சூரிய ராசி மாற்றம் ஜூலை 2022 பலன்கள்: சூரிய பகவான் மிதுன ராசியை விட்டு வெளியேறி 16 ஜூலை 2022, அதாவது இன்று இரவு 10:56 மணிக்கு கடக ராசிக்குள் நுழைகிறார். கடக ராசியில் சூரியன் நுழைவது கடக சங்கராந்தி எனப்படும். ஆகஸ்ட் 17ம் தேதி வரை சூரிய பகவான் சந்திரனின் ராசியான கடகத்தில் இருப்பார். அதன் பலன் 12 ராசிகளிலும் இருக்கும். சில ராசிகள் இந்த மாற்றத்தால் பல இழப்புகளை சந்திக்க நேரிடும். சிலருக்கோ அபரிமிதமான நற்பயன்கள் கிடைக்கும். சூரியனின் இந்த ராசி மாற்றத்தால் அனைத்து ராசிகளிலும் ஏற்படவுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 
 
மேஷம்:
பல எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்படும். சர்ச்சைகள் இருக்கலாம். கெட்ட செய்தி வரக்கூடும். சொத்து விவகாரங்கள் தீரும். வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிஷபம்:
தைரியம், வீரம் அதிகரிக்கும். சரியான முடிவை எடுப்பீர்கள். பதவி உயரும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். ரிஷப ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பண லாபம் உண்டாகும். பண வரவு சாதகமாக இருக்கும்.


மிதுனம்:
பண வரவு நீங்கள் எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக இருக்கும். கண்களில் பிரச்சினைகள் ஏற்படலாம். சண்டைகளை தவிர்க்கவும். நீதிமன்றத்தில் தகராறு இருந்தால், அதை வெளியில் தீர்த்துக் கொள்ளுங்கள். பணியிடத்தில் யார் வேண்டுமானாலும் சதி செய்யலாம், எச்சரிகையாக இருக்க வேண்டிய காலம் இது.


கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் நல்ல நேரமாக இருக்கும். இருப்பினும், உடல்நலப் பிரச்சினை இருக்கலாம். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டாகும். மரியாதை அதிகரிக்கும். சமூக அக்கறையுடன் செயல்படுவீர்கள்.


சிம்மம்:
பண நெருக்கடி இருக்கும். இந்த காலத்தில் அலச்சல் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் மோசமான விளைவு ஏற்படலாம். கடினமாக உழைக்கவும். காதல் வாழ்க்கையில் சில சிக்கல்களை சந்திகக் நேரிடலாம். 


மேலும் படிக்க | ஆகஸ்ட் மாதம் கிரகங்களின் ராசி மாற்றத்தால் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்


கன்னி:
அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் கச்சிதமாக இருக்கும். பெரிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக்கூடும். பிள்ளைகள் தொடர்பான நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.


துலாம்:
நீங்கள் மகத்தான வெற்றியைப் பெறுவீர்கள். புதிய வேலை, பெரிய பதவி கிடைக்கும். எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். அரசாங்கத்தால் ஆதாயம் அடைவீர்கள். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள்.


விருச்சிகம்:
எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். புதிய ஒப்பந்தம் செய்து கொள்ள ஏற்ற நேரமாக இது இருக்கும். சமயப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். சக்தி பெருகும். திட்டங்களை ரகசியமாக வைத்திருங்கள்.


தனுசு:
எதிர்பாராத பலன்களைப் பெறுவீர்கள். மோசமான விஷயங்கள் நடக்கும் ஆனால் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். பணியிடத்தில் யார் வேண்டுமானாலும் சதி செய்யலாம். சச்சரவுகளை எளிதில் தீர்த்துக்கொள்ளுங்கள்.


மகரம்:
திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் வரலாம். சர்ச்சைகளில் சிக்க வேண்டாம். அரசு வழியில் உதவி கிடைக்கும். உறவினர்களுடன் சுமுகமாக நடந்து கொள்ளுங்கள்.


கும்பம்:
இந்த நேரம் உங்களுக்கு அற்புதமானதாக இருக்கும். புத்திசாலித்தனமாக சில முடிவுகளை எடுங்கள். காரியம் வெற்றியடையும். இப்போது உங்களுக்கு கிடைக்கும் உதவியால் பயனடைவீர்கள். உங்களுக்கு பல நல்ல தகவல்கள் கிடைக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்காது.


மீனம்:
எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். உயர் பதவிகளையும் மரியாதையும் பெறுவீர்கள். பண வரவு சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். வீட்டின் பெரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். மொத்தத்தில் மீன ராசிக்காரர்களுக்கு இந்த காலம் மகிழ்ச்சியாக இருக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சந்திரனின் ராசியில் நுழையும் சூரியன்: இந்த ராசிகளுக்கு அடித்தது ஜாக்பாட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ