ஆடி போயி ஆவணி வந்தா நல்ல காரியம் கூடி வரும்! சூரியனின் சிம்ம ராசி பெயர்ச்சி பலன்கள்!
Sima Sankaranthi Rasipalan : சூரியனின் பெயர்ச்சியின் அடிப்படையில் தமிழ் மாதம் பிறக்கிறது. சிம்ம ராசிக்கு சூரியன் பெயரும்போது உருவாகும் ஆவணி மாதம் யாருக்கு எப்படி இருக்கும்? ஆவணி மாத ராசிபலன்...
ஜோதிடத்தில் சூரியன் அதிக அதிகாரம் கொண்ட கிரகம் ஆகும். சக்திவாய்ந்த சூரியன், சிம்மத்தில் பெயர்ச்சியாகும்போது, சிலரின் மனோபாவம் சீற்றமுள்ளதாக மாறும் என்றால், சிலரின் சுபாவம் அமைதியானதாக மாறும். சூரியனின் சிம்ம ராசி பெயர்ச்சியானது அனைவரின் வாழ்க்கையிலும் மாற்றங்களைக் கொண்டு வந்து சேர்க்கும்.
சந்திரனை அடிப்படையாகக் கொண்ட ஜோதிட கணிப்புகளின்படி, இன்னும் ஒரு வாரத்தில் சூரியன் சிம்மத்தில் பெயர்ச்சியாவதால் உருவாகும் ஆவணி மாதத்தில் எந்த ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் இருக்கும் என்பதை அறிவோம்.
சிம்மத்தில் சூரியன் பெயர்ச்சி
மேஷம்
எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்வதற்கான தருணங்கள் ஆவணியில் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். குடும்பத்தில் பெற்றோர் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வேலை மற்றும் தொழிலில் ஈடுபாடு அதிகரிக்கும். பயணங்களில் விவேகமாக செயல்படவும். அரசு காரியங்களில் இருந்துவந்த தடைகள் அகலும்.
ரிஷபம்
பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். அரசு சார்ந்த துறைகளில் இருந்து வந்த வேலைகள் முடிவடையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்புடன் பல பிரச்சனைகளைத் தீர்க்கலாம். பூர்வீக சொத்துக்கள் லாபம் தரும்.
மிதுனம்
மனதிற்கு பிடித்த மாற்றங்கள் நிகழும். நீண்ட காலமாக இருந்துவந்த கடன் பிரச்சனைகள் குறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திடீ பயணங்களின் மூலம் லாபம் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். அதிக சிந்தனைகள் குழப்பத்தை ஏற்படுத்தும்.
கடகம்
உத்யோக ரீதியில் அருமையான காலம் இது. ஆனால், குடும்பத்தில் அதிருப்தி நிலவும் என்பதால், குடும்பத்தினருக்கும் நேரம் ஒதுக்குவது நல்லது. மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். சிலருக்கு உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவு கிடைக்கும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும்.
சிம்மம்
சிம்மத்தில் சூரியன் சஞ்சரிப்பதால், சிம்ம ராசியினருக்கு கமிஷன் சார்ந்த பணிகளில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராமல் கிடைக்கும் சில வாய்ப்புகள் மூலம் புதிய மாற்றம் ஏற்படும். தன தான்ய விருத்தி உண்டாகும்.
கன்னி
மனதில் நீண்ட காலமாக இருந்த எண்ணங்களை செயல்படுத்தும் வாய்ப்புக் கிடைக்கும். சிந்தனைகளில் ஏற்படும் குழப்பத்தால், செயல்களில் தாமதம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். வேலையில் முன்னேற்றம் உண்டாகும்.
துலாம்
புதிய பொருட்களை வாங்கி மகிழும் நேரம் இது. பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். சுதந்திரம் தேவை என்ற எண்ணம் மேலோங்கும், இதனால் குடும்பத்தில் பெரியவர்களுடன் வாக்குவாதம் செய்வீர்கள். வாக்குவாதத்தைத் தவிர்த்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் இருந்துவந்த மந்தமான சூழ்நிலை மறையும். சுப காரியம் தொடர்பான எதிர்பார்ப்புகள் கைகூடும்.
விருச்சிகம்
அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். தந்தை வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆராய்ச்சி தொடர்பான செயல்களில் சாதகமான சூழல் அமையும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும்.
தனுசு
கல்வி கற்கும் மாணவர்களுக்கு குழப்பமான நேரம் இது. குழந்தைகளிடம் அனுசரித்துச் செல்லவும். பணிகளில் இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் சாதகமாக அமையும். கௌரவ பொறுப்புகள் வந்து சேரும். பலதரப்பட்ட சிந்தனைகள் மனதை அலைகழிக்கும், ஆனால் செல்வாக்கு மேம்படும்.
மகரம்
போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறும் காலம் இது. மகர ராசிக்காரர்களுக்கு எதிர்பாலின மக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். குழந்தைகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தெளிவு ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.
மேலும் படிக்க | ஆடிப்பூர நாளன்று ஹரியாலி தீஜ்! அன்பால் ஆண்டவளுக்கு பச்சை வளையல் சூட்டும் வைபவம்...
கும்பம்
பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்காது. எளிதில் முடிய வேண்டிய பணிகள் கூட தாமதமாகவே நிறைவேறும். புதிய நபர்களிடம் அனுசரித்துச் செல்லவும். எந்த விஷயமாக இருந்தாலும் சிந்தித்துச் செயல்படவும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் கவலைகளை அதிகரிக்கும்.
மீனம்
நண்பர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி ஏற்படும். பயண வாய்ப்புகள் எதிர்பாராத மகிழ்ச்சியை கொண்டு வந்துக் கொடுக்கும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. சுப காரியம் தொடர்பான காரியங்கள் கைகூடும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ