்துடன் பண வரவும் இருக்கும். மறுபுறம். உங்கள் ராசியின் அதிபதியான செவ்வாய் செல்வத்தின் வீட்டில் நிலைத்திருப்பார். இதனுடன் செல்வத்தின் அதிபதியான சுக்கிரன் மேஷ ராசியில் இருப்பார். ஆகையால் ஒரு புதிய வேலையைத் தொடங்க இப்போது நல்ல நேரமாக இருக்கும். 


மிதுனம் ராசி


சுக்கிரனின் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களூக்கு சாதகமாக இருக்கும். சுக்கிரன் உங்கள் ராசியிலிருந்து வருமான வீட்டில் சஞ்சரிப்பதால், இந்த நேரத்தில் உங்கள் வருமானம் கூடும். வெளிநாட்டில் இருந்தும் லாபம் கிடைக்கும். மேலும், சுப மற்றும் மத நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். செல்வச்செழிப்பு ஏற்படும். தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும்.


மகர ராசி


சுக்கிரனின் ராசி மாற்றம் மகர ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். சுக்கிரன் கேந்திர திரிகோண ராஜயோகத்தை ஏற்படுத்துவதால். இந்த நேரத்தில் உங்கள் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். முன்னேற்றத்துக்கான பல வழிகள் திறக்கும்.


இத்துடன் மகிழ்ச்சியையும் வசதிகளையும் பெறக்கூடிய அனுகூலமான சூழல் இப்போது உருவாகும். ஆடம்பரப் பொருட்களை இப்போது வாங்குவீர்கள். மேலு, நிலம், வீடு முதலிய சொத்துக்கள் மற்றும் வாகனம் வாங்கும் யோகம் தற்போது உள்ளது. 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உதயமானார் சனி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், கேட்டது கிடைக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ