பிப்ரவரி 26 முதல் மார்ச் மாதம் 4ம் தேதி பணமழையில் தங்கத்தை அள்ளப் போகும் ராசிகள்

Weekly Horoscope Predictions: பிப்ரவரி மாதத்தின் கடைசி வாரத்தில் பம்பர் அதிர்ஷ்டம் பெறும் ராசிகளில் முதன்மையான 5 ராசிகள்... செல்வமும், வளமும் பெறும் ராசிகள் இவை...  

Last Updated : Feb 24, 2023, 01:46 PM IST
  • 26 பிப்ரவரி முதல் 4 மார்ச் 2023 வரை ராசிபலன்
  • கன்னி ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் விலகும்
  • சிம்ம ராசியினருக்கு மதிப்பு மரியாதை கூடும்
பிப்ரவரி 26 முதல் மார்ச் மாதம் 4ம் தேதி பணமழையில் தங்கத்தை அள்ளப் போகும் ராசிகள் title=

வார ராசிபலன் - 2023 பிப்ரவரி 26 முதல் மார்ச் 4 வரை: வாராந்திர ஜாதகத்தின்படி, பிப்ரவரி மாதத்தின் கடைசி வாரம் சிலருக்கு வெற்றியைத் தரும். சில ராசிக்காரர்களுக்கு மத்திமமான பலன்கள் கிடைக்கும். சிலருக்கு அவர்களின் வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும் என்றால், வேறு சிலருக்கோ, அவர்களின் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். 

திங்கள் தொடங்கி ஞாயிறு வரையிலான வாரத்தின் 7 நாட்களில் இருக்கும் கிரகங்களின் நிலை, இயக்கம் மற்றும் மாற்றங்களின் காரணமாக சில ராசிகளுக்கு அனுகூலமான நேரமும், சில ராசிகளுக்கு அனுகூலமற்ற நேரமும் உருவாகின்றது. பிப்ரவரி 26 முதல் மார்ச் மாதம் 4ம் தேதி வரை எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்?  யார் அடுத்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள் என்பதை தெரிந்துக் கொண்டால், திட்டமிட்டு வாழலாம்.  

26 பிப்ரவரி முதல் 4 மார்ச் 2023 வரை ராசிபலன்

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு அடுத்த வாரம் அனுகூலமாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். செயல்களில் வெற்றி உண்டாகும். குடும்ப கடமைகளை நிறைவேற்ற முடியும். வெளிநாடு செல்ல விருப்பம் இருந்தால், இந்த வாரம் முயற்சிகள் வெற்றியடையும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாத இறுதி மற்றும் மார்ச் மாத தொடக்கம் சிறப்பாக இருக்கும். இவர்கள் பண பலன்களைப் பெறலாம். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். தொழில் நன்றாக இருக்கும். நீண்ட பயணம் செல்லலாம். குடும்ப வாழ்க்கையில் பதற்றம் இருந்தாலும். பொறுமையாக செயல்பட்டால் நிலைமை சரியாகும்.

மேலும் படிக்க | புதன் அஸ்தமனம், இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் உண்டாகும்

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு அடுத்த வாரம் அருமையாக இருக்கும். இவர்கள் பண பலன்களைப் பெறலாம். பேச்சின் பலத்தால் வேலைகளை செய்து வெற்றி பெறுவீர்கள். நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொண்டால், இந்த நேரம் மிகவும் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் அறிவின் அடிப்படையில், நீங்கள் ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சியைப் பெறலாம். உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள், நீங்கள் பெரிய வெற்றியைப் பெறலாம். சோம்பலை தவிர்க்கவும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பல வரப்பிரசாதங்களைத் தரும். வெளிநாட்டில் இருந்து லாபம் உண்டாகும். திடீரென்று எங்கிருந்தோ பணம் வரும். வியாபாரம் நன்றாக நடக்கும். சுற்றுலா செல்லலாம்.

கும்பம்: இந்த வாரம் பணியிடத்தில் உங்கள் ஆதிக்கம் அதிகரிக்கும். நீங்கள் முன்னேற்றம் அடையலாம். எதிரிகளை வெல்வார்கள். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். பணத்தால் நன்மை உண்டாகும். செறிவுடன் வேலை செய்யுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Astro Alert: மார்ச் மாதத்தில் கிரகம் என்ன சொல்லுது? எச்சரிக்கையா இல்லைன்னா பிரச்சனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News