Sani Asth: சூரியனை நெருங்கும் சனி பாதிக்கப்படும் 4 ராசிகளுக்கு ஹை அலர்ட் அவசியம்

Saturn Transit 2023: கர்ம காரகர் என்று அழைக்கப்படும் சனி பகவான், நாளை அஸ்தமனமாகிறார். அஸ்தமனமாகும் சனியின் பாதிப்புகளால் பாதிப்பு யாருக்கு என்று தெரிந்துக் கொண்டால் எச்சரிக்கையாக இருக்கலாம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 29, 2023, 12:40 PM IST
  • அஸ்தமனமாகும் சனியின் பாதிப்புகளால் பாதிப்பு யாருக்கு?
  • சனிப் பெயர்ச்சி முடிந்த சில நாட்களிலேயே சனி எரிப்பு
  • சனி எரிப்பு நிலையால் பாதிக்கப்படுபவர்களின் பட்டியல்
Sani Asth: சூரியனை நெருங்கும் சனி பாதிக்கப்படும் 4 ராசிகளுக்கு ஹை அலர்ட் அவசியம்

2023 சனியின் முதல் அஸ்தமனம்: கர்ம காரகர் என்று அழைக்கப்படும் சனி பகவான், நாளை அஸ்தமனமாகிறார். அஸ்தமனமாகும் சனியின் பாதிப்புகளால் பாதிப்பு யாருக்கு என்று தெரிந்துக் கொண்டால் எச்சரிக்கையாக இருக்கலாம். சனீஸ்வரர் என்று அழைக்கப்படும் சனி பகவான், கடமை, கட்டுப்பாடு, ஒழுக்கம், பணிவு, நேர்மை மற்றும் தவம் ஆகியவற்றின் முன்னோடி. அவரவர் கர்மங்களுக்கு ஏற்ப நீதி வழங்கும் நீதிதேவன். ஆன்மீகம், கடமை மற்றும் கட்டமைப்பைக் குறிக்கும் கிரகம் சனி ஆகும். கடந்த 17ம் தேதியன்று கிரக சஞ்சாரம் செய்த சனி பகவான், 30 ஜனவரி 2023 அன்று மதியம் 12:02 மணிக்கு, கும்பத்தில் அஸ்தனமாகிறார்.   

கும்ப ராசியில் சனி தோஷம் 

மகரம், கும்பம் ஆகிய இரு ராசிகளின் அதிபதி சனி. மிக மெதுவாக நகரும் கிரகம் என்பதால், இரண்டரை வருடங்கள் ஒரே ராசியில் இருக்கும் சனியின் பார்வை பட்டால் அது சரியானதாக பார்க்கப்படுவதில்லை. ‘கர்ம காரகர்’ என்று அழைக்கப்படும் சனி கிரகம், சனி தனது சொந்த ராசியான கும்ப ராசியில் அஸ்தமனமாகிறார்.

ஒரு கிரகத்தின் எரிப்பு அதாவது அஸ்தமனம் என்பது ஒரு கிரகம் சூரியனுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு நெருக்கமாக வரும்போது ஏற்படும் ஒரு நிலை என்று சொல்லலாம். சனியைப் பொறுத்தவரை, சூரியனின் இருபுறமும் 15 டிகிரிக்குள் வரும்போது சனி அஸ்தமனம் நடைபெறுகிறது.

மேலும் படிக்க | பசந்த பஞ்சமி 2023: மேஷம் முதல் மீனம் வரை...இதை செய்தால் மங்களம் உண்டாகும்...!

ரிஷப ராசி: கும்ப ராசியில் எரிப்பு நிலைக்கு ஆளாவதால், ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சனீஸ்வரரின் நற்பலன்கள் எதுவும் கிடைக்காது என்ற நிலையில், செய்யும் வேலைகளில் கவனம் அதிகம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், இருந்தாலும், அதன் பலன்கள் எதிர்பார்த்த அளவு இருக்காது.

கடக ராசி: கடக ராசிக்காரர்களுக்கு சனிபகவான் எரிப்பு நிலைக்கு செல்வதால், பாதகமான தாக்கம் பதிக்காமல் இருக்க அமைதியைக் கடைபிடியுங்கள். சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு விளக்கேற்றி வழிபடவும். பழைய கடன்களிலிருந்து விடுபடலாம் என்று நினைத்தாலும், அது சாத்தியமாகாது. இது மனதில் கவலைகளை அதிகரிக்கும்.  

மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று அதிஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள்! 

கும்ப ராசி: சனியின் பாதகமான பலன்கள் பெரிய அளவில் உங்களைப் பாதிக்காது. சனி அஸ்தமனமாவதால் வேலையில் சில பிரச்சனைகள் ஏற்படுலாம். இருப்பினும், வாக்கு ஸ்தானம் பலவீனப்படுவதால், வாய் வார்த்தைகள், உங்களுக்கு எதிரிகளை உண்டாக்கும். கர்மக்காரகர் அஸ்தமன நிலையில் இருந்தாலும், இப்போது செய்யும் செயல்களின் எதிரொலி, சில நாட்களில் உங்களுக்கு எதிராக செல்லும். எனவே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  இல்லாவிட்டால் பெயர் கெட்டுப்போகும்.

தனுசு ராசி: நீண்ட காலமாக நிலுவையில் உள்ள விஷயங்கள் தற்போது முடியும் நிலைக்கு வந்தால், அதில் உங்களுக்கு சாதகமான சூழல் ஏற்படாது. பண விரயம் அதிகரிக்கும். வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள், விரக்தியை அதிகரிக்கும்.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அகண்ட சாம்ராஜ்ய யோகத்தால் பிரபலமாகப் போகும் 3 முத்தான ராசிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News