Shani Dev: கும்பத்தில் அஸ்தமிக்கும் சனியால் பொன் சேர்க்கும் யோகம் யாருக்கு?
Saturn Transit in Kumbh 2023: சனி தனது ராசியை மாற்றி அஸ்தமிப்பதால், சனியின் கெடுபலன்களில் இருந்து தப்பிக்கும் சில ராசிகளுக்கு சுக்ர தசை அடிக்கும். பணம் வந்து கொட்டும்
Saturn Transit 2023: சனீஸ்வரர் தனது ராசியை மாற்றி, கும்பத்தில் நுழைந்துள்ளது. சனிக்கு நான்கு பாதங்கள் உள்ளன. இந்த நேரத்தில் 3 ராசிக்காரர்களுக்கு சனியின் இந்த மாற்றாம், நற்பலன்களைத் தரும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் சொல்கின்றன. சனி தனது ராசியை மாற்றும் நிலையில் அஸ்தமிப்பதால், சனியின் கெடுபலன்களில் இருந்து தப்பிக்கும் சில ராசிகளுக்கு சுக்ர தசை அடிக்கும். பணம் வந்து கொட்டும். இந்த ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் ஏற்றது. சனி தேவன் அவர்கள் மீது தனது ஆசிகளைப் பொழிவார்.
சனீஸ்வரர் என்று அழைக்கப்படும் சனி பகவான், கடமை, கட்டுப்பாடு, ஒழுக்கம், பணிவு, நேர்மை மற்றும் தவம் ஆகியவற்றின் முன்னோடி. அவரவர் கர்மங்களுக்கு ஏற்ப நீதி வழங்கும் நீதிதேவன். அப்படிப்பட்ட சனி கிரகம் மாறுவதால், அதிலும் அஸ்தமிபபதால் ஏற்படும் மாற்த்தால் வாழ்க்கையை அருமையாய் வாழப்போகும் 3 ராசிகள் இவை...
மேலும் படிக்க | அகண்ட சாம்ராஜ்ய யோகத்தால் பிரபலமாகப் போகும் 3 முத்தான ராசிகள்
மேஷம்: சனி தேவரின் பெயர்ச்சி மேஷ ராசியினரின் வருமானத்தை அதிகரிக்கும். இது பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும். திடீரென்று பணம் கிடைக்கும். ஷேர் மார்க்கெட், பந்தயம், லாட்டரி போன்றவற்றிலும் பணம் சம்பாதிக்கலாம்.
இந்த நேரத்தில் நீங்கள் பெரிய அளவில் பணத்தை சேமிக்க முடியும். உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய வாய்ப்பைப் பெறக்கூடிய நேரம் இது. உங்கள் அதிர்ஷ்டத்திற்கான கதவு திறந்துவிட்டது என்றும் சொல்லலாம்.
கன்னி: சனியின் இந்த மாற்றத்தால், கன்னி ராசிக்காரர்களுக்கு பழைய முதலீடுகளில் இருந்து அதிக லாபம் கிடைக்கும். பண வரத்தும் சாதகமாக இருக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். சண்டை சச்சரவு மற்றும் நீதிமன்ற விவகாரங்களில் வெற்றி பெறலாம். பழைய பிரச்சனைகள் நீங்கும். ஆனால் சேமிப்பில் கவனம் செலுத்தினால் என்றும் நிம்மதியாக இருக்கலாம்.
கும்பம்: சனிபகவான் தனது ராசியை மாற்றி கும்பத்தில் பிரவேசித்துள்ளதால் கும்ப ராசிக்காரர்களுக்கு சனியின் அருள் பூரணமாக கிடைக்கும். கும்ப ராசியினரின் வாழ்வில் சுகபோகங்கள் பெருகும். சனியின் அருளால், பண ஆதாயமும், வெற்றி வாய்ப்புகளும் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். சொத்து, வாகனம் வாங்கலாம். பதவி உயர்வு கிடைக்குக்ம், திருமணமாகாதவர்களுக்கு திருமண கைகூடி வரலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Sani Asth: சூரியனை நெருங்கும் சனி! பாதிக்கப்படும் 4 ராசிகள்! எச்சரிக்கை அவசியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ