சனி உதயம் 2023: மக்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர் சனி பகவான். பாரபட்சம் இன்றி நமது வினைகளுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதியின் கடவுளான சனி, நமது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நன்மையையும் தீமைகளையும் நீதிபதியாக வழங்குவார். மகிழ்ச்சியை கொடுக்கும் இந்த நீதிக்கடவுள், நீதிபதியாக இருந்து தவறுகளுக்கான தண்டனையையும் கொடுக்க தவறுவதில்லை.
ராசி மாற்றங்கள்
கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசி மாற்றங்கள் என்ன்பது அனைவரின் வாழ்க்கையிலும் ஏதேனும் ஒரு விதத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகரும் கிரகமானவது,சுப அல்லது அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதிலும் நீதிக் கடவுளான சனி பகவானின் மாற்றம், அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதில் தவறுவதில்லை.
திருக்கணித பஞ்சாங்கம்
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்ப ராசிக்கு மீண்டும் வந்தார். அங்கு தற்போது அஸ்தமானமான நிலையில் இருக்கும் சனீஸ்வரர், மார்ச் 5, 2023 அன்று 8.38 மணிக்கு மீண்டும் தனது இயல்பு நிலைக்கு திரும்புகிறார். அமைதியாக இருந்து, தனது செயல்பாடுகளை அடக்கி வைத்திருந்த சனி, தற்போது புது உத்வேகத்துடன் உதயமாகிறார்.
அஸ்தமனமான சனி மற்றும் புதன்
இதுபோன்ற அஸ்தமனத்திற்கு பிறகு வீரியத்துடன் செயல்படும் சனி பகவானின் உதயத்தின் தாக்கம், அனைத்து ராசிகளின் மீதும் இருக்கும். நீதியின் கடவுளான சனி, அதன் அசல் திரிகோணமான கும்பத்தில் மார்ச் 5 ஆம் தேதி உதயமாவது, மற்றும் அதற்கு சில நாட்களுக்கு முன்னரே அதாவது பிப்ரவரி 28-ம் தேதி கும்ப ராசியில் அஸ்தமிக்கப் போகும் புதன் என இந்த இரு கிரகங்களின் சஞ்சார மாற்றமும், 5 ராசிகளுக்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.
சனியின் உதயத்தால் பாதிக்கப்படும் ராசிகள்
கன்னி: சனியின் உதயம் கன்னி ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களைத் தரும். சக ஊழியர்களால் பிரச்சனைகள் வரலாம். செலவுகள் கூடும். கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது. கோபத்தில் விடும் வார்த்தைகள், நீண்டகால மன உலைச்சலை ஏற்படுத்தும். தனிப்பட்ட வாழ்க்கையிலும் வேலையிலும் அனுசரித்து செல்வது நல்லது. மன அமைதியே எப்போதும் முக்கியமானது என்பதை உணர்த்தும் காலம் இது.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் நெருக்கமானவர்களுடன் பிணக்கை ஏற்படுத்தும். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்காது. பணியிடத்தில் பிரச்சனைகள் வரலாம். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். வாழ்க்கை துணையுடன் சண்டை ஏற்பட்டாலும், தாழ்ந்து போவதில் தவறில்லை. விட்டுக்க்கொடுத்து வாழ்வதே வாழ்க்கை என்பதை புரிந்து நடந்தால் எந்நாளும் நன்னாளே...
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் தொழில் வாழ்க்கையில் சிரமங்களை உருவாக்கும். தேவையில்லாத கவலைகளால் மனம் சஞ்சலமடையும். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். சொத்து சம்பந்தமான தகராறு ஏற்படலாம். யோசித்து பேசுவதும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் நல்லது.
மேலும் படிக்க | புதன் அஸ்தமனம், இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் உண்டாகும்
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் சற்று பின்னடைவை ஏற்படுத்தும். தவறான புரிதல்கள் அதிகரிப்பதால், காதல் வாழ்க்கையிலும் திருமண வாழ்க்கையிலும் மன கசப்பு ஏற்படும். வார்த்தைகளை கட்டுப்படுத்துவதுடன், சுமூகமாக பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு பிரச்னைகள் அதிகரிக்கலாம். தேவையற்ற செலவுகளை குறைத்தால் தேவையில்லாத கவலைகளைத் தவிர்க்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Astro Alert: மார்ச் மாதத்தில் கிரகம் என்ன சொல்லுது? எச்சரிக்கையா இல்லைன்னா பிரச்சனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ