Nag chaturthi Garuda Panchami 2024 : ஆடி மாதம் வரும் அமாவாசைக்கு அடுத்து வரும் சதுர்த்தி திதி அன்று நாக சதுர்த்தி என்றும் அதற்கு அடுத்தநாள் கருடபஞ்சமி ஆகும். இந்த இரு நாட்களிலும் நாகம் தொடர்புடைய அனைத்து உயிரினங்களுக்கும் வழிபாடு நடத்துவது இந்து மரபாகும்...
Rahu Ketu Dosham : ஆடிமாதம் வரும் பண்டிகைகளுள் மிகவும் முக்கியமான நாகசதுர்த்தி மற்றும் கருடபஞ்சமி அடுத்தடுத்த நாட்களில் வரும் இரட்டை விரதங்கள் ஆகும். இவை ஏகாதசி - துவாதசி என்பதைப் போல அடுத்தடுத்து வருவதுடன் ஒன்றுடன் மற்றொன்று தொடர்புடைய விரதங்கள் ஆகும்...
பாம்பைப் பார்த்து நாம் பயப்பட்டாலும், பாம்புகள் உலகம் தோன்றியதில் இருந்தே இருக்கும் உயிரினங்கள். சிவபெருமான் நாகத்தைத் கழுத்தில் அணிந்திருப்பார் என்றால், விஷ்ணு பாம்பையே பஞ்சணையாக கொண்டவர். ஆடி மாதத்தில் சிவனுக்கு செய்யும் பூஜைகள் சிறப்பானவை.
நாக சதுர்த்தி நாளன்று, நாகர்களுக்கான கோவில்களிலும், பாம்புப் புற்றுகளுக்கும் பூஜை செய்வது வழக்கம். தமிழ்நாட்டில் நாகர் கோவில் நாகராஜா கோவில், பரமக்குடி நயினார் கோவில், நாகப்பட்டினத்தின் சிறப்புமிக்க நாகநாதர் கோவில், கும்பகோணம் நாகநாதர் கோவில் உட்பட பல ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன
பாம்புகளின் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து வழிபடுவது சிறப்பானது
நாகத்தை தலையாகவும், உடலாகவும் கொண்ட ராகு கேது ஆகிய கிரகங்களையும் நாகசதுர்த்தி நாளன்று போக்கலாம். அதற்கு விரதம் இருந்து நாகருக்கு பால் ஊற்றி வழிபட வேண்டும்
ஜாதகத்தில் ராகு மற்றும் கேது தோஷம் உள்ளவர்கள், ஆடி மாதம் நாகம் வசிக்கும் புற்றுக்கு பால் ஊற்றி, புற்று மண்ணை நெற்றியில் இட்டு விரதம் இருந்து வழிபட்டால், ராகு கேது தோஷம் நிவர்த்தியாகும்
ஆலகால விஷம் அருந்திய சிவனின் கழுத்தில் ஆபரணமாக இருக்கும் நாகம், ராகுவின் தலையாகவும், கேதுவின் உடலாகவும் இருப்பதால் சிவன், ராகு கேதுவுக்கு நாகசதுர்த்தி கருட பஞ்சமி பூஜைகள் செய்வது நல்ல பலனைத் தரும்
ஆடி பஞ்சமி அன்று தொடங்கும் பஞ்சமி விரதத்தை, ஒவ்வொரு மாதமும் பஞ்சமி திதியன்று இந்த மேற்கொண்டு வந்து 12ம் மாதமான ஆனிமாத வளர்பிறை பஞ்சமி அன்று விரதத்தை முடித்தால் தீராத நோய்கள் எல்லாம் தீர்ந்து வாழ்க்கை வளம் பெறும்
காலசர்ப்ப தோஷம் உள்ளவர்களின் அனைத்துவிதமான கஷ்டங்களையும் நாகபஞ்சமி விரதம் போக்கும்
நாகசதுர்த்தி கருட பஞ்சமி விரதம் இருந்தால், புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு உண்டாகும், அதேபோல, குழந்தைகளின் ஆயுள் விருத்தியாகும்