Shukra Gochar: மீனத்தில் சுக்கிரன் பெயர்ச்சி காதலில் ஜெயித்து பணத்தை அள்ளும் 3 ராசிகள்

Venus Transit February 2023: சுக்கிரன் மீன ராசியில் பெயர்ச்சியாகுவதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட அலை அடிக்கும். சுக்கிரனின் பெயர்ச்சி காரணமாக எந்த ராசிக்காரர்கள் ஜாலியான வாழ்க்கையை வாழ்வார்கள்?  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 29, 2023, 06:27 AM IST
  • சுக்கிரன் பெயர்ச்சியால் சுகபோகத்தில் சுகிக்கவிருக்கும் 3 ராசிக்காரர்கள்
  • மீனத்தில் சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்
  • மேஷத்திற்கு செல்வதற்கு முன் சுக்கிரனின் பெயர்ச்சி
Shukra Gochar: மீனத்தில் சுக்கிரன் பெயர்ச்சி காதலில் ஜெயித்து பணத்தை அள்ளும் 3 ராசிகள் title=

சுக்கிரன் பெயர்ச்சி 2023: ஜோதிடத்தின் படி, 2023 ஆம் ஆண்டில், பல பெரிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றுகின்றன. நவகிரகங்களின் பெயர்ச்சி 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையை பாதிக்கும். அதன்படி 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதியன்ஸு சுக்கிரன் கிரகம் மீன ராசிக்கு பெயர்ச்சியடையப் போகிறார். இப்படிப்பட்ட நிலையில் சுக்கிரன் மீன ராசிக்கு சஞ்சாரம் செய்வதால் சிலருக்கு வாழ்வு அமோகமாக இருக்கும். பொதுவாக, சுக்ரன் களத்திரகாரகன் என்றும் இல்லற வாழ்வுக்கு உரியவர் என்றும் அழைக்கப்படுகிறார்.

சுக்கிரன் ஒருவருக்கு சரியாக அமைந்தால், தாம்பத்ய சுகம், மகிழ்ச்சியான திருமண வாழ்வு, தோற்றப்பொலிவு, கவர்ச்சி, ஈர்ப்பு, அறிவாற்றல்,என பல பலன்களையும், சுகமான வாழ்க்கையையும் வழங்குவார். இன்பத்திற்கும் நிம்மதிக்கும் காரணமான சுக்கிரன் மீன ராசிக்கு ப் எயர்வது, மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பல்வேறு பலன்களைக் கொடுப்பார்.

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: குபேர லாபம் பெற போகும் 3 ராசிகள்!

மீன ராசியில் சுக்கிரன் சஞ்சாரம்
மீன ராசியில் 2023 பிப்ரவரி 15ம் நாள் இரவு 07:43 மணிக்கு நுழையும் சுக்கிரன். மார்ச் 12-ம் தேதி தனது ராசியை மாற்றி மேஷ ராசிக்கு செல்வார். சுக்கிரன் பகவான், மீனத்தில் உச்ச நிலையில் இருப்பதால், மிகவும் மங்களகரமான யோகத்தைக் கொடுக்கும். குருவின் இராசியான மீனத்தில் அசுர கிரகமான சுக்கிரனின் பெயர்ச்சி என்ன பலன்களைக் கொடுக்கும்? ஞானம் நிறைந்த சுக்கிரன் மற்றும் குரு என இரு கிரகங்களின் தாக்கம் 12 ராசிகளுக்கும் எந்தவிதமான பலன்களைக் கொடுக்கும்? இருப்பதால், வேத ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரனின் சஞ்சாரம் மிகவும் முக்கியமானது.

சுக்கிரன் கிரகத்தின் பெயர்ச்சி தோராயமாக 23 நாட்கள் இருக்கும். பிரகாசமான கிரகமான சுக்கிரன், ரிஷபம் மற்றும் துலாம் ராசியை ஆட்சி செய்வதால் யாருக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்கும்?  

மேலும் படிக்க | Sani Asth: சூரியனை நெருங்கும் சனி அஸ்தமாவதால் பாதிக்கப்படும் 4 ராசிகள்! எச்சரிக்கை அவசியம்

கடக ராசி: மீனத்தில் சுக்கிரன் பெயர்ச்சியாவதால் மாணவர்களுக்கு நிம்மதியான நிலைமை ஏற்படலாம். அதே நேரத்தில், படிப்பில் கவனமும், ஆர்வமும் அதிகரிக்கும். பண வரத்து மேம்படும், வீட்டில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும், பெரியவர்களுக்கு மரியாதையும் கெளரவமும் கூடும்.   

தனுசு ராசி: இந்த ராசிக்காரர்கள் சுக்கிரன் பெயர்ச்சியால் சுபமான பலன்களை பெறுவார்கள். குடும்ப வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும், உடல் ஆரோக்கியம் மேம்படும். வீடு வாகனம் வாங்க திட்டமிட்டால் அவை சுலபமாக ஈடேறும். குடும்பத்தில் சுப நிகழ்வுகளுக்கு வாய்ப்பு உண்டு. நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். 

மீன ராசி:  சுக்கிரன் பெயர்ச்சியாகப் மீன ராசிக்கு பொற்காலம் தொடங்குகிறது. எதிரிகளிடம் இருந்து வந்த அச்சம் நீங்கும் காலம் இது. தொட்டதெல்லாம் துலங்கும், நினைத்ததெல்லாம் நடக்கும் என்ற அளவுக்கு சுப பலன்களை தருவார் சுக்கிரன் பகவான்.  

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுக்ரன் பெயர்ச்சியும் மாளவ்ய ராஜயோகமும்! 25 நாட்களில் ‘3’ ராசிகளின் பொற்காலம் ஆரம்பம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News