சனி உதயத்தால் எந்த ராசிகளுக்கு நஷ்டம்: ஜோதிடத்தில் சனியின் பெயர்ச்சி, சனியின் அஸ்தமனம் அல்லது சனியின் உதயம் ஆகியவை மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பார்கள். அந்த வகையில் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி கடந்த ஜனவரி 17 ஆம் தேதி சனி பெயர்ச்சி கும்ப ராசிக்குள் நடந்தது. இதன்பிறகு, ஜனவரி 30 ஆம் தேதி கும்ப ராசியில் அஸ்தமித்த சனி, தற்போது மார்ச் 5 ஆம் தேதி இரவு 8.38 மணிக்கு கும்ப ராசியில் மீண்டும் உதிக்கப் போகிறார். இதனால் மூல திரிகோணமான கும்பத்தில் சனியின் உதயம் சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். எனவே சனி உதயத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பு ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கும்ப ராசியில் சனி உதயம்
கும்ப ராசியில் சனியுடன் சூரியன் மற்றும் புதன் கிரகங்கள் இணைய உள்ளது. இதனால், சனி பகவான் சில ராசிகளுக்கு சுப பலன்களை தரமாட்டார். அதுவும் 12 ராசிகளில் 5 ராசிக்காரர்களுக்கு மட்டும் கெட்ட விஷயங்கள் நிகழலாம்.


மேலும் படிக்க | பிப்ரவரி 26 முதல் மார்ச் மாதம் 4ம் தேதி பணமழையில் தங்கத்தை அள்ளப் போகும் ராசிகள்


ரிஷப ராசி
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் அசுப பலனை ஏற்படுத்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முதலீடு செய்வதை தவிர்க்கவும். தந்தையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். பணியிடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை குறையும்.


கன்னி ராசி
சனியின் உதயம் கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தும். சக ஊழியர்களால் பிரச்சனைகள் ஏற்படலாம். செலவுகள் கூடும். அதிக பண பற்றாக்குறையை சந்திக்க நேரிடும். தொழில் அல்லது சொத்து சம்மந்தமாக ஏதாவது திட்டமிடுகிறீர்கள் என்றால், அதை தற்காலிகமாக ஒத்திவைக்கவும். மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.


விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் கலவையான பலனை தரும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கையில் இருந்த அமைதி குறையும். இந்த நேரத்தில் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.


மகர ராசி
சனி உதயத்தால் உங்களின் தொழில் வாழ்க்கையில் சற்று பதற்றத்தை ஏற்படுத்தி தரும். உங்கள் தாயின் உடல்நிலையை கவனித்துக் கொள்ளுங்கள். சொத்து சம்பந்தமாக உடன்பிறந்தவர்களுடன் தகராறு ஏற்படலாம். உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.


மீன ராசி 
திருமண வாழ்வில் தவறான புரிதல்கள் அதிகரிக்கலாம். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். தொழில் செய்பவர்களின் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். தேவையற்ற செலவுகளை குறைக்கவும். இந்த காலக்கட்டத்தில் உங்கள் மனம் குழப்பமாகவே காணப்படும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Astro: குரு - சந்திரன் இணைவினால் நவ பஞ்சம ராஜயோகம் பெறும் ‘சில’ ராசிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ