ஆகஸ்ட் மாதம் கிரகங்களின் ராசி மாற்றத்தால் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

Monthly Horoscope:ஆகஸ்ட் மாதம் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரவுள்ளது. அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 15, 2022, 06:38 PM IST
  • ஆகஸ்டில் பல பெரிய கிரகங்களின் ராசியில் மாற்றம் ஏற்படும்.
  • ஆகஸ்டில் ஏற்படும் ராசி மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும்.
  • இந்த நேரத்தில் நீங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள்.
ஆகஸ்ட் மாதம் கிரகங்களின் ராசி மாற்றத்தால் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் title=

ஆகஸ்ட் மாத கிரக ராசி பரிவர்த்தனை 2022: ஆகஸ்டு மாதம் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலையைப் பொறுத்தவரை சிறப்பு வாய்ந்தது. ஆகஸ்டில் பல பெரிய கிரகங்களின் ராசியில் மாற்றம் ஏற்படும். ஆகஸ்ட் 9ம் தேதி முதல் கிரக மாற்றம் நிகழும். இந்த நாளில் புதன் கடகத்தை விட்டு சிம்ம ராசியில் பிரவேசிப்பார். ஆகஸ்ட் 11ம் தேதி இரண்டாவது ராசி மாற்றம் நடக்கும். அன்று சுக்கிரன் சிம்ம ராசியிலிருந்து விலகி கன்னி ராசிக்குள் நுழைகிறார். பொதுவாக கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். 

ஆகஸ்ட் மாத மூன்றாவது மற்றும் நான்காவது ராசி மாற்றங்கள்

ஆகஸ்ட் 17 ஆம் தேதி மூன்றாவது ராசி மாற்றம் நடக்கும். இந்த நாளில் சூரிய பகவான் கடக ராசியை விட்டு சிம்ம ராசியில் பிரவேசிப்பார். நான்காவது கிரகப் பெயர்ச்சி ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடக்கிறது. ஆகஸ்ட் 26 ஆம் தேதி புதன் கிரகம் கன்னி ராசிக்குள் நுழைகிறது.

இந்த ராசிக்காரர்கள் லாபம் அடைவார்கள்: 

மேலும் படிக்க | சந்திரனின் ராசியில் நுழையும் சூரியன்: இந்த ராசிகளுக்கு அடித்தது ஜாக்பாட் 

மேஷம்:

ஆகஸ்டில் ஏற்படும் ராசி மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். இந்த நேரத்தில் நீங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். இருப்பினும், இந்த காலத்தில் நீங்கள் படு பிஸியாக இருக்கலாம். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் கடின உழைப்புகான அங்கீகாரம் கிடைக்கும். கணவன் / மனைவி, குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். 

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு ஆகஸ்டில் ஏற்படும் கிரகப் பெயர்ச்சி நல்ல பலன்களை அளிக்கும். இந்த வேளையில், உங்களது பணி செய்யும் பாணியும் நடையும் மேம்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. பணி புரியும் இடத்தில் மதிப்பும் அரியாதையும் கூடும் வாய்ப்பு உண்டு. எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் மகிழ்ச்சியை பரிசாக அளிக்கும். ஆகஸ்டில் கிரக ராசி மாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஊக்கங்கள் அல்லது வெகுமதிகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Sun Transit: கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சிக்கலில் சிக்கப் போகும் 3 ராசிகள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News