Saturn Nakshatra Transit August 2024 : சனி பகவான் நாளை ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். சனிபகவான், பூராட்டாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் இருக்கும் காலத்தில் சிலருக்கு மோசமான காலமாகவும் பலருக்கு நல்ல காலமாகவும் இருக்கும். அது ஏன் எப்படி என்று தெரிந்துக் கொள்வோம். அதுமட்டுமல்ல, சனியின் பாதிப்பினால் கஷ்டப்படுபவர்களுக்கு என்ன பரிகாரம் பலன் தரும்? தெரிந்துக் கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனி நட்சத்திரப் பெயர்ச்சி


ஏழரைச் சனி, ஜென்ம சனி, பாத சனி, விரயச் சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டகச் சனி என சனியின் பெயர்ச்சியால் ஏறக்குறைய எல்லா ராசிகளின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆனால், உங்கள் ராசிக்கு மிகவும் மோசமாக உள்ளது.  மிகுந்த கவனத்துடன் இருக்கவும், வாகனத்தில் செல்லும் பொழுது மிகுந்த எச்சரிக்கை அவசியம் என சொல்லி உங்களுக்கு பீதியைக் கிளப்புபவர்களின் வார்த்தைகளை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.


ஏனென்றால், கோட்சார ரீதியாக நவக்கிரகங்கள் மாறுதல் அடையும் பொழுது, பாதிப்புகள் இருந்தாலும், அது மிகவும் சிறிய அளவில் தான் இருக்கும். அதிலும், அவரவர் ஜாதகத்தில் நவக்கிரகங்களின் பலமும் பலவீனத்தின் அடிப்படையிலேயே சனியின் நட்சத்திரப் பெயர்ச்சியின் பலன்கள் பாதிக்கும். 


மேலும் படிக்க | ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே! உங்களை இப்படி அடிக்கடி யாராவது சொன்னால் நீங்க இந்த ராசி தான்...


உழைப்பாளிகளுக்கு உதவும் சனீஸ்வரர்  
‌‌‌‌‌உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சனி பகவான், கடுமையாக உழைத்து பணம் சம்பாதிப்பவர்களுக்கு அனுகிரகம் செய்வார். நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டு ஒழுக்கமாக வாழ்வதையே சனீஸ்வரர் வலியுறுத்துவார், ஏனென்றால் சனிபகவான் நீதிதேவன் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை தான். 


அதேபோல, பன்னிரெண்டு ராசிக்கார்களுக்கும் ஒவ்வொரு நூறு நாட்களுக்கும் பலன்கள் மாறிக் கொண்டேயிருக்கும் என்பதையும், எந்த ராசிக்காரர்களுக்கும் ஒரே மாதிரியான சுபபலன்களையோ அல்லது மோசமான தாக்கத்தையோ சனீஸ்வரர் கொடுக்க மாட்டார். அவரவருடைய ஜாதகத்தின் அடிப்படையிலேயே பலன்கள் மாறும்.


சனீஸ்வரருக்கு பரிகாரங்கள்   


உங்களுக்கு பிடித்த, அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று வாருங்கள். தெய்வத்திட சரணாகதி அடைந்தால், அதற்கு ஈடு இணையான பரிகாரங்கள் எதுவுமே கிடையாது. காசி கயா ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தலங்களுக்கு சென்று பரிகாரம் செய்து  வந்தாலும் குல தெய்வத்தின் பரிபூரண அருளாசி தான் ஒருவரின் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானதாக இருக்கும். 


குலதெய்வ வழிபாடு
குலதெய்வத்தின் பரிபூரண அருளாசி பெற்றவர்களுக்கு சனியால் ஏற்படும் பாதிப்புகள் வெகுவாக குறையும் என்பதால், உங்கள் குலதெய்வத்தின் காலை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். உழைப்பவர்களுக்கு தானம் கொடுப்பதும், பசித்தவருக்கு உணவிடுவதும் மிகவும் நல்லது.


மேலும் படிக்க | சிம்மத்தில் சுக்கிரனுடன் இணையும் சூரியன்! நாளை முதல் ‘இந்த’ ராசிகளுக்கு பணமழை பொழியும்!


சனிபகவானால் பாதிப்பு வராமலிருக்க உபாயங்கள்
குலதெய்வத்திற்கு வாழைத்தண்டு திரியில் விளக்கெண்ணெய் ஏற்றி தீபமேற்றி வழிப்பட வேண்டும். தினசரி வீட்டில் பைரவ மந்திரத்தை 108 முறை தொடர்ந்து உச்சரித்து வர வேண்டும், ஏனென்றால், பைரவ மந்திரம் கவசமாக இருந்து காப்பாற்றும். சனிபகவானுக்கு  குருவான காலபைரவரை வழிபட வேண்டும்.


ஆஞ்சநேயர் வழிபாடு
சனீஸ்வரரை சாந்திப்படுத்த ஆஞ்சநேயர் வழிபாடு உதவும். ராம நாமமும் மந்திர உச்சரிப்பும், சனீஸ்வரரின் சனி தோஷத்தை மட்டுமல்ல, எந்தவித கிரக தோஷங்களையும் நீக்கிவிடும்.  


காலபைரவர் வழிபாடு


சனிபகவனை வழிபடுவதைத் தவிர, தேய்பிறை அஷ்டமியில் காலபைரவர் வழிபாடு செய்தாலே, சனீஸ்வரரின் தாக்கங்களும் தோஷங்களும் நீங்கிவிடும். அதேபோல, ஞாயிறு மாலை இராகு காலத்தில் விளக்கேற்றுவதால் ராகு கேது தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது)


மேலும் படிக்க | ஆகஸ்டில் அபூர்வ பிரதோஷம்! 3 பிரதோஷம் வரும் மாதத்தில் சனி பிரதோஷ காலத்தில் சிவன் நந்தி வழிபாடு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ